Sunday, 4 March 2012

விபத்தில் இருந்து உயிர் தப்பினார் வித்யா பாலன்

- 0 comments
 


கோல்கட்டா ரயில் நிலையத்தில் நடந்த படப்பிடிப்பின் போது, பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார். இந்தி படவுலகில் வளர்ந்து வரும் நடிகை வித்யா பாலன். இவர் சமீபத்தில் வெளியான, "டர்ட்டி பிக்சர் படத்தில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, அவர் தற்போது, "கஹானி என்ற இந்திப் படத்தில், கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு, கோல்கட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை நடந்தது.

அதில், நடிகை வித்யா பாலன் பிளாட்பாரத்தில் பின்னோக்கி செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்த எடை பார்க்கும் மெஷினில் மோதினார். இதனால், நிலை தடுமாறிய அவர், பிளாட்பாரத்தில் இருந்து, கீழே இருந்த ரயில் பாதையில் விழப் போனார்.
அவருக்கு அருகிலேயே, கேமராவுக்கு பின் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த, இயக்குனர் சுஜோய் கோஷ், வேகமாக ஓடிச் சென்று, கீழே விழாமல் வித்யாவை தாங்கிப் பிடித்தார். இதனால், வித்யா பாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரயில் பாதையில் விழுந்திருந்தால், அவர் தலையில் பலத்த அடிபட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் அல்லது அந்த நேரத்தில் ரயில் வந்திருந்தாலும், விபரீதம் ஏற்பட்டிருக்கும்.
[Continue reading...]

ஆதரிக்க மாட்டோம் - இந்தியா

- 0 comments


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.


குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை பலவீனப்படுத்தும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இணைய தளத்தில் இந்தியா வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் சர்வதேச கால மதிப்பீட்டின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

மாறாக தனிப்பட்ட ரீதியில் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக அமையாது என இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger