பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல் BJP demands PM statement on Pak ceasefire violations
புதுடெல்லி, அக். 14-
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாலை நேரம் காஷ்மீர் பூஞ்ச் எல்லையில் பலத்த ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் துணையுடன் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ரோந்து சென்ற இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியை தாண்டி இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று சம்பா செக்டாரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொடர் தாக்குதல் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ வழிவகுக்கிறது. பாகிஸ்தானின் ஆதாரப்பூர்வமான இந்த நடவடிக்கை மிகவும் கவலையளிக்கிறது.
கெரன் செக்டரில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடந்த பதிலடி நடவடிக்கைகளின் போது ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மற்ற ஒருவர் படுகாயமடைந்தார் என்று ராணுவமும் அரசும் கூறியுள்ளது.
நியூயார்க்கில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசிகிற வேளையில் இங்கு கெரன் செக்டரில் தீவிரவாதிகள் ஊடுருவல் நடத்துகின்றனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்கள், இந்த அத்துமீறலை சமாளிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?