Sunday, 13 May 2012

பில்லா 2 திரைப்படம் ஒரு பார்வை...,

- 0 comments




பில்லா ரஜினி நடித்து சக்கைப்போடு போட்ட படம்...
ரஜினிக்கு ஒரு நிரந்தர மார்கெட் தந்த திரைபபடம் இந்த பில்லா...
< br />
இதே போல அஜித்துக்கும் ரீமேக் பில்லா திரைப்படம் புதிய மாற்றத்தைதந்தப் படம் என்றால் பொய்யில்லை...


மங்காத்தா வெற்றிக்கு பின் வரும் படம்,இந்த பில்லா இரண்டுக்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடிவுள்ளது உண்மை...


பில்லா பற்றி பல சுவையான செய்திகள் இணையத்தில் வந ்த வண்ணமாய் இருப்பது,இந்த பில்லாவுக்கு இன்னும் ஒரு படி எதிர்பார்ப்பு கூடிவிட்டது...!கூட்டிவிட்டது...!


தல அஜித் பற்றிய செய்திகள் அவரின் செயல்கள் என்று தினம் 
தினம் ஒரு செய்திகள்...


தலை பற்றி வந்த வண்ணமாய்...

பில்லா 2 படக்குழுவினர் எப்பொழுது பார்த்தாலும் அஜீத் குமார் புராணம் தான் பாடி வருகின்றனர்.


தல அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்புக்கு சென்றால் யாரைப் பார்த்தாலும் தல போல வருமா என்று தான் பேசிக்கொள்கிறார்கள். 


என்னங்கையா தல டைலாக்கை சொல்றீங்க என்று கேட்டால், ஆஹா, ஓஹோ என்று அஜீத்தை தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாத குறையாக புகழ்பாடுகிறார்கள். அப்படி தல என்ன மாயமந்திரம் செய்தார் என்றால் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்கத் தேவையான உதவிகளை அஜீத் செய்து வருகிறாராம்.(இது தானே முக்கியம் )


மேலும் படத்தில் பார்வதி ஓமனகுட்டன், புருனா அப்துல்லா என்று தமிழ் தெரியாத 2 நாயகிகள். அவர்களுக்கு தமிழ் வச� �� உச்சரிப்புகளை கற்றுக்கொடுக்கிறாராம். 


இது தவிர படக்குழுவினருக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறாராம். அதனால் தான் இந்த புகழாரம் எல்லாம்.


முன்னதாக பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்ததோடு இல்லாமல், சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைத்து அனை� ��ரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் தல என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படியான செய்திகளால் தல தல தான் என்று படக்குழுவினர்
புகழ் பாடல்கள்....


ஒரு பெரிய நடிகர் எந்த பந்தா சிறிதும் இல்லாமல் ஓடி, ஓடி உதவி செய்வதால் படக்குழுவினர் உருகுகின்றனர்.


என்ன இருந்தாலும் தல தல தான்...புகழ் மாலை தான்...





அஜித் நடிக்கும் பில்லா 2 வின் தகவல்கள் ஆன்லைனில் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றன.


மறு பக்கத்தில் பில்லா 2 விற்கென அஜித் செய்த ஸ்டன்ட் வரவேற்பை பெற்றுள்ள� �ு.


கரணம் தவறினால் மரணம் என்ற அளவுக்கு அஜித் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக பில்லா 2 ஸ்டன்ட் பயிற்சியாளர் சமூக தளத்தில் ஏகத்திற்கு புகழ்ந்துள்ளார்.


எனது வாழ்நாளில் இப்படியொரு ஸ்டன்ட்டை பார்த்ததில்லை எனவும் அஜித் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து ஒரு கையால் கயிற்றைப் பிடித்து தொங்கிய காட்சி எ னது இரத்தத்தை உறைய வைத்துள்ளது எனவும் பயிற்சியாளர் கூறியுள்ளார்.


பில்லா2 நம்மை எப்படி மகிழ்விக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
பில்லா2 வெற்றியடைய வாழ்த்துவோம்...



http://kallaool.blogspot.in<>


<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
[Continue reading...]

கமலஹாசனின் விஸ்வரூபம்....

- 0 comments


Kamal Hassan S Vishwaroopam First Look


நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலஹாசன் தானே இயக்கி  கதாநாயகனாய் நடிக்கிறார். 


அவருக்கு ஜோடியாக � ��ூஜா குமார் நடிக்கிறார். சிறப்பு வேடத்தில் சேகர் கபூர் நடிக்கிறார். கமல்ஹாசன் இயக்கி நடிப்பதால் ரசிகர்களிடையே படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

கமல் ஹாஸன் மிகவும் ரகசியம் காத்து வந்ததால் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்ப்பார்ப்பு நிலவிருப்பது உண்மை...


இந்� �� நிலையில் கமல் மே 1 இந்தப் படத்தின் முதல் போஸ்டர் ஸ்டில்லை வெளியிட்டார். 


விஸ்வரூபம் என்ற தலைப்பு, உருது மொழி எழுத்துருவைப் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. பின்னணியில் அமெரிக்கா.


இந்தப் படம் ஆப்கன் தீவிரவாதம் தொடர்பானது என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதன் எழ ுத்துரு உருது போல அமைந்திருப்பது பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.


இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ 30 செகன்ட் ட்ரைலரிலும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது. 


அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்.. 'முழு நிறைவு பெறும் தருவாயில். .. எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாஸன்' என்று முடிகிறது. 


இந்த ட்ரைலரை கமல் உருவாக்கியுள்ள ஸ்டைல் அந்தப் படத்தின் தரத்தைக் காட்டுவதாக உள்ளது. எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது.


படத்தை கமல் ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். சனுஜான் � �ர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


 படத்தை இந்தி தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட இருப்பதால் நடிகர் நடிகைகளை கமல் இரு மொழிகளிலும் தயாராகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். படத்தில் கமல் ஆப்கான் தீவிரவாதியாக நடிக்கிறார். கமல் ஒருமுறை மேடையில் பேசும் போது "உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தலைதூக்கும்"  என்று உணர்ச்சிபட கூற ினார்.   கமலின் இந்த தேர்வு வெற்றியைத் தரும் என்று அவரது ரசிகர்கள் பேசிக்கோள்கிறார்கள். 


கமல் சார்... அடுத்த டீஸர் எப்போ.. ஆர்வம் தாங்கல தான் ...

வழக்கம்போல வதந்திகளின் புதுக்கதைகளுடன் வளம் வந்துகொண்டு இருக்கும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் நாட்கள் நகர � �திகமாய் இருப்பது இந்த படத்துக்கு பலமா இல்லை இதுவே  பலகினமா எனபது படம் வந்த பின்தான் தெரியும்...


http://kallaool.blogspot.in<>


<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
[Continue reading...]

காதலுக்கு கண்ணில்லை...

- 0 comments





காதலுக்கு கண்ணில்லை
என்று கூறியே 
கண்டதும் காதல் என்று
வாசிக்கும் வாலிப இதயம்...


அவள் காதல் கொள்கிறாளா
தேவையில்லை
நான் காதலிக்கிறேன்
தெய்வீக காதல் என முழக்கம்

ஏச்சுக்கும் ,பேச்சுக்கும்,கிடையில்,
மூச்சுக்கு முந்நூறு தடவை
தினம் அவள் பெயரை
கூறுவதே இவன் வேல� � .

சரி இப்படி சொல்கிறானே என்று
அவளை கண்டு கேட்டேன்,
அவள் சொன்னாள்
யார் இவன் என்று.

என்னை காதலிப்பவனை எல்லாம்
நான் காதலிக்க வேண்டுமென்றால்
எனக்கு ஓராயிரம் காதலன் .

எனது அழகைக் கண்டே
நான் போகும் திசையில்லாம்
வருவார்கள் ,போவார்கள்
நான் கண்டுகொள்வதில்லை.

உண்மை காதல் என்று சொல்வது எல்லாம்
உளறல் என்று கொள்க .
காலம் கடந்தால்
அடுத்தக் க ாதல் வரமாலா போகும் .

திரைப்படத்தின் ஆதிக்கத்தால்
இங்கு காதல் எனபது வாலிபத்தின்
கட்டாயக் கல்வியாய் மாறிவிட்டது,

பெண்கள் இதில் பொறுப்பேற்க முடியாது,
என்று முழங்கினால் அவள்.
அவள் கூற்றுக்கு பதில் என்னிடமில்லை.

வளரும் வாலிபனுக்கு மட்டுமே
காதலும் சாதலும் சாபமாய் போக
புரிதலும் .அறிதலும்
தெரிந்துக்கொள்ளாமலே!

 இங்கு தெய்வீக காதல் என மு ழக்கம் இன்னும்


http://kallaool.blogspot.in<>


<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger