Thursday 17 October 2013

பள்ளிக்கூடம் பிடிக்காததால் தற்கொலைக்கு முயன்றேன்: காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி வாக்குமூலம் self immolations Student statement did not like school tried to commit suicide

பள்ளிக்கூடம் பிடிக்காததால் தற்கொலைக்கு முயன்றேன்: காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி வாக்குமூலம் self immolations Student statement did not like school tried to commit suicide

Tamil NewsToday,

காஞ்சீபுரம், அக்.18-

காஞ்சீபுரம் அருகே தூசியை அடுத்த அப்துல்லாபுரம் தோப்பு தெருவில் வசிப்பவர் கன்னியப்பன். இவருடைய மகள் சினேகா(வயது 11). இவள், பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 15-ந்தேதி காலை பள்ளிக்கூடம் சென்ற சினேகா, தனது பாட புத்தக பையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அரை லிட்டர் மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியை மறைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. பள்ளி இடைவேளையின் போது மண்எண்ணெய் பாட்டில், தீப்பெட்டியுடன் கழிவறைக்கு சென்ற சினேகா, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாள்.

உடல் முழுவதும் எரிந்த தீயுடன் அலறியபடி வெளியே ஓடி வந்தாள். உடனடியாக அவளை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாணவி சினேகா, இந்த வருடம்தான் இந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து உள்ளாள். இந்த நிலையில் அவள் எதற்காக தீக்குளித்தாள்? என்பது தெரியவில்லை. இதுபற்றி பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பள்ளிக்கூடம் அவளுக்கு பிடிக்கவில்லையா? அல்லது படிப்பு சரிவர வரவில்லையா? அல்லது வீட்டில் பெற்றோர்கள் திட்டினார்களா? ஆசிரியர்கள் கண்டித்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவி தீக்குளித்த சம்பவத்தை தொடர்ந்து 15-ந்தேதி அரசினர் மகளிர் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மறுநாள் பக்ரீத் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்த அனைத்து மாணவிகளின் புத்தக பைகளையும் நன்றாக சோதனை செய்த பின்னரே அவர்களை வகுப்பறைக்குள் செல்ல ஆசிரியர்கள் அனுமதித்தனர்.

இதற்கிடையில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சினேகாவிடம், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் மாணவி கூறி இருப்பதாவது:-

எனது பெற்றோர் என்னை, காஞ்சீபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்தனர். எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் எனது பெற்றோர், உன்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியாது. நீ படித்தால் படி, இல்லாவிட்டால் இரு என்று கண்டிப்புடன் கூறி விட்டனர். எனவே பள்ளிக்கூடம் பிடிக்காமல் நான், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்.

இவ்வாறு அந்த மாணவி, வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger