Thursday, 22 August 2013

வருண்குமார் மேல் மேலும் ஒரு வழக்கு Meet legal cases varunkumar interview

- 0 comments
 வருண்குமார் மேல் மேலும் ஒரு வழக்கு

வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன்: வருண்குமார் பேட்டி Meet legal cases varunkumar interview



திருப்பத்தூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்போவதாக பிரியதர்ஷினி அறிவித்துள்ளது குறித்து வருண்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

எனது சொந்த ஊர் திருச்சி தில்லை நகர். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் போலீஸ் அகடாமியில் பயிற்சியில் இருக்கிறேன்.

திருப்பத்தூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கபட்டதற்கான உத்தரவு எனக்கு இன்னமும் வந்து சேரவில்லை. ஆர்டர் வந்த உடன் அடுத்த வாரத்தில் பொறுப்பேற்க உள்ளேன்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யபட்டதை எதிர்த்து பிரியதர்ஷினி என் மீது வழக்கு தொடர்வதாக அறிவித்துள்ளது எனக்கு தெரியாது. அவர் வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி வழக்குகளை சந்திக்க தயார்.

ஏற்கனவே அதற்கான ஆதாரங்களை டெல்லி வரதட்சணை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடமும் சென்னை சென்ட்ரல் கிரைம் பிராஞ் போலீசாரிடம் வழங்கி உள்ளேன்.

இதனால் எனக்கு எந்த வித பயமும் இல்லை என்று கூறினார்.
[Continue reading...]

கூடுவாஞ்சேரி யில் குடிசைகள் எரிந்து வீடுகள் நாசம் ten house burnt near Guduvancheri

- 0 comments
 கூடுவாஞ்சேரி யில் குடிசைகள் எரிந்து வீடுகள் நாசம்

நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சி சார்பில் திரவுபதி அம்மன் கோவில் தெரு அருகே மேல் நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் அங்கேயே குடிசை போட்டு தங்கியுள்ளனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger