வேலூர், அக்.18–
ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமையான இன்று காலை 7.30 மணிக்கு ஆண்கள் ஜெயிலில் இருந்த முருகனை ஆயுதப்படை டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சுமார் அரை மணி நேரம் முருகன் – நளினி சந்திப்பு நடந்தது. இதையடுத்து மீண்டும் பாதுகாப்புடன் முருகனை அழைத்து வந்த போலீசார் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?