ஆம்பூர், அக்.18–
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக வாணியம்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பழனி, காமராஜ் மற்றும் போலீசார் அந்த வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் 35 லிட்டர் கொண்ட 225 கேன்களில் ரூ.10 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று, எரிசாராய கேன்களை பார்வையிட்டார். பிடிபட்ட எரிசாராயத்தை வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் உரிமையாளர் மகேஸ்வரியை வலைவீசி தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?