சிவகங்கை, அக். 18–
தமிழகத்தில் தொடங்கி உள்ள வடகிழக்கு பருவ மழை பல்வேறு மாவட்டங்களிலும் விடாது பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்தே வருகிறது.
நேற்று விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலையும் சிவகங்கை பகுதியில் மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் மழை தூறலாகவே உள்ளது. மதுரையிலும் காலையில் லேசான மழை பெய்தது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?