சென்னை, அக். 18–
குன்றத்தூர் கெலித்திப் பேட்டையை சேர்ந்தவர் வைரம். ரவுடி. இவர் மீது குன்றத்தூர், காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வைரம் அவரது கூட்டாளிகள் குமார், ஆறுமுகம் ஆகிய 3 பேர் ஒரு காரில் சிறு களத்தூர் பஸ் நிலையம் அருகே சுற்றி கொண்டு இருந்தனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் காரை நிறுத்தும்படி கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி வைரம், குமார், ஆறுமுகம் ஆகிய 3 பேர் கத்தியால் சப்–இன்ஸ்பெக்டர் சுரேசை குத்தி கொல்ல முயன்றனர். பின்னர் காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடிகள் வைரம், குமார், ஆறுமுகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கத்தி, அருவாள், கார், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?