Sunday 11 August 2013

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் முழு அடைப்பு அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் Andhra complete blockage government employees on strike

- 0 comments

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில்
முழு அடைப்பு அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
Andhra complete blockage government
employees on strike

ஆந்திராவை இரண்டாக
பிரித்து தெலுங்கானா மாநிலம்
உருவாக்கப்படும் என மத்திய
அரசு அறிவித்ததற்கு கடலோர ஆந்திரா,
ராயலசீமா பகுதி மக்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில
பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த
ஆந்திர மாநிலமே நீடிக்க வேண்டும்
என்று வலியுறுத்தியது.
கடந்த 12 நாட்களாக கடலோர ஆந்திரா,
ராயலசீமா பகுதியில் கடை அடைப்பு,
சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற
பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இதனால் பள்ளி, கல்லூரிகள்
விடுமுறை விடப்பட்டது.
இன்று நள்ளிரவு முதல் போராட்டம்
தீவிரமாகிறது.
கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளடக்கிய
சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில்
பணியாற்றும்
அனைத்து அரசு துறை ஊழியர்களும்
இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற
வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள். இந்த
மாட்டங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம்
அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பஸ்
ஊழியர்கள், கூட்டுறவு, மின்சாரம்,
ஆசிரியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் என
அனைத்து பிரிவு ஊழியர்களும்
வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள். இதனால்
அத்தியாவசிய பணிகள் கூட பாதிக்கும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
பஸ் ஊழியர்கள்
நேற்று நள்ளிரவு முதலே பஸ்களை டெப்போக்களில்
நிறுத்தி விட்டனர். இதனால் இன்று பஸ்கள்
எதுவும் ஓடவில்லை. 123 டெப்போக்களில்
பணியாற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள்
70 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில்
ஈடுபடுவதால் பஸ் போக்குவரத்து முற்றிலும்
முடங்கி போனது.
பந்த் போராட்டத்தின் போதும் திருப்பதியில்
இருந்து திருமலைக்கு பஸ்
போக்குவரத்து நடப்பது உண்டு. ஆனால்
அவர்களும் வேலை நிறுத்தத்தில்
குதிக்கிறார்கள். மேலும் ஏழுமலையான்
கோவில் ஊழியர்களும் போராட்டத்தில்
ஈடுபடுகிறார்கள். இதனால் திருப்பதி வந்துள்ள
பக்தர்கள் பாதிக்கப்படக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் ரெயில்
போக்குவரத்து மட்டுமே நடப்பதால்
ரெயில்களில் கட்டுக்கடங்காத வகையில்
பயணிகள் நிரம்பி வழிகிறார்கள். ரெயிலில்
ஏறுவதற்கு நெரிசலும் தள்ளுமுள்ளும்
ஏற்படுகிறது. இடம் கிடைக்காதவர்கள் ரெயில்
ஜன்னல்களில் தொங்கியபடி பயணிக்கிறார்கள்.
பந்த் போராட்டம் காரணமாக காய்கறிகள்
விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
வெங்காயம் கிலோ 80
ரூபாய்க்கு விற்கப்படுகிறது

[Continue reading...]

திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி ராஜபக்சே: சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ பரபரப்பு பேட்டி Singapore ex PM accuses Rajabakshe has sinhaleese extremist

- 0 comments

இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத்
தீவிரவாதி.
அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின்
முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன
சிற்பியும், தற்போதைய பிரதமரின்
தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக
கூறியுள்ளார்.
லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற
தலைப்பில் லாஸ் ஏஞ்சலெஸை சேர்ந்த
பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம்
பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த நூலில்தான் ராஜபக்சே குறித்து லீ
குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலவரம்
குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ
குவான் யூ அளித்துள்ள பேட்டியில்
கூறியிருப்பதாவது:-
இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல்
இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும்
இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களர்களும்
இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை.
இலங்கை ஒற்றை நாடாக இருக்கும்
வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.
இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த
விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர்.
இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத்
தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர்
ராஜபக்சே கூறி வருகிறார்.
இதை மற்றவர்களும் நம்ப வேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க
மாட்டார்கள். சிங்களர்களுக்குப்
பயந்து ஓடி விடவும் மாட்டார்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின்
பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர்
ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக
அறிவேன். அவரது மனதை மாற்றவோ,
அவரைத்
திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார்
லீ.
இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை.
பெரும்பான்மையான சிங்களவர்கள்,
விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர்.
உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான
தமிழர்களை வெல்லும் தகுதியும்,
துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.
யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்
வெல்லவே முடியாது. அதனால்தான்
அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.
முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான்
ஆயுதப் போராட்டமாக வெடித்தது.
இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள்.
ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும்
அழித்த விட முடியும் என்ற அவர்களின்
எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான்
கருதுகிறேன்.
இலங்கையில்
இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான
ஒரு இன அழிப்பு என்பதில்
சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும்
ஆயுதப்
போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால்
சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம்
தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம்
காத்திருக்க மாட்டார்கள் என்றே நான்
கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள
அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட
தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட
வேண்டும். அதற்கு முற்றிலும்
தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா,
சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய்
இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள்
உள்ளிட்டோரும்தான் கடுமையாக
உழைக்கிறார்கள்.
அதேபோல இஸ்ரேலியர்களும்,
ஜப்பானியர்களும் மிகக் கடுமையான
உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள்
மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப்
போகிறது என்று கூறியுள்ளார் லீ.
இந்த நூலை முன்னணி பத்திரிகையாளரும்,
லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவருமான
பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம்
பேட்டி கண்டு எழுதியுள்ளார்.
இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ்
குழுமத்தைச்
சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத
சுமை என்று சிங்கப்பூரை மலேசியா தனியாக
கழற்றி விட்டது. அப்போது சிங்கப்பூர் மக்கள்
நிலை குலைந்து போனார்கள்.
ஆனால், அவர்களைத் தேற்றி,
தனது தலைமையில்
சிங்கப்பூரை இன்று அட்டகாசமான
பொருளாதார சக்தியாக மாற்றிய
பெருமைக்குரியவர் லீ குவான்
யூ என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

தலைவா தடைக்கு காரணம் சந்தானத்தின் 5 டயலாக்குகள்

- 1 comments

விஜய்யின் ‘தலைவா’ படம் சென்ஸார் சிக்கல்,
வரிச்சலுகை சிக்கல் என இரண்டு பெரிய
சிக்கல்களிலும்
மாட்டிக்கொண்டதற்கு அடிப்படை காரணமே அது முழு அரசியல்
படமாக இருந்தது தான்.
மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த அரசியல்
காட்சிகளும், அதிரடியான பஞ்ச்
டயலாக்குகளுமே ரிலீஸ் சிக்கலுக்கான
உண்மையான காரணம் என தெரிய
வந்துள்ளது.
அரசியல் ரீதியான பிரச்சனைகள்
தலைவா படத்தை நெருக்கியதால்
திட்டமிட்டபடி தலைவா படம்
இன்று தமிழ்நாட்டில் ரிலீஸாகவில்லை.
ஆனால் மற்ற மாநிலங்களிலும்,
வெளிநாடுகளிலும் படம் ரிலீஸாகி விட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் ‘தலைவா’
படத்தின் ரிலீஸ் சிக்கலுக்கு அதில்
இடம்பெற்றுள்ள ‘5’ அரசியல் பஞ்ச்
டயலாக்குகள் தான் முக்கிய காரணங்களாக
சொல்லப்படுகிறது.
ஏற்கனவே “உங்க ‘அம்மா’வை பாருடா,
அப்புறமா மத்த ‘அம்மா’வ பாக்கலாம்…”,
“எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க,
எனக்கு ஒட்டு போடுங்க, நான்
நல்லது செய்யுறேன்…”
ஆகிய 2 பஞ்ச் டயலாக்குகளுடன் படத்தில்
இன்னும் கூடுதலாக இருக்கும் 3
டயலாக்குகளுக்கும் கத்தரி போட
கட்டளை வந்திருக்கிறதாம்.
அதாவது படத்தின் ஒரு பாடல் காட்சியில்
“உன்னை மாதிரி ஆடிக்கிட்டுருந்தவங்க தான்
முதலமைச்சரா வந்திருக்காங்க.., நீயும்
நல்லா டான்ஸ் ஆடுற, அதனாலே நீயும்
முதலமைச்சரா ஆயிடுவே…” என்று சந்தானம்
ஒரு டயலாக் பேசுகிறாராம்.
படத்தில் உள்ள மற்றொரு காட்சியில்
“அண்ணா …
உங்களை மாதிரி நேர்மையா இருக்கிறவங்க
தான் ஆட்சிக்கு வரணும்…”, “இலவசம்
இலவசம்னு நாட்டை குட்டிச்சுவராக்கிட்டிருக்காங்க…”
என்று சத்யராஜ் இரண்டு டயலாக்குகள்
பேசுகிறாராம்.
மேற்படி ஆளும் அரசுக்கு எதிரான இந்த ‘5’
அரசியல் பஞ்ச் டயலாக்குகளுக்கும்
கத்தரி போட்டால் மட்டுமே அரசின்
வரிச்சலுகையும் கிடைக்கும், படமும்
ரிலீஸாகும் என்று அரசின் சார்பில்
திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் தற்போது கொடநாட்டில் இருக்கும்
தமிழக முதல்வர் வருகிற 12- ஆம் தேதி தான்
சென்னை திரும்புகிறாராம்.
அதன்பின்னரே விஜய்
அன்கோ முதல்வரை சந்திக்க முடியும்.
அப்படி சந்திக்கும் பட்சத்தில் அனேகமாக படம்
வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர
தினத்தன்று ரிலீஸாகும் என்று நம்பகமான
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[Continue reading...]

கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல் Weather Centre Information Rain with thunderstorms in the coastal districts

- 0 comments

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
ரமணன் கூறியதாவது:-
வெப்ப சலனம் காரணமாக தமிழ் நாட்டில்
பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும்
இந்த மழை நீடிக்கும். வடமாவட்டங்களில்
பரவலாகவும் தென் மாவட்டங்களில் ஒரு சில
இடங்களிலும் மழை பெய்யும்.
சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில்
இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger