வேலூர், அக்.18–
வேலூர் சைதாப்பேட்டை லாங்குபஜார் மெயின்ரோட்டில் மரசாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இதன் பின்புறம் கட்டில் மெத்தை, சோபா உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பஞ்சு குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று இரவு 8 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதை கண்ட பக்கத்து கடைகாரர்கள் தண்ணீரை ஊற்றி, தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய உதவிஅலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குடோனில் இலவம் பஞ்சு, தேங்காய்நார் போன்ற எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள் இருந்தால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் முற்றிலும் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சேதமதிப்பு தெரியவில்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?