Friday, 17 January 2014

பெங்களூர் அருகே பெற்ற மகளை மிரட்டி கற்பழித்த தந்தை கைது father who molested daughter near Bangalore

- 0 comments

Img பெங்களூர் அருகே பெற்ற மகளை மிரட்டி கற்பழித்த தந்தை கைது father who molested daughter near Bangalore

பெங்களூர், ஜன, 18-

பெங்களூர் அருகே கும்பலுகூடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 55). இவரது மனைவி லீலாவதி. இவர்களுடைய மகள் ஷோபா (17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும், லீலாவதி ஆயத்த ஆடை தொழிற்சாலையிலும் வேலை செய்கிறார்கள். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் லீலாவதி இரவில் தான் வீடு திரும்புவார்.

ஆனால் கல்லூரிக்கு போகும் ஷோபா, மதியமே வீட்டிற்கு வந்து விடுவார். அப்போது முத்துராஜ் வீட்டில் இருப்பது வழக்கம். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் ஷோபாவை, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் முத்துராஜ் வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியே சொன்னால் உன்னையும் (ஷோபா) தாய் லீலாவதியையும் கொலை செய்து விடுவதாக முத்துராஜ் மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் பயந்து போன ஷோபா, தனது தந்தை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இதற்கிடையில், ஷோபாவுக்கு திடீரென்று நேற்று முன்தினம் உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. உடனே தனது மகளை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு லீலாவதி அழைத்து சென்றார்.

அங்கு ஷோபாவை பரிசோதித்த டாக்டர், அவர் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறினார்கள். இதனை கேட்ட லீலாவதி அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ஷோபாவிடம் லீலாவதி துருவி துருவி விசாரித்தார். அப்போது தான் தந்தை முத்துராஜ் கடந்த 3 மாதங்களாக கொலை செய்து விடுவதாக மிரட்டி தன்னை கற்பழித்து வந்ததாகவும், தன்னுடைய கர்ப்பத்திற்கு அவரே காரணம் என்றும் தனது தாயிடம் அழுதபடியே ஷோபா கூறினார். இதை கேட்ட லீலாவதியும், ஆஸ்பத்திரி டாக்டர்களும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி டாக்டர்கள் கும்பலுகூடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனே போலீசார் விரைந்து வந்து மாணவி ஷோபா மற்றும் அவரது தாய் லீலாவதியிடம் விசாரித்தார்கள். அதன்பிறகு, தனது கணவர் முத்துராஜ் மீது கும்பலுகூடு போலீஸ் நிலையத்தில் லீலாவதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது செய்தார்கள்.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற மகளையே மிரட்டி 3 மாதங்களாக தந்தை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger