Thursday, 19 April 2012

எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்..ஜோக்ஸ்

- 0 comments


நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
அறனி - ஏன்டி நிர்மலா " டாக்டர் எனக்கு எழுதிய லவ் லெட்டர் என் கணவரின் கையில் அகப்பட்டுவிட்டது
நிர்மலா - "அப்படியா அப்புறம் என்னாச்சு"?
அறனி - அதில என்ன எழுதி இருக்குன்னு தெறியாம அதக் கொண்டுபோய் மெடிக்கல் ஷாப்பில மருந்து வாங்கிட்டு வந்துட்டார்....

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்

பயணி -1 :என்ன  சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி-1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது  தடுமாறி கீழ� �� விழும்னு நினைச்சேன்.

அவர் :நேத்து உங்க காருக்கு எப்படி Accident   ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

தோழி : 1:உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்.. 
தோழி :2 :ஓ அதுவா நான் மேக்கப்பை கலைச்சிட்டேன் அதுதான்  
அம்மா : இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்ட� � ஒழுங்காக இருக்காங்களோ
அவங்களுக்கு நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள் : போம்மா இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை
எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி     சா‌ப்‌பிடறதை ‌
நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.
நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌ந� ��று‌த்த முடியு‌ம்?.

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

விற்பனையாளர் : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி
வாங்குபவர் : நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''


http://tamilnews-latest.blogspot.com




[Continue reading...]

கல்யாணம் வரைக்கும் அவள் காதலி..சிறுகதை

- 0 comments


நானும், அவனும் ஒரு மூனு நாலு வருஷமா நண்பர்கள்...உயிரக்குடுக்குற அளவுக்கெல்லாம் இல்லிங்க, ஒரே ஊரு அப்புறம் ஒரே இடத்துல ரெண்டு பேரும் ஒரு வருடமளவு வேலை செஞ்சிருக்கோம்.. அந்த நட்புதான்..

அவனும், நானும் ஒன்னா கம்பனியொன்றில் வேல செய்யும் போது ஒரு பொண்ன லவ் பண்ணினான் லவ்வுன்னா லவ்வு அப்பிடியொரு லவ்வு.. ராவெல்லாம் கண்முழித்து போன்ல பேசிட்டேயிருப� �பான்.. எல்லாரும் தூங்கினாலும் இவன் மட்டும் பெட்சீட்டால் போத்திட்டு பேசுவான்..

கட்டினா இவள மட்டும்தான் கட்டுவேண்பான்.. யாரு குறுக்க வந்தாலும் எங்க காதல விட்டுக்கொடுக்க மாட்டேன்பான்.. நிறைய தமிழ்சினிமா பார்த்து வளர்ந்திருப்பான் போல பயபுள்ள!!! அவனுகிட்ட ஒரு ஸ்பெஷல் தெறம இருக்கு அதாவது எந்த பொண்ணயும் தன் பேச்சாலயே மடக்கிடுவான்.. பேசும் போது எங்கிருந்துதான் வருதோ தெரியல்ல பேசிக்கொண்டேயிருப்பான், ஆனா எது சம்பந்தமா பேசுறான்னு அவனுக்கும் தெரியாது.. கேட்கிறவங்களுக்கும் புரியாது.. ஆனா, பேசிக்கொண்டேயிருப்பாங்க அவங்களுக்கு தேவை இடைவிடாம ஏதாவது பேசனும்.. அப்பிடி பேசுவதும் ஒரு கலைதான்.. நமக்கெல்லாம் அது கைவராத கலை..

நிறைய பொண்ணுங்களும் தன்னோட காதலன் தன்னோட அதிகமாக பேசனும்னுதான் விரும்புறாங்க... அது எதப்பத்தி பேசனும்னு வரையறையெல்லாம் கிடையாது.. எதையாவது பேசனும் அவ்வளவுதான்! நாகரீகமாக எதைப்பேசினாலும் ரசிக்க அவர்கள் தயார்.. சில விடயங்கள் அவர்களுக்கு பிடிக்காததைப்போல் வெளியில் நடித்தாலும்.. அதையும் அழகாக அளவாகச் சொன்னால் அதுவும்..அவ� �்களுக்கும் பிடிக்கும்!!

எதையும் அவர்களாகவே கேட்க மாட்டார்கள், நாமாகவே புரிந்துகொண்டால்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி.. பெண்கள் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என புலம்பும் ஆண்கள் கோடி.. ஆனால் அவர்கள் மனதின் ஆசைகளை,விருப்பங்களை புரிந்துகொள்ளும் ஆண்களைத்தான் அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது.. 'நான் சொல்லாமலே புரிந்துகொண்டானே' என்ற திருப்தி, அவர்களுக்கு கிடைக்கிறத� ��..

நிறைய ஆண்களால் இந்த திருப்தியை அவர்களுக்கு கொடுக்க முடிவதில்லை... அது ஒன்றும் அழ்கடலில் முத்தெடுப்பதைப்போன்ற கடினமான காரியமும் அல்ல!!

இதுலயிருந்து விளங்குற நீதி எண்ணான்னா பொண்ணுங்களுக்கு அவங்க பின்னால சுத்துற.சைட் அடிக்கிற, பார்த்து வழியிற பசங்களவிட தைரியமா,அழகா,ஸ்மாட்டா, தெளிவா பேசுற பசங்களத்தான் அதிகம் பிடிக்குதாம்.. வாழ்க்கையின் சில கேள்விகளுக்கு அனுபவங்கள்தான் பதில் சொல்கிறது! ஆனால் அனுபவங்கள் வந்து சேரும் போது அந்த இடத்திலிருந்து நீண்ட தூரம் நாம் கடந்து வந்திருப்போம்... பொருளியல் அறிஞர்கள் சும்மாவா சொன்னாங்க ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெற முடியும் என்று.. அது முழுக்க முழுக்க உண்மையும் கூட..

ஒரு நாள் இரவு ஒரு தமாஷா போச்சு.. இரவு ஒரு மணியிருக்கும் நான் ஒன்னுக்கிருக்கலாம்னு எழுந்திரிச்சா பக்கத்து ரூம்ல� ��ிருந்து ஒரு மெல்லிய சவுண்டு வருது பார்த்தா பெட்சீட்டால ஒடம்பு முழுக்க தலையையும் சேர்த்து போர்த்திட்டு இவன் தூங்குறான், உண்ணிப்பா கவனிச்சதுல! அதுக்குள்ளயிருந்துதான் கதைக்கிற சத்தம் வருது.. பயபுள்ள கனவுலதான் பேசுறான்னு பார்த்தா.. தெளிவாத்தான் பேசுறான்.

அந்தபொண்ணு "வேறயாரும் முழுச்சிட்டிருக்காங்களா?"  அப்பிடி... கேட்டிருக்கும் போல, அதுக்கு இவன் சொல்றான் "இப்� � எல்லாரும் தூங்கிட்டாங்க இப்ப நான் மட்டும்தான் முழிச்சிட்டிருக்கேன், எவண்ட தொல்லயும் இல்ல ப்ரீயா பேசலாம்" அப்பிடின்னு..  'ஏய்.. இங்க ஒருத்தன் நானும்தான் முழிச்சிட்டிருக்கேன்' அப்பிடின்னு சொல்லுவோமான்னு பார்த்துட்டு வேணாம்ன்னு விட்டுட்டேன்..
இந்தக்கூத்த விடிஞ்சதும் என் அறையிலுள்ள மற்ற நண்பனிடம் சொன்னேன். அவன் வேலைக்குப்போய் கம்பனி முழுக்க இந்த மேட்டர பத்த வ� ��ச்சிட்டான்... இதனால அவனுக்கு போற இடமெல்லாம் "நாங்களும் நைட்டு ஒரு மணிக்கு முழிச்சிட்டிரும்லல" என நக்கல பண்ண தொடங்கிவிட்டார்கள்..

நைட்டு ஒரு மணிக்கு பொண்ணு கூட கடல போட்டத எவன் கேட்டிருப்பான்னு ஓரே குழப்பம் அவனுக்கு.. இதுக்கெல்லாம் காரணம் நாந்தான்னு அவனுக்கு இது வரையிலும் தெரியாது.. அவன் ரூம்ல பக்கத்துல தூங்கினவன் மேலதான் சந்தேகம்..

இப்பிடி ஜாலியா போய்க்கொண� ��டிருக்கும் போது சில சிக்கல்களால் எங்க கம்பனிய விட்டு விலகி எங்க ஊருக்கு பக்கத்து ஊரிலுள்ள  ஒரு பெரிய மல்லிகை கடையில் வேலைக்கு சேர்ந்துட்டான்.. அந்தக்கடையில் வேலைக்கு சேர்ற பசங்க நீண்டநாள் அங்கயிருந்து வேல பார்த்ததா சரித்திரமில்ல..
அதுக்காக அந்த கடை முதலாளி ஒரு திட்டம் வெச்சிருந்தார்.. அவர்ற கடைக்கு வேலைக்கு வர்ற கல்யாணமாகாத பசங்களுக்கு.. அந்த ஊர்லயே ஒரு பொண் ணப்பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது.. அதுக்கப்புறம் அந்த ஊர்லயேதான் இருப்பான்.. தன் கடைய விட்டு வேற எங்கும் போக மாட்டான் என்ற எண்ணம் அவர் மனதில்.. அப்பிடி ஒரு சிலருக்கு கல்யாணம் பண்ணியும் வெச்சாரு. ஆனா பாருங்க! கல்யாணமாகி ஒரு சில மாசத்துல் பொண்டாட்டிய கூட்டிகிட்டு சொந்த ஊருக்கு வந்துட்டானுங்க.. அவரு ஐடியாவெல்லாம் தவிடு பொடியாயிட்டு

நம்ம நண்பனும் அங்க வேலைக்க� �� சேர்ந்துட்டான்.. வேலைக்கு சேர்ந்து மூனு மாசத்துலதான், அந்த துயரச்செய்தி என் காதுகளுக்கு எட்டியது.. என்னடான்னா அவனுக்கு கல்யாணமாம்!

லவ் பண்ணின பொண்ணுகூடன்னு நீங்க நெனச்சா அது தப்பு! அப்புறம் யாரு? இதெல்லாம் அந்த கடை முதலாளியோட ஏற்பாடு.. ஆமாம், இவன நல்லா அவருக்கு புடிச்சிட்டு அதுதான் தன் கடையில நீண்டகாலம் வெச்சிருக்கனும்னு ஆசப்பட்டாரு கல்யாணத்தயும் ஏற்பாடு பண ்ணிட்டாரு...
இவனுக்கு எங்க போச்சி புத்தி? இவங்கிட்ட என்னென்னமோ பேசி பொண்ணு பார்க்க சம்மதம் வாங்கிட்டாக.. இவனும் வேண்டா வெறுப்பா பொண்ணு பார்க்க கிளம்பியிருக்கான்..

பொண்ணும் சுமார்தான்... என்ன மந்திரம் பண்ணாகளோ? என்ன மாயம் செய்தாகளோ? தெரியல்ல...! பயபுள்ள பொண்ண பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.. அப்புறம் என்ன கண்ணாலம்தான்...
அப்புறம் அந்தக்காதல் என்னாச ்சு.. அது கல்யாணம் வரைக்கும்தான்.. கல்யாணம் வரைக்கும் அவள் காதலி.. கல்யாணத்துக்கு பின் இவள் மனைவி..

கல்யாணம் முடித்து கொஞ்ச காலம்தான்.. அவனும் அந்த கடைய விட்டு நின்னுட்டான் முதலாளிக்கு திரும்பவும் ஆப்பு.. இப்ப சொந்தமா தொழில் பண்றானாம்.. ஒரு குழந்தையும் இருக்காம்.. ஏதோ வாழ்க்கை வண்டிய ஓட்டிக்கிட்டிருக்கான்..

முதலாளியின் சுயநலத்தில் ஒரு பொதுநலமும் இருக்கத்தா� �் செய்கிறது!!
குறிப்பு.. இது சிறுகதையே இல்லன்னு யாரும் அடிக்க வராதீக.. இது சும்மா முயற்சிதான், எப்பிடியிருக்குன்னு சொல்லுங்க.. பிழைகள சுட்டிக்காட்டுங்க..


http://tamilnews-latest.blogspot.com




[Continue reading...]

என்றென்றும் கிரிக்கெட் - 1

- 0 comments


கிரிக்கெட் என்பது எனது 12 வயது முதல் இன்றுவரை என் உணர்வுகளோடு கலந்துவிட்ட தொடர்ந்து வருகிற, மறக்கமுடியாத, விடமுடியாத ஓர் உறவைப்போன்றது.. நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்பதைவிட கிரிக்கெட் பைத்தியம் என்றே சொல்லிக்கொள்ள� ��ாம்.. ஆனாலும் இந்த வலைத்தளத்தில் கிரிக்கெட் சம்பந்தமாக அதிகம் எழுதியது கிடையாது.(ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கிறேன்) ஒவ்வொரு போட்டித்தொடர் முடிவடையும் போதும் அவற்றைப்பற்றி எழுதவேண்டுமென்று தோன்றினாலும்.. அவற்றின் தரவுகளை சேகரித்து எழுதுவதில் உள்ள கடினத்தினாலும் சோம்பரத்தினாலும் அப்படியே விடுபடுவதுண்டு..

குறி� �்த ஒரு அணியின் வெறி பிடித்த ரசிகன் அல்ல நான். எல்லைகளை கடந்த உலக கிரிக்கெட்டின் ரசிகன் நான். உலகில் எங்கெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறதோ அவற்றைப்பற்றிய செய்திகளை தேடிக்கொண்டேயிருப்பேன். பார்ப்பதற்கு வசதியும் நேரமும் இருந்தால் பார்க்க தவறுவதுமில்லை.. இதில் T20, ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் என வகைபிரிக்காமல் அனைத்து போட்டிகளும் எனக்கு விருப்பமான� �ை.. இன்றைய T20 மோகத்தினால் பலருக்கு டெஸ்ட மற்றும் ஒருநாள் போட்டிகளின் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது.. எனக்கு அப்பிடியில்லை, இன்னும் சுவாரசியம் குறையாத விறுவிறுப்பு குறையாத டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஆஷஸ் போட்டித்தொடர்.

இலங்கையில் இருந்த காலப்பகுதியில்.. கேபிள் தொலைக்காட்சி வசதியோ இணைய வசதியோ இல்லாததால், இலங்கை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுகின்ற இலங்கை சம்பந்தப்பட்ட போட்டிகளை மாத்திரமே பார்க்ககூடிய வாய்ப்பு கிட்டியது.. ஏனைய போட்டிகளின் ஸ்கோர் விப� ��ங்களை செய்தியறிக்கை மூலமாகவே தெரிந்துகொள்வேன்.. எல்லா போட்டிகளையும் கண்டு களிக்க முடியவில்லையென அப்போது பெரிய மனக்குறையாக இருந்தது..

இப்போது வெளிநாட்டில் இருப்பதால்.. வேகமான இணைய வசதியும் இருப்பதால் உலகில் எங்கு போட்டிகள் நடந்தாலும் அவற்றை நேரடியாக பார்க்ககூடிய வசதியும்.. அவற்றை தவறவிட்டால் highlights பார்க்ககூடிய வசதிய ும் இருப்பதால் எனது கிரிக்கெட் பசிக்கு நல்ல விருந்து. இணையத்துக்குள் நுழைந்ததும் நான் முதலில் செல்லும் தளம் cricinfo தளம்தான்.. முதலில் இங்கு சென்று ஸ்கோர் விபரங்களை பார்த்துவிட்டே மற்ற தளங்களுக்குள் நுழைவேன்..


இப்போது கிரிக்கெட் மீது அதிகமானோர் வைக்கும் குற்றச்சாட்டு.. போட்டிகள் முன்னமே முடிவுசெய்யப்படுகிறது (spot fixing) மற்றும் சூதாட்டம்.. இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கமுடியவில்லையென்றாலும், இந்த spot fixing என்பது எல்லா போட்டிகளும் ஆதிக்கம் செலுத்துவதில்லை செலுத்தவும் முடியாது.. எப்பவாவது எங்காவத� � மிகச்சில போட்டிகளில் மாத்திரம்.! சூதாட்டமும் அப்பிடித்தான்.. அண்மையில் இப்பிரச்சினையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்களின் கதி என்னவானது என்பது எல்லோரும் அறிந்ததே.! அவ்வாறான குற்றங்களுக்கு அவ்வாறான தண்டனைகள் முக்கியம்தான்..

அடுத்து இன்றைய ஐபிஎல் போட்டிகள் உண்மையான கிரிக்கெட் மீதான ஆர்வத்தை குறைத்து.. வெறும் பணத்துக்கா� �� மோதிக்கொள்ளும் பணக்காரர்களின் சூதாட்டமாக மாறியுள்ளது எனும் குற்றச்சாட்டும் உண்டு.. இதில் எனக்கும் உடன்பாடு உண்டு.. ஐபிஎல் போட்டிகளை ஆரம்பத்தில் ரசித்ததைப்போன்று இப்போது ரசிக்க முடியவில்லை. உலகில் உள்ள திறமையான வீரர்களையெல்லாம் விலைகொடுத்து வாங்கி போட்டிகளில் முதலீடு செய்து ஒரு வியாபாரம் போலவே நடைபெறுகிறது.. இந்தியாவின் அதிகமான வீரர்களுக்கு இதன்மூலம் நல்ல � ��ருமானம் கிடைக்கிறது.இதில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையை பார்த்தால் தலையே சுற்றிவரும்.. ஆனால் வெளிநாட்டு வீரர்களில் மிகத்திறமையான வீரர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இது பணத்தால் விளையாடப்படும் பணக்காரர்களின் விளையாட்டு.. சுருக்கமாக சொன்னால் கிளப்பில் சீட்டுக்கட்டுகளை வைத்து விளையாடும்ம் சூதாட்டம் போல் இங்கே மை தானத்தில் வீரர்களை வைத்து விளையாடும் சூதாட்டம் இது.. 



இவ்வாறு எனக்குப்பிடித்த கிரிக்கெட்டை பற்றி தொடராக எழுதலாம் என நினைக்கிறேன்.. இதில் இவ்வளவு காலமும் மனதோடிருந்த பல விடயங்க� �ை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. அணிகளைப்பற்றி, போட்டித்தொடர்களைப்பற்றி,பிடித்த-பிடிக்காத வீரர்களைப்பற்றி இன்னும் பல விடயங்கள் பற்றி பேசலாம்..என்னைப்போலவே கிரிக்கெட்டை விரும்புகிற நேசிக்கிறவர்களோடு உரையாடுவதில் அலாதிப்பிரியம் எனக்கு... அவ்வாறானவர்களை சந்திக்க கிடைத்தால் கிரிக்கெட்டை ஒரு அலசு அலசி விடுவதுண்டு.. ஆனாலும் எல்லோரும் அந்த ரசனை இருப்பதில்லை, நிறை� � பேர் பொழுதை கழிப்பதற்காகவே கிர்க்கெட் போட்டிகள் பார்க்கின்றனர்.

இன்று அறிமுகம் மட்டும்தான்..அடுத்த வரும் பதிவுகளில் கிரிக்கெட் பற்றி இன்னும் பேசலாம் அடுத்த பதிவு இலங்கை அணி தொடர்பானது..




http://tamilnews-latest.blogspot.com




[Continue reading...]

இணைய சஞ்சிகைகள்

- 0 comments
[Continue reading...]

ஆப்கான் தாக்குதல்கள் உணர்த்துவது என்ன?

- 0 comments


ஏப்ரல் 15-ம் திகதி ஆப்கானிஸ்த்தானில் பல நகரங்களில் நன்கு ஒருங்கிணத்து நடாத்திய தாக்குதல்கள் பல செய்திகளைக் கூறுவதுடன் பல சந்தேககங்களையும் கிளப்புகின்றன. 9-11எனப்படும் 2001 செம்படம்பர் 11-ம் திகதி அமெரிக்காவில் நடந்த இரட்டைக ் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயில் பிஏடி(PAD) எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொண்டது. அமெரிக்கா பாக்கிஸ்த்தானுடன் தனது உறவையும் புதுப்பித்துக் கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து ஆப்கானி� ��்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச் செய்து முடித்தன.

வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெர� ��க்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கை� ��ளில் ஈடுபடுகிறது. சிஐஏ உலகின் பல பாகங்களிலும் ஆளில்லாப் விமானத் தளங்களை அமைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகத் தாக்குதல்களில் ஈடுபடுகிறது.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் க ெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும� � பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைத� ��கள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை. அதைத் தொடர்ந்து இன்னொரு அல் கெய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாக்கியும் கொல்லப்பட்டார். பின்னர் அதியா அப் அல் ரஹ்மான் என்ற ஒரு முக்கிய அல் கெயதா தலைவரும் கொல்லப்பட்டார்.

பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்ப� ��தைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார். ஆனால் ஏப்ரல் 15 திகதி பாக்கிஸ்தானில் நடந்த தாக்குதல்கள் அவரது கூற்றை மறுதலிக்கின்றன.

தலிபான் / ஹக்கானி கூட்டமைப்பு

ஆப்கானிஸ்த்தானில் ஏ� �்ரல் 15-ம் திகதி நடந்த தாக்குதல்கள் தலிபான் அமைப்பும் ஹக்கானி அமைப்பும் இணைந்து நடாத்திய தாக்குதல்கள் ஆகும். ஆப்கானிஸ்த்தானில் கட்டத் தொடங்கி பாதியில் நிற்கும் பல மாடிக் கட்டிடங்கள் பல உண்டு. அவற்றை தீவிரவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பெண்கள் போல் பார்தா அணிந்து பல நகரங்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவினர். ஆங்காங்கு இருக்கும் சோதனைச் சாவடிக� �ுக்குள் அவசரமாக போக வேண்டும் என்று ஏதாவது சாட்டுக்களைச் சொல்லி காவலாளியின் கையில் சில பண நோட்டுக்களைத் திணித்துவிட்டு ஆப்கானிஸ்தானுக்குள் எங்கும் செல்லலாம். பாதியில் நிற்கும் பல் மாடிக் கட்டிடங்களில் அவர்கள் நிலை எடுத்துக் கொண்டு உழங்கு வானூர்தித் தாக்குதல்களுக்கும் கனரகத் துப்பாக்கித் தாக்குதல்களுக்கும் எதிராக சுமார் 20 மணித்தியாலங்கள் தாக்குப் பிடித்தன ர். மாடிக்கட்டிடத்தின் தூண்களுக்குப் பின்னால் மறைந்திருந்து கொண்டு எறிகணை செலுத்திகள் மூலம் rocket propelled grenades தமது தாக்குதல்களை மேற்கொண்டனர். ஞாயிறு மதியத்திற்கு முன்னர் தொடங்கிய தாக்குதல்கள் திங்கள் காலைவரை தொடர்ந்தது.

ஆப்கான் தாக்குதல்கள் உணர்த்துபவை:
1. இசுலாமியத் தீவிரவாதம் முறியடிக்கப்பட முடியாத ஒன்று. அது பாலஸ்த்தீனம் முதல் பாக்கிஸ்த்தான் வரை பல உலகப் பிரச்சனைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை சுமூகமாகத் தீர்க்காமல் திவிரவாதம் ஒழியாது.

2. உலகின் மிகப் பெரிய உளவுத் துறையாலும் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்வு கூறமுடியாது. அல்லது இப்படி ஒரு தாக்குதல் ஆப்கானிஸ்த்தான் அரசை மேலும் மேற்குலகைச் சார்ந்து நிற்கச் செய்யும் என்பதற்காக அமெரிக்கா இத்தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்காமல் இருந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புக� �றது.

3. இசுலாமியத் தீவிரவாதிகள் தாம் பலமிழந்து விடவில்லை என்பதை தமது ஆதரவாளர்களுக்கு உணர்த்த வேண்டிட அவசியம் ஏற்பட்டுள்ளது

4. பல பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக� �� கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கர ுதப்படுகிறது.

5. பல நேட்டோப் படைகளின் நிலைகளிலும் தூதுவரகங்களிலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட போதும் நேட்டோப் படைகளை சேர்ந்த எவரும் கொல்லப்படவில்லை. அத்துடன் பாரிய இழப்புக்கள் எதுவும் நடக்கவில்லை. இதனால் நடந்த தாக்குதல் அல் கெய்தா/ஹக்கானியின் தாக்கும் திறனில் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

6. இனிப் பாகிஸ்த்தானும் அமெரிக்காவும் இசுலாமியத் தீவிரவாதிகளுக் கு எதிராக மேலும் நெருங்கிச் செயற்படுவார்கள்

7. ஆப்கானிஸ்த்தானுக்குள் பெருமளவு ஆயுதங்களை தீவிரவாதிகளால் கடத்திச் செல்ல முடியும்.

8. ஹக்கானி அமைப்பு பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.

9. நேட்டோப் படைகள் விலகிய பின்னர் ஆப்கானிஸ்த்தானை இசுலாமியத் தீவிரவாத்கள் கைப்பற்றலாம்.

தொடர்புடைய பதிவு: மீண்டும் புதிய உத்தியுட ன் மீசையை முறுக்கும் அல் கெய்தா/தலிபான் இயக்கங்கள்


http://tamilarai.blogspot.in


[Continue reading...]

இலங்கைப் பயணம்: சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா

- 0 comments


இந்த ஆண்டு இலங்கைப் பத்திரிகைகளில் இதுவரை வந்த நகைச்சுவைகளில் மிகச் சிறந்த நகைச்சுவை இந்திய இணை அமைச்சர் வி நராயாணசுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியதே. இந்தியாவில் இருந்து இலங்கைக் கு இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று சுஸ்மா சுவராஜ் தலைமையில் போருக்கு பிந்திய ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக என்று சொல்லிக் கொண்டு இலங்கை சென்றது. அது பசில் ராஜபக்ச, மலையத் தொழிற்சங்கவாதிகள், மலையக அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடபடப் பலதரப்பினரைச் சந்தித்தனர். இக்குழுவின் பயணம் தொடர்பாகக் கேட்டபோதே அம ைச்சர் வி நராயாணசுவாமி தனது திருவாய் மலர்ந்தருளினார். இக்குழுவினர் 15-ம் திகதியில் இருந்து 21-ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர்.

இந்திய உளவுத் துறைக்குத் தெரியாதா?

இலங்கையில் இப்போதைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை இலங்கைப் பத்திரிகைகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இந்திய உளவுத் துறை இலங்கையில் செயற்படுகிறது. இலங்கை நிலைமையைப் பற்றி இந்திய உளவுத� � துறைக்குத் தெரியாததை சுஸ்மிதா சுவராஜ் கண்டறியப் போகிறாரா? இதிலும் பார்க்க நடிகை சுஷ்மிதா சென்னை அனுப்பி இருக்கலாம். அவருக்கு இலங்கை ஆட்சியாளர்கள் காட்டு காட்டு என்று காட்டியிருப்பார்கள்.


மீண்டும் பதின்மூன்று பல்லவி மீண்டும் நாமம்

இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் இந்த ஆண்டு இறுதியில் தனது இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. இலங்கை ஆட்சியாளர்களைச் சந்தித்த சுஸ்மா சுவராஜ் பதின்மூன்றாம் திருத்தத்தை அமூல் செய்யும் படி வலியுற்த்தினார். ஐக்கிய நாடுகள் சபையில் போர்த்துகீசியப் பிரதி நிதியியின் உரையைத் தனது உரை என்று எண்ணி வாசித்துச் சாதனை புரிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிடம் பதின்மூன்றுக்கு மேல் சென்று தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று கூறிவிட்டுப் பின்னர் அப்படி ஒன்றும் கூறவில்லை என்று மஹிந்த ஏமாற்றினார். சுஸ்மா ஏற்கனவே நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பதால் அவருக்கு காது குத்தப்படலாம். சுஸ்மா சுவராஜ் அவர்களும் ஒரு அப்பட்டமான பேரினவாதியே. அவர் இலங்கைப் பேரினவாதிகளுக்கு தொடர்ச்சியாகப் புகழாரம் சூட்டினார்.

உண்மையான நோக்கம்
இலங்கை அரசு ஒரு தூதுக் குழுவை இலங்கை அனுப்பியதன் நோக்கத்தை க� �ாநிதி விக்கிரமபாகு
"ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரவளித்துள்ளமையால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக் குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக்குழுவின் திட்டம்" என � �ுற்றம் சாட்டினார். ஆனால் தூதுக் குழுவின் முக்கிய நோக்கம் வேறு. இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை சில முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது:
1. இந்தியாவின் அதிகார மையமான தென்மண்டலத்தில் இருப்பவர்களின் சாதிய நலன்கள்.
2. இந்தியாவை ஆள்பவர்களின் குடும்ப நலன்கள்
3. இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்தியப் பெரும் முதலாளிகளின் நலன்கள்.
இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு இலங்கை தொடர்பாக இந்தியா தனது செயற்திட்டங்களை வகுத்துக் கொள்கிறது. இதற்கு சிங்கள மக்களுடன் ஒரு சிறந்த நட்பை இந்தியா பேண வேண்டியது அவசியமாகிறது. அப்படி வகுத்த கொள்கைகளும் செயற்திட்டங்களும் ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு தமிழ்நாட்டில் 2011இல் ஒரு பெரும் தேர்தல் தோல்வியைக் கொடுத்தது. இந்த தேர்தல் காரணங்களுக்காக இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி அமைக்� �த் தயாரில்லை. இலங்கையில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்துவதைப்பற்றி இந்திய ஆட்சியாளர்களோ கொள்கை வகுப்பாளர்களோ அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இலங்கையில் பெருகிவரும் சீன ஆதிக்கம் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் ஐக்கிய அமெரிக்காவையும் அதிகம் கவலையடைய வைத்தது. அதனால் இலங்கையின் மனித உரிமை மீறல்களை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். வட இந்தியாவில் இடைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் அதிகரித்த தமிழ்நாட்டு வாக்காளர்களின் தேவையும் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நெருக்குதல்களும் இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வைத்தது. இதனால் இலங்கை அதிருப்தி அடைந்தது. இதனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்து இலங்கை தொடர்பான இந்தியாவின் தற்போதைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் தேர்தல் காரணங்� ��ளுக்காக கொள்கை மாற்றம் தேவைப்படாது என்று எண்ணினர். அதனால் இந்தியாவின் சகல கட்சிகளைச் சேர்ந்தவரகளை இலங்கைக்கு அனுப்பி அவர்களை இலங்கை கவனிக்க வேண்டிய மாதிரிக் கவனித்தால் அவர்கள் இலங்கை சார்பான இந்தியாவின் தற்போதைய கொள்கைகளை ஏற்றுக் கொள்வர் என நினைத்தது. அதில் முதல் இடியைப் போட்டவர் ஜெயலலிதா.


ஜெயாவின் அதிரடிக் காய் நகர்த்தல்
சட்டசபைத் தேர்தலில் தமிழ ின உணர்வாளர்களின் ஆதரவுடன் பெரும் வெற்றியீட்டிய ஜெயலலிதாவின் அடுத்த கனவு 2014இல் நடகக இருக்கும் பாராளமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியீட்டி தான் அடுத்த இந்தியப் பிரதமராக வேண்டும் என்பதே. ஏற்கனவே அவரது சோதிடர்கள் அவருக்கு இந்தியப் பிரதமராகும் யோகம் உண்டு என்று சொல்லிவிட்டனர். தான் ஒரு ஈழத் தமிழர்களைன் தீவிர ஆதரவாளர் என்று தன்னைக் காட்டிக் கொள்வதில ் ஜெயலலிதா இப்போது அதிக கவனத்துடன் செயற்படுகிறார். இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை செல்லும் என்றவுடன் ஜெயலலிதா குழுவின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன் அதில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்தப் பயணம் வெறும் கண் த ுடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது. சிறிலங்கா அதிபருடன் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கும் ஒழுங்குகள் கூட இல்லை. அவருடன் விருந்து உண்ணவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனது கட்சியின் சார்பில் யாரும் போகமாட்டார்கள் என்றேல்லாம் கூறிப் போட்டார் ஒரு போடு. ஜெயலலிதாவைத் தொடர்ந்து உண்ணாவிரத நாடகமாடிய கலைஞர் கருணாநிதியும் தனது அரசியல் எதிர்காலத்திற்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை முக்கியம் என்பதால் தனது கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் இடம் பெறமாட்டார்கள் என்றார். ஜெயலலிதா அத்துடன் நிற்கவில்லை முதலமைச்சர்கள் மாநாட்டுக்குச் சென்ற இடத்தில் சில சந்திப்புக்களை மேற்கொண்டார். திரிணாமுல் காங்கிரசும், ஐக்கிய ஜனதா தளமும் இலங்கை செல்லும் குழுவில் இருந்து விலகிக் கொண்டன. இதனால் சுஸ்மிதா குழு பெரும் பலவீனம் அடைந்தது. தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தாம் மஹிந்த ராஜபக்சவுடன் அமர்ந்து விருந்து உண்டால் தமது அரசியல் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்று உணர்ந்து அந்த விருந்து உபசாரத்தை இரத்துச் செய்யும்படி இந்திய வெளியுறவுத் துறையைக் கெஞ்சினர்.

http://tamilarai.blogspot.in


[Continue reading...]

சீனாவிற்கு ஆப்பு வைக்கும் இந்தியாவின் அடுத்த ஏவுகணை அக்னி -5.

- 0 comments


அக்னி - 5
 இந்தியா தனது அக்னி - 5 என்னும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகளைப்(Inter-Continental Ballistic Missile-ICBM) பரிசோதிக ்க விருக்கிறது. ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து அக்னி - 5 ஏவப்படவிருக்கிறது. இதற்கு முந்திய அக்னி ஏவுகணைகள் பாக்கிஸ்த்தானைப் பதம் பார்க்கும் வல்லமை கொண்டவை. அக்னி - 5 சீனாவை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அக்னி - 5 ஏவுகணைகள் 5000கிமீ இற்கு அப்பால் சென்று தாக்கக் கூடியதாக இருக்கலாம். இலக்கை laser gyroscope தொழில் நுட்பம் மூலம் கண்டறிந்து தாக்கும் திறனை அக்னி - 5 ஏவுகணைகள் கொண்டிருக்கும். அக்னி - 4  3500கிமீ வரை சென்று தாக்கும் வல்லமை உடையது.இந்தியாவின் படை வல்லமையில் இது ஒரு மைல்கல்லாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
click on picture to enlarge..

உலகில் ஐக்கிய அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் மட்டுமே கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகளைப்(Inter-Continental Ballistic Missile) பாவிக்கும் திறன் கொண்டவை. வட கொரியா அண்மையில் பரிசோதித்த ஏவுகணை நிலத்தில் இருந்து ஏவப்பட்ட 90 நொடிகளில் வெடித்துச் சிதறியதால் பல படைக்கல விற்பன்னர்கள் தங்கள் கவனத்தை இந்தியாவின்பால் ஆர்வத்துடன் திருப்பியுள� ��ளனர்.
 
அக்னி-3 இன் தாக்கும் திறன்
 அக்னி - 5 ஆல் அமெரிக்கக் கண்டத்தைத் தவிர மற்ற நான்கு கண்டங்களையும் அணுக் குண்டால தாக்கும் வல்லமையை இந்தியா பெறும். ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை இதனால் வீச முடியும். இலகுவாக தெருவில் வைத்தும் ஏவக்கூடிய வகையில் அக்னி - 5 வடிவமைக்கப்பட்டுள்ளது. அகனி - 5 இன் அடுத்த கட்டமாக செய்மதிகளைக் அழிக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கலாம்.

2012 மார்ச் 5-ம் திகதி பாக்கிஸ்த்தான் Hatf-II battlefield range ballistic missile பரிசோதனையை வெற்றீகரமாக முடித்ததாக அறிவித்திருந்தது.

கடல� � தரை வான் ஆகிய மும் முனைகளிலும் இந்தியா அணுக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை அக்னி - 5 வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி - 5 மூன்று தட்டுக்கள் கொண்டதும் திரவ எரிபொருளில் இயங்கக் கூடியதுமாகும். அதன் மொத்த உயரம் 17 மீட்டர்கள்.
 மூன்று தட்டும் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து தேவையான உயரத்திற்கு செல்ல உதவும். முதல் தட்டு இயந்திரம் 40 கிமீ உயரத்திற்கும் இர� �்டாவது 150 கி மீ உயரத்திற்கும், மூன்றாவது 300 கி மீ உயரத்திற்கும் எடுத்துச் செல்லும்.

தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியா வல்லரசாக முன் நல்லரசாக வேண்டும் என்பதே.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி சீரற்ற கால நிலை காரணமக இன்று918/04/2012) இந்திய நேரப்படி மாலை 7-00 மணிக்கு ஏவவிருந்த அக்னி -5 பின் போடப்ப்ட்டுள்ளது.
ஏவுகணை வெற்றீகரமாக ஏவப்பட்டது: 19/04/2012 காலை இந்தியா தனது அக்னி - 5 ஏவு� ��ணையை வெற்றீகரமாக ஏவியது. பன்னாட்டு அணு ஆயுத மற்றும் ஏவுகணை ஒப்பந்தங்களை இந்தியா மீறுவதை மேற்குலக நாடுகள் கண்டும் காணாமல் விட்டுவிடுவதாகவும் இந்தியா தனது பலத்தை மிகைப்படுத்தி எண்ணக் கூடாது என்றும் சீன ஆளும் கட்சியின் ஏடு ஒன்று தெரிவித்தது/

http://tamilarai.blogspot.in


[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger