Thursday, 17 October 2013

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் இன்று 2–வது நாளாக ஆய்வு Today in Tirunelveli District mineral sand quarrying 2nd day of study

- 0 comments

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் இன்று 2–வது நாளாக ஆய்வு Today in Tirunelveli District mineral sand quarrying 2nd day of study

Tamil NewsToday,

நெல்லை, அக். 18–

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் சிறப்பு குழுவினர் இன்று 2–வது நாளாக ஆய்வு நடத்தினர்.

தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் நேற்று நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் ஆய்வு பணியை தொடங்கினர்.

128 அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சென்று ஒரே சமயத்தில் சோதனை நடத்தினர். நேற்று கடலோர பகுதிகளான உவரி, குட்டம், கரைசுத்து உவரி, கரைசுத்து புதூர், செட்டிகுளம், கோடாவிளை, காரியாகுளம், லெவிஞ்சிபுரம், இருக்கன்துறை, கூடங்குளம், விஜயாபதி, திருவம்பலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 22 தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சமயமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் கோடாவிளை, காரியாகுளம் பகுதி குவாரிகளில் ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு குவாரியிலும் சர்வேயர் மூலம் அளந்து குறிப்பிட்ட அளவுக்குத்தான் மணல் எடுக்கப்பட்டுள்ளதா, அனுமதியளிக்கப்பட்ட இடத்தில்தான் அள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் நில அளவைத் துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, சுற்றுச்சூழல், நீர்வளத்துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 52 குவாரிகள் உள்ளன. நேற்று 22 குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள குவாரிகளில் இன்றும், நாளையும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

இந்த ஆய்வு பணிக்காக 70 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் அடங்கிய துப்பாக்கியுடன் கூடிய 7 போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர். மேலும் குவாரிகள் தோறும் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாது மணல் முறைகேடு தொடர்பாக மீனவ கிராமங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என்று கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன் சிறப்பு குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே தாதுமணல் குவாரிகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் 500–க்கும் மேற்பட்டோர், தாதுமணல் ஆலைகளை திறக்க அனுமதி வழங்க கோரி நேற்று ககன்தீப்சிங் பேடியை சந்தித்து மனு கொடுத்தனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

பள்ளிக்கூடம் பிடிக்காததால் தற்கொலைக்கு முயன்றேன்: காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி வாக்குமூலம் self immolations Student statement did not like school tried to commit suicide

- 0 comments

பள்ளிக்கூடம் பிடிக்காததால் தற்கொலைக்கு முயன்றேன்: காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி வாக்குமூலம் self immolations Student statement did not like school tried to commit suicide

Tamil NewsToday,

காஞ்சீபுரம், அக்.18-

காஞ்சீபுரம் அருகே தூசியை அடுத்த அப்துல்லாபுரம் தோப்பு தெருவில் வசிப்பவர் கன்னியப்பன். இவருடைய மகள் சினேகா(வயது 11). இவள், பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 15-ந்தேதி காலை பள்ளிக்கூடம் சென்ற சினேகா, தனது பாட புத்தக பையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அரை லிட்டர் மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியை மறைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. பள்ளி இடைவேளையின் போது மண்எண்ணெய் பாட்டில், தீப்பெட்டியுடன் கழிவறைக்கு சென்ற சினேகா, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாள்.

உடல் முழுவதும் எரிந்த தீயுடன் அலறியபடி வெளியே ஓடி வந்தாள். உடனடியாக அவளை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாணவி சினேகா, இந்த வருடம்தான் இந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து உள்ளாள். இந்த நிலையில் அவள் எதற்காக தீக்குளித்தாள்? என்பது தெரியவில்லை. இதுபற்றி பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பள்ளிக்கூடம் அவளுக்கு பிடிக்கவில்லையா? அல்லது படிப்பு சரிவர வரவில்லையா? அல்லது வீட்டில் பெற்றோர்கள் திட்டினார்களா? ஆசிரியர்கள் கண்டித்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவி தீக்குளித்த சம்பவத்தை தொடர்ந்து 15-ந்தேதி அரசினர் மகளிர் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மறுநாள் பக்ரீத் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்த அனைத்து மாணவிகளின் புத்தக பைகளையும் நன்றாக சோதனை செய்த பின்னரே அவர்களை வகுப்பறைக்குள் செல்ல ஆசிரியர்கள் அனுமதித்தனர்.

இதற்கிடையில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சினேகாவிடம், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் மாணவி கூறி இருப்பதாவது:-

எனது பெற்றோர் என்னை, காஞ்சீபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்தனர். எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் எனது பெற்றோர், உன்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியாது. நீ படித்தால் படி, இல்லாவிட்டால் இரு என்று கண்டிப்புடன் கூறி விட்டனர். எனவே பள்ளிக்கூடம் பிடிக்காமல் நான், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்.

இவ்வாறு அந்த மாணவி, வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

கூடங்குளத்தில் மூன்றாம், நான்காம் அணு உலை அமைக்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம் India Russia to sign new pacts on Kudankulama reactors

- 0 comments

கூடங்குளத்தில் மூன்றாம், நான்காம் அணு உலை அமைக்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம் India Russia to sign new pacts on Kudankulama reactors

Tamil NewsToday,

புதுடெல்லி, அக். 17-

ரஷ்யாவின் உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் உலையின்  பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் உற்பத்தி தொடங்க உள்ளது. இரண்டாம் அணுஉலையின் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கூடங்குளத்தில் மூன்றாம் மற்றும் நான்காம் அணு உலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் இறங்கியுள்ளன. அடுத்த வாரம் ரஷ்யாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்கும், ரஷ்யா அதிபர் புதினும் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேறுவதற்கு முன்பாக அணு உலையின் சாதக பாதகங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1988-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும், ரஷ்யப் பிரதமர் கார்ப்பசேவும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜப்பான் அணு உலை விபத்தை தொடர்ந்து, கூடங்குளம் அணுஉலைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

மும்பையில் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் புகைப்பட நிபுணர் கோர்ட்டில் மயங்கி விழுந்தார் Woman Photographer unconsciousness in court affected by 5 people gang in Mumbai

- 0 comments

மும்பையில் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் புகைப்பட நிபுணர் கோர்ட்டில் மயங்கி விழுந்தார் Woman Photographer unconsciousness in court affected by 5 people gang in Mumbai

Tamil NewsToday,

மும்பை, அக்.18-

மும்பையில் பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி பத்திரிகை பெண் புகைப்பட நிபுணர் 5 பேர் கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு இளம் குற்றவாளி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த மாதம் 19-ந்தேதி போலீசார் 600 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். நீதிபதி ஷாலினி முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று 3-வது நாளாக நீதிபதி முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது இளம் குற்றவாளி தவிர விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலீம் அன்சாரி சிராஜ் ரெஹ்மான் ஆகிய 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் புகைப்பட நிபுணரும் ஆஜரானார். அவருடன் தாயாரும் கோர்ட்டுக்கு வந்திருந்தார். கோர்ட்டில் ரகசிய விசாரணை நடந்தது.

விசாரணையின் போது குற்றவாளிகளை பெண் புகைப்பட நிபுணர் அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து அவர் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி விவரித்துக்கொண்டு இருந்தார். 4 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் கோர்ட்டு அறையில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக புகைப்பட நிபுணர் ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே வழக்கு விசாரணையை இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) நீதிபதி ஷாலினி தள்ளிவைத்தார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

தங்கம் விலை சவரனுக்கு 376 ரூபாய் உயர்வு Gold price hike of Rs 376 per pound

- 0 comments

தங்கம் விலை சவரனுக்கு 376 ரூபாய் உயர்வு Gold price hike of Rs 376 per pound

Tamil NewsToday,

சென்னை, அக். 17-

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இந்தியாவிலும் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. சென்னையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே படிப்படியாக அதிகரித்த தங்கம் விலை, பிற்பகலில் சவரனுக்கு 376 ரூபாய் அதிகரித்தது.

22 கேரட் தங்கம் சவரனுக்கு 376 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.23192 ஆக இருந்தது. கிராமுக்கு 47 ரூபாய் அதிகரித்து 2899 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதேபோல் 24 காரட் தங்கம் கிராமுக்கு 51 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் 3101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்தது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.1215 உயர்ந்து, கிலோ ரூ.48240 ஆக இருந்தது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.51.60 ஆக இருந்தது.

...
Show commentsOpen link

[Continue reading...]

மேலப்பாளையத்தில் ஜெனரேட்டர் புகையில் சிக்கி உயிரிழந்த புதுமண தம்பதி smoke generator trapped couple dead in melapalayam

- 0 comments

மேலப்பாளையத்தில் ஜெனரேட்டர் புகையில் சிக்கி உயிரிழந்த புதுமண தம்பதி smoke generator trapped couple dead in melapalayam


நெல்லை பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது சுலைமான் (வயது28). சென்னையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மேலப்பாளையம் பங்களாப்பா நகரை சேர்ந்த கதீபா குல்னாஸ் (19) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

பக்ரீத் கொண்டாடுவதற்காக முகமது சுலைமான் மனைவியுடன் நேற்று மேலப்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்தார். ஆடு வெட்டி விருந்து சாப்பிட்டு விட்டு நேற்று இரவு 11 மணி அளவில் மாடி அறையில் படுக்க சென்றனர். அப்போது மின்சாரம் தடைபட்டதால், மண்எண்ணை ஜெனரேட்டரை இயக்கி படுத்து தூங்கினர்.

மின்சாரம் வந்த பின்னர் கதீபாவின் தந்தை இன்று அதிகாலை 3 மணி வரை ஜெனரேட்டர் ஓடியதால் ஆதம்பாலா மாடிக்கு சென்று ஜெனரேட்டரை 'ஆப்' செய்ய கதவை தட்டினார். நீண்ட நேரம் கதவை தட்டியும் புதுமண தம்பதிகள் கதவை திறக்கவில்லை.

இதனால் உறவினர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு படுக்கையில் கணவன் –மனைவி இருவரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறையின் ஜன்னல் கதவுகள் அனைத்தையும் அடைத்து விட்டு அவர்கள் படுத்ததால், ஜெனரேட்டர் புகையில் சிக்கி மயக்கம் அடைந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திருமணமான 37 நாட்களிலேயே கணவன்–மனைவி இருவரும் இறந்ததால் உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர் ராஜமன்னர், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

[Continue reading...]

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் மரணம் social worker sarojini varadappan death

- 0 comments

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் மரணம் social worker sarojini varadappan death

Tamil NewsToday,

சென்னை, அக். 17–

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் உள்ள பக்தவச்சலம் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த சரோஜினி வரதப்பனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை 7.50 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சரோஜினி வரதப்பன் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனின் பெரியம்மா ஆவார். டெல்லியில் இருந்த ஜெயந்தி நடராஜனுக்கு சரோஜினி வரதப்பன் மறைவு செய்தி தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் விமானம் மூலம் சென்னை விரைந்தார்.

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் 1921–ம் ஆண்டு செப்டம்பர் 21–ந்தேதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பக்தவச்சலம் தமிழக முதல்–அமைச்சராக 1963–ம் ஆண்டு முதல் 1967–ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

சரோஜினி வரதப்பன் இளமையிலேயே தனது உறவினரான வரதப்பனை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பின்பும் படிப்பை தொடர்ந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி மூலம் பொலிடிகல் சயின்ஸ்–ல் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் வைஷ்ணவிசம் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.

சிறு வயது முதலே சமூக சேவையில் நாட்டம் கொண்டவர். ஏராளமான சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தனது தாயார் ஞானசவுந்தராம்பாளுடன் இணைந்து ''பெண்கள் இந்தியா கூட்டமைப்பு'' மூலம் பல்வேறு சமூக சேவையாற்றி வந்தார்.

அதன்பிறகு பெண்கள் இந்தியா கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பேற்றார். தொடக்கத்தில் 4 கிளைகள் மட்டுமே இருந்த கூட்டமைப்புக்கு நாடு முழுவதும் 76 கிளைகள் தொடங்கப்பட்டது. தனது 80–வது வயதில் சமூக சேவை மற்றும் சுவாமி நாராயண் இயக்கத்திற்காக பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.

இசை மீது ஆர்வம் கொண்டவர். பாரூர் சுந்தரம் ஐயரிடம் முறைப்படி இசை பயின்றார். காங்கிரஸ் மாநாடுகளில் இறை வணக்கப் பாடல்கள் பாடியுள்ளார். இந்தி மொழியிலும் புலமை பெற்றவர்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger