நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா பிரச்சாரமா? காங்கிரஸ் மறுப்பு Priyanka campaign against Narendra Modi no says Congress
புதுடெல்லி, அக். 14-
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுகையில், "பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது. தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் மட்டுமே பிரியங்கா போட்டியிடுவார். மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்த செய்திகள் உள்ளன" என்றார்.
கடந்த முறை நடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி, தனது பிரச்சாரத்தை மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?