புதுடெல்லி, அக். 18-
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கறுப்பு பண மீட்பு குறித்த வழக்கில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி கறுப்பு பண முதலாளிகளை காப்பாற்ற முயல்வதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழியையே பா.ஜ.க.வும் பின்பற்றுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங் கூறுகையில்,
'தேர்தல் பிரச்சாரத்தின் போது கறுப்பு பணத்தை மீட்டுக்கொண்டு வருவதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 3 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி வாக்களித்தார்.
ஆகையால் பிரதமர் மோடி தனது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் அல்லது பிரதமர் பதவியை விட்டு அவர் விலகவேண்டும்" என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?