சென்னை, அக். 18–
சென்னை மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில் பொது சுகாதாரத்துறை 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் மழை காலத்தை முன்னிட்டு கொசுக்களால் உருவாகும் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா ஆகிய நோய்களை தடுக்கும் வகையில் முதிர் கொசுக்கள் மற்றும் கொசு புழுக்கள் ஒழிக்கும் பணி நேற்று நடைபெற்றது.
இப்பணியின் போது 15 லாரிகள் மூலம் 10.5 டன் டயர்கள் மற்றும் 200 மூன்று சக்கர வண்டிகளை பயன்படுத்தி அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி மருத்துவமனைகள் ஆகியவற்றிலும், தெருக்களிலும், வீடுகளிலும் உள்ள 6.130 டன் தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டன.
பள்ளிகளிலும் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு புகை மருந்து அடிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் இப்பணியின்போது டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா ஆகிய நோய்களிடமிருந்து பாதுகாத்து கொள்வதற்கும், கொசுகள் உற்பத்தி ஆகாமல் இருப்பதற்கும் நல கல்வி அளிக்கப்பட்டது. மேலும், இப்பணி தொடர்ந்து நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?