மும்பை, அக். 18-
கறுப்பு பண விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறியது.
மத்திய அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விளக்கம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதை ஏற்கமுடியாது.
இது குறித்த விவரங்களை தெரிவிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளதென்றால் தேர்தலில் வாக்குறுதி அளிக்கும் போதே அதை யோசித்திருக்கவேண்டும். மோடி அரசின் ஐந்து மாத ஆட்சியில் லோக்பால் தொடர்பான நியமனங்களோ, கறுப்ப பண பரிமாற்றம் குறித்தோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தேர்தல் தந்திரம் என்று மக்கள் சந்தேகப்பட தொடங்கியுள்ளனர்.
தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து பேசுபவரால் நாட்டில் எந்த மாற்றங்களையும் செய்யமுடியாது என மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். செயல்பாடுகள் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசு கறுப்பு பண விவகாரத்தில் பின் வாங்கினால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு ஹசாரே தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?