சின்னப் பசங்களுடன் போய் எப்படி குத்தாட்டம் ஆடுவது! வெட்கப்படும் முன்னாள் கனவுக் கன்னி!
by abtamil
முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி, சின்ன வயசு ஹீரோக்களுடன் குத்தாட்டம் ஆடுவது குறித்த கேள்விக்கு வெட்கப் புன்னகையுடன் பதிலளித்துள்ளார்.
அது சரியாக இருக்குமா என்றும் அவர் கேட்டுள்ளார். முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி பாட்டி ஆன பிறகும் கூட படு ப்யூட்டியாகத்தான் இருக்கிறார். இன்றும் கூட அதே கம்பீர அழகுடன், ரசிகர்களின் விருப்ப நாயகிகள் வரிசையில்தான் இருக்கிறார்.
மும்பையில் நடந்த நீதா லல்லாவின் புதிய ஸ்டோர் திறப்பு விழாவுக்கு வந்த அவரிடம் குத்தாட்டம் குறித்து கேட்கப்பட்டது.
இப்போதெல்லாம் வயதில் சிறிய ஹீரோக்களுடன் முன்னாள் நாயகிகள் குத்தாட்டம் ஆடுகிறார்களே.. அதுகுறித்து என்ன சொல்றீங்க என்று கேட்டபோது ஹேமமாலினி முதல் வெட்கப் புன்னகையைச் சிந்தினார்.
மாதுரி தீட்சித் சமீபத்தில் ஒரு படத்தில் மிகவும் சிறிய வயது ஹீரோவுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியது குறித்து மீண்டும் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்தார் ஹேமா.
பின்னர் அவர் பதிலளிக்கையில் இது வேடிக்கையாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கிறது. சின்ன வயது ஹீரோக்களுடன் ஆடினால் நல்லாவா இருக்கும் என்றார் ஹேமா.
ஆனால் தொடர்ந்து பேசிய ஹேமா, நாங்கள் கலைஞர்கள். தேவைப்பட்டால், அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நானே கூட ஆட வேண்டியது வரலாம்.. யார் கண்டார்கள் என்று முடித்தார்.
Show commentsOpen link