இந்தி திரையுலகில் வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை தயாரிப்பவர் ஏக்தா கபூர்.
சமீபத்தில் இவர் தயாரித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'THE DIRTY PICTURE'. வித்யா பாலன் அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றார்.
தமிழ் நடிகையான சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'THE DIRTY PICTURE' படத்திற்கு கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பால், ஏக்தா கபூர் தமிழ் திரையுலகிலும் தயாரிப்பாளராக வலம் வர திட்டமிட்டு இருக்கிறாராம்.
ஏக்தா கபூர் தயாரிக்கும் முதல் படத்தினை 'கற்றது தமிழ்' படத்தின் இயக்குனரான ராம் இயக்க இருக்கிறாராம். தற்போது கெளதம் மேனன் தயாரிப்பில் 'தங்க மீன்கள்' படத்தினை இயக்கி வரும் ராம், அப்படத்தினை முடித்துவிட்டு ஏக்தா கபூர் தயாரிக்கும் படத்தினை துவங்குவாராம்.
'கொசுறு' கபாலி : " கோலிவுட்டுக்கு வரதுக்கு முன்னாடி பாலிவுட் இயக்குனர்கள் ராஜ்குமார் சந்தோஷி, கோவிந்த் நிஹ்லானி கிட்ட ராம் வேலை பார்த்திருக்காரு.."
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?