நடிகை ஹன்சிகா தற்போது ஆம்பள என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் ஹன்சிகா, விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஊட்டியின் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்தது. அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த தேனீ ஹன்சிகாவின் கையில் கடித்தது.
அவர் வலியால் அவதிப்பட்டார். என்றாலும் அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் கையில் வீக்கம் ஏற்பட்டது. சிவந்து காணப்பட்டது. உடனே படப்பிடிப்பு குழுவினர் அவரை ஓய்வு எடுக்குமாறு கூறியும் அவர் மறுத்து விட்டார்.
என்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது, எனவே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துங்கள் என்று கூறி நடித்து முடித்துக் கொடுத்தார். சிறிது நேரத்தில் வீக்கம் குறைய ஆரம்பித்தது.
ஆம்பள படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹன்சிகா நாளை ஐதராபாத் செல்கிறார். அங்கு விசாகப்பட்டினம் புயல் நிவாரண நிதி திரட்ட நடைபெறும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மும்பை செல்கிறார். அங்கு அவர் இந்த முறை தீபாவளி கொண்டாடுகிறார். தான் தத்து எடுத்து வளர்த்து வரும் 30 குழந்தைகளுடன் தீபாவளியை குதூகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
தீபாவளி முடிந்ததும் சென்னை திரும்பும் ஹன்சிகா அடுத்து தான் நடிக்கும் ''ரோமியோ ஜூலியட்'' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?