செம்பட்டி,அக்.18–
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலையை முடக்க கூடாது. அதனை 150–நாளாக உயர்த்திட வேண்டும். கூலி ரூ.167 கொடுத்திட வேண்டும். அங்கன்வாடி நிர்வாகத்தை தனியாருக்கு விற்கக்கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னதாக ஆத்தூர் யூனியன் அலுவலகம் முன்பு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் பிச்சைமணி தலைமையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, கஞ்சிக் கலயத்தை உடைத்து பேசினார்.
மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வனஜா, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் காமாட்சி, ஜெயராஜ், நெடுஞ்செழியன், செந்தில்குமார் மற்றும் விவசாய சங்க ஒன்றியத் துணைத்தலைவர் ஆர். சுப்பிரமணி, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?