Monday, 14 October 2013

பக்ரீத் திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து Jayalalitha wishes to bakrid festival

- 0 comments

பக்ரீத் திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து Jayalalitha wishes to bakrid festival

சென்னை, அக். 15-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உருவங்களையோ, செல்வங்களையோ காணாமல் உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே இறைவன் காண்கிறான்; எனவே உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, சாதி,

மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம். தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும்,

ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

...

shared via

[Continue reading...]

அல்லாஹ் என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது: மலேசியா கோர்ட் தீர்ப்பு Malaysian court says Non Muslims cannot use Allah

- 0 comments

அல்லாஹ் என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது: மலேசியா கோர்ட் தீர்ப்பு Malaysian court says Non Muslims cannot use Allah

கோலாலம்பூர், அக்.15-

அல்லாஹ் என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத பிறமதத்தினர் பயன்படுத்த முடியாது என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியா நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் தங்களது கடவுள்களை குறிக்கும் வகையில் மலாய் மொழியில் அல்லாஹ் என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சொல் அரபு மொழியில் இருந்து மலாய் மொழிக்கு மருவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மலாய் மொழியில் வெளியாகும் கத்தோலிக்க கிருஸ்துவ நாளிதழான தி ஹெரால்ட் கடந்த 2009-ம் ஆண்டு கடவுளை குறிப்பிட அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, மலேசியாவில் பெரும் கலவரம் வெடித்தது. மசூதிகள் மற்றும் கிருஸ்துவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக கீழ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது.

மலேசியா பைபிள்களில் கூட கடவுளை குறிப்பிடுகையில் அல்லாஹ் என்று கூறப்பட்டுள்ளதாக தி ஹெரால்டு நாளிதழ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடினார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அந்த சொல்லை மலேசியா என்ற தனிநாடு உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே பல்வேறு மதத்தினரும் பயன்படுத்தி வந்துள்ளதால், அதேபோன்று இனியும் பயன்படுத்த தடையில்லை என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மலேசிய அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனுவின் மீது நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அல்லாஹ் என்ற சொல், தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டும்.

கிருஸ்துவ மதத்தின் நம்பிக்கையின்படி இந்த சொல் அம்மதம் சார்ந்த ஒரு பகுதியாக காணப்படவில்லை. எனவே, முஸ்லிம்கள் மட்டுமே இந்த சொல்லை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இதன் பயன்பாடு சமூகத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாகி விடும் என்று நீதிபதி முஹம்மது அபாண்டி அலி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

ஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல் aarambam ajith movie latest news

- 0 comments

ஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல்: தீபாவளிக்கு ரிலீசாகுமா?
by abtamil
Tamil newsYesterday,

தீபாவளி சரவெடியில் வெடிப்பதற்கு தயாராக இருந்த அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படம் ஆரம்பம்.

ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கும் இப்படத்தினை விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கிறார்.

வருகிற 31ம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆரம்பம் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் படத்துக்கு எதிரான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி 'கேடி' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ. 1.50 கோடி கடன் வாங்கினார்.

இந்தப் பணத்தை 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை.

இந்நிலையில் அவர் ஆரம்பம் படத்தை தயாரித்து வெளியிடுவதாக அறிந்தோம்.

என் மகனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 4 கோடியே 60 லட்சம் தந்த பிறகே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு ஏ.எம்.ரத்தினத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஏ.எம்.ரத்னம், இந்த படத்தின் தயாரிப்பாளர் நான் இல்லை என்றும் ஏ.ரகுராம் என்பவர்தான் சத்ய சாய் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கிறார் என பதிலளித்துள்ளார்.

Show commentsOpen link

[Continue reading...]

இந்திய மாணவி ஆஸ்திரேலியாவில் மாயம்: ஆற்றங்கரையில் உடமைகள் கிடந்ததால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை Indian student goes missing in australia

- 0 comments

இந்திய மாணவி ஆஸ்திரேலியாவில் மாயம்: ஆற்றங்கரையில் உடமைகள் கிடந்ததால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை Indian student goes missing in australia

மெல்போர்ன், அக்.15-

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடாஷா நரங்(30) என்பவர் ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் என்ற தலைப்பில் முனைவருக்கான (பி.எச்.டி) ஆராய்ச்சி படிப்பில் ஈடுப்பட்டிருந்தார்.

தனது கணவருடன் டாஸ்மானியாவில் தங்கி படித்துவந்த அவரை கடந்த 4ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிலரை போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், டாஸ்மானியாவில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் நடாஷா நரங்கின் சில உடமைகளை போலீசார் கண்டு பிடித்தனர்.

இதனையடுதது, மீட்பு படையினர் மூலம் ஆற்றில் முழ்கியும், ஷெலிகாப்டரில் பறந்தபடியும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் நேற்று வரை அவரைப் பற்றி எந்த புதிய தகவலும கிடைக்கவில்லை.

படிப்பு சார்ந்த மன அழுத்தம் காரணமாக எங்காவது ஓய்வெடுப்பதற்காக அவர் தனிமையை நாடி சென்றிருக்கலாம் என டாஸ்மானியாவில் வசிக்கும் சில சீக்கியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

...

shared via

[Continue reading...]

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல் BJP demands PM statement on Pak ceasefire violations

- 0 comments

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல் BJP demands PM statement on Pak ceasefire violations

புதுடெல்லி, அக். 14-

பாகிஸ்தான்  ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாலை நேரம் காஷ்மீர் பூஞ்ச் எல்லையில் பலத்த ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் துணையுடன் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ரோந்து சென்ற இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியை தாண்டி இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று சம்பா செக்டாரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொடர் தாக்குதல் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ வழிவகுக்கிறது. பாகிஸ்தானின் ஆதாரப்பூர்வமான இந்த நடவடிக்கை மிகவும் கவலையளிக்கிறது.

கெரன் செக்டரில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடந்த பதிலடி நடவடிக்கைகளின் போது ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மற்ற ஒருவர் படுகாயமடைந்தார் என்று ராணுவமும் அரசும் கூறியுள்ளது.

நியூயார்க்கில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசிகிற வேளையில் இங்கு கெரன் செக்டரில் தீவிரவாதிகள் ஊடுருவல் நடத்துகின்றனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்கள், இந்த அத்துமீறலை சமாளிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

[Continue reading...]

சூதுகவ்வும் படம் ஹிந்தியில் தயாராகப் போகிறது soothukavvum in hindi

- 0 comments

சூதுகவ்வும் படம் ஹிந்தியில் தயாராகப் போகிறது

தமிழில் வசூலை வாரிக்குவித்த சூதுகவ்வும் படம் ஹிந்தியில் தயாராகப் போகிறது. ஆனால் இந்த ஹிந்தி வெர்ஷனில் விஜய் சேதுபதிக்குப் பதிலாக இம்ரான்கான் நடிக்கிறாராம்.

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'சூதுகவ்வும்' படத்தை தமிழில் நலன் குமாரசாமி டைரக்ட் செய்திருந்தார். தமிழில் வசூலை அள்ளிய இந்தப்படத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து ஹிந்தி மற்றும் மலையாள ரிமேக் உரிமையை வாங்கியிருந்தார் நடிகர் அருண்பாண்டியன்.photo 2 150×150 ஹிந்திக்குப் போகிறது சூதுகவ்வும் : ஆனா ஹீரோ விஜய் சேதுபதி இல்லியாம்!

இந்நிலையில் சூது கவ்வும் படத்தை ஹிந்தி டைரக்டர் ரோஹித் ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து அருண்பாண்டியன் தனது ஏ.பி.குரூப்ஸ் கம்பெனி மூலம் ஹிந்தியில் தயாரிக்கிறார். டைரக்டர் ரோஹித் ஷெட்டி ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை டைரக்ட் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த வெர்ஷனில் ஹீரோ விஜய் சேதுபதி இல்லையாம். அவருக்குப் பதிலாக இம்ரான் கான் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா தாஸ் மற்றும் பலர் இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். அடுத்த வருடம் ஆரம்பமாக இருக்கும் இந்தப்படத்தை ஷமித் அமித் டைரக்ட் செய்வார் எனத்தெரிகிறது.

அதேபோல மலையாளத்திலும் ஏ.பி.குரூப்ஸ் என்ற பேனரில் நடிகர் அருண்பாண்டியன் இந்தப்படத்தை ரீமேக் செய்கிறார்.

The post

[Continue reading...]

நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா பிரச்சாரமா? காங்கிரஸ் மறுப்பு Priyanka campaign against Narendra Modi no says Congress

- 0 comments

நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா பிரச்சாரமா? காங்கிரஸ் மறுப்பு Priyanka campaign against Narendra Modi no says Congress

புதுடெல்லி, அக். 14-

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுகையில், "பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது. தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் மட்டுமே பிரியங்கா போட்டியிடுவார். மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்த செய்திகள் உள்ளன" என்றார்.

கடந்த முறை நடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி, தனது பிரச்சாரத்தை மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

[Continue reading...]

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெடிவிபத்து: விமானங்கள் தாமதம் Los Angeles airport bombings Flights delayed

- 0 comments

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெடிவிபத்து: விமானங்கள் தாமதம் Los Angeles airport bombings Flights delayed

லாஸ் ஏஞ்சல்ஸ், அக். 14-

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் உள்ள பணியாளர்கள் குளியலறையில் நேற்று மாலை திடீரென பலமான வெடிசத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து சென்று சோதனையிட்டபோது பாட்டில் ஒன்று வெடித்திருந்ததைக் கண்டறிந்தனர்.

உலர் ஐஸ் நிரப்பப்பட்டிருந்த பாட்டிலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தினால் அந்த வெடிவிபத்து நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆயினும், பாதுகாப்புக் கருதி விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் மூடப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் பலத்த சோதனைக்குள்ளாக்கப்பட்டது என்று புலனாய்வுத்துறை செய்தித் தொடர்பாளர் லாரா எமில்லர் தெரிவித்தார்.

வெடிவிபத்து நடந்த குளியலறை விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்ததால் அங்கு பொதுமக்களால் வரமுடியாது. எனவே, ஐஸ் நிரப்பப்பட்ட பாட்டில் அங்கு எப்படி வந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக லாரா கூறினார்.

இதனிடையில், பயணிகளின் உடமைகளுக்கு நடத்தப்படும் பாதுகாப்புத் திரையிடல் சோதனைனையும் விமான நிலைய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியதால் அந்த விமான நிலையத்திலிருந்து கிளம்பவேண்டிய நான்கு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன என்று விமான நிலைய போலீஸ் சார்ஜென்ட் கர்லா ஒடிஸ் தெரிவித்தார்.

...

shared via

[Continue reading...]

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி மீன்கள் பறிமுதல்: சிங்கள மீனவர்கள் மீண்டும் அட்டூழியம் fishermen attack fish seized near Vedaranyam

- 0 comments

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி மீன்கள் பறிமுதல்: சிங்கள மீனவர்கள் மீண்டும் அட்டூழியம் fishermen attack fish seized near Vedaranyam

வேதாரண்யம், அக். 14–

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

மேலும் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்லும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. தற்போது சிங்கள மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

கடந்த 11–ந்தேதி இரவு வேதாரண்யத்தை சேர்ந்த மீனவரை அரிவாளால் வெட்டி மீன்கள், வலைகளை பறித்து சென்றனர்.

இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:–

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த செம்பியன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரை சேர்ந்த கண்ணையன், தங்கத்துரை, தணிகாசலம், சுப்பிரமணியன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதே போல் காந்திமதி என்பவருக்கு சொந்தமான படகில் அவரது கணவர் ரத்தினவேல், பாலகிருஷ்ணன், செம்பியன் ஆகியோரும், விஜயேந்திரனுக்கு சொந்தமான படகில் 4 பேரும், மற்றொரு படகில் 4 பேரும் மீன்பிடித்து கொண்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

கோடியக்கரைக்கு தென் கிழக்கே வந்து கொண்டிருந்த போது இலங்கையை சேர்ந்த மீனவர்கள் தமிழக மீனவர்களை வழிமறித்தனர். பின்னர் தமிழக மீனவர்களை கட்டையால் தாக்கினார்கள்.

அவர்கள் வைத்திருந்த மீன்கள் மற்றும் படகில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் தமிழக மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது.

வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, சிங்கள மீனவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவது மீனவ கிராமங்களில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

...

shared via

[Continue reading...]

மேலும் 2 வாரம் பரோலை நீட்டிக்க நடிகர் சஞ்சய்தத் மனு Sanjay Dutt to extend the 2 week parole petition

- 0 comments

மேலும் 2 வாரம் பரோலை நீட்டிக்க நடிகர் சஞ்சய்தத் மனு Sanjay Dutt to extend the 2 week parole petition

1993–ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சஞ்சய்தத் ஏற்கனவே 18 மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டார்.

மீதியுள்ள 42 மாத கால ஜெயில் தண்டனையை அனுபவிக்க கடந்த மே 16–ந் தேதி சரண் அடைந்தார். முதலில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த அவர் பின்னர் பாதுகாப்பு கருதி புனே ஏர்வாடா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக பரோலில் விடுவிக்க கோரி சஞ்சய்தத் கடந்த 1–ந் தேதி மனு செய்தார்.

இதை தொடர்ந்து அவர் 14 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் பரோலை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க கோரி சஞ்சய்தத் மனுதாக்கல் செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக நீட்டிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

...

shared via http://feedly.com

[Continue reading...]

அமெரிக்க பொருளாதாரம் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: உலக வங்கி The US economy going towards risk World Bank

- 0 comments

அமெரிக்க பொருளாதாரம் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: உலக வங்கி The US economy going towards risk World Bank

வாஷிங்டன்,அக்டோபர் 14-

அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேறாததால் பல அரசு துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக வங்கி தலைவர் ஜிம் யெங் கிங் கூறியுள்ளார்.

அபாயத்தை தடுக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி விவாதித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் கிம் கூறியுள்ளார். கடன் வரம்பு பிரச்சினைக்கு அமெரிக்கா தீர்வு காணாத பட்சத்தில், அது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் உலக வங்கித் தலைவர் எச்சரித்தார்.

அமெரிக்க அரசின் கடன் வரம்பு வரும் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் அரசின் செலவினங்களுக்கு நிதி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக அமெரிக்காவின் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இப்பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளது.

...

shared via

[Continue reading...]

‘வணக்கம் சென்னை’ படத்துக்கு வரிச்சலுகை இல்லை vanakkam chennai

- 0 comments

'வணக்கம் சென்னை' படத்துக்கு வரிச்சலுகை இல்லை

By udayanithi

எதிர்பார்த்தது போலவே 'வணக்கம் சென்னை' படத்துக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்காததால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி டைரக்‌ஷனில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் நேற்று ரிலீஸான படம் தான் 'வணக்கம் சென்னை'. கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தயாரித்திருந்தார்.

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யு'  சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார்கள். பிறகு வரிச்சலுகைக்காக தமிழக அரசுக்கு படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்கவில்லை.

வரிச்சலுகை கிடைக்காவிட்டாலும் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும் என்று அறிவித்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்தும் விட்டார்கள்.

இதற்கிடையே "'வணக்கம் சென்னை' படத்திற்கு எதிர்பார்த்தது போலவே வரிச்சலுகை கிடைக்கவில்லை. வரிச்சலுகை கொடுக்கலாம் என்று கையெழுத்திட்ட அதிகாரியைக் கூட ட்ரான்ஸ்பர் செய்து விட்டார்கள். இதனால் தமிழக அரசின் இந்த ஓரவஞ்சனையை எதிர்த்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறேன்" என்று அதிரடியாகக் கூறியுள்ளார் உதயநிதி.

The post 'வணக்கம் சென்னை' படத்துக்கு வரிச்சலுகை இல்லை appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Visit website

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger