Showing posts with label தினசரி செய்திகள். Show all posts
Showing posts with label தினசரி செய்திகள். Show all posts

Tuesday, 22 October 2013

அபுதாபியில் மசூதிக்கு பின்னழகை காட்டி போஸ் கொடுத்த பாடகி ரிஹான்னா வெளியேற்றப்பட்டார் Rihanna ordered to leave UAE mosque for improper pose

- 0 comments

அபுதாபியில் மசூதிக்கு பின்னழகை காட்டி போஸ் கொடுத்த பாடகி ரிஹான்னா வெளியேற்றப்பட்டார் Rihanna ordered to leave UAE mosque for improper pose

அபுதாபி, அக்.23-

அபுதாபியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்றுள்ள பிரபல பாப் இசை பாடகி ரிஹான்னா அங்குள்ள உலகின் பெரிய மசூதி என கருதப்படும் ஷேக் சயித் கிராண்ட் மசூதி வாசலில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்.

கருப்பு நிற உடையில் பளபளக்கும் சிகப்பு நிற லிப் ஸ்டிக் மற்றும் நகப்பூச்சு அணிந்திருந்த அவர் மசூதியின் முன் வாசலை நோக்கி பின்னழகை காட்டியபடி படுத்தும், அமர்ந்தும், முதுகை காட்டியபடி நின்றும் போஸ் கொடுத்தார்.

இதனையறிந்த மசூதி நிர்வாகம் ரிஹான்னாவை மசூதிக்குள் அனுமதிக்காமல் அவரை உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

அநாகரிகமான வகையிலும், மரியாதை குறையான முறையிலும் மசூதி நிர்வாகத்தினரிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் மசூதியின் புனிதத் தன்மையை களங்கப்படுத்தும் வகையில் புகைப்டங்களுக்கு போஸ் கொடுத்ததால் அவர் வெளியேற்றப்பட்டார் என மசூதி நிர்வாகம் அறிவித்துள்ளது.

எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டா கிராம் மூலம் ரிஹான்னா வெளியிட்டுள்ளார். அவற்றை பாராட்டியும் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

...

shared via

[Continue reading...]

புற்றுநோய் சிறப்பு வார்டுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்த பிரியங்கா சோப்ரா Priyanka Chopra donated Rs 50 lakh to a special ward for cancer

- 0 comments

புற்றுநோய் சிறப்பு வார்டுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்த பிரியங்கா சோப்ரா Priyanka Chopra donated Rs 50 lakh to a special ward for cancer

மும்பை, அக். 22-

மும்பை புறநகரில் உள்ள நானாவதி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவை நடிகை பிரியங்கா சோப்ரா திறந்து வைத்தார். அப்போது தந்தையின் நினைவாக, புற்றுநோய் வார்டு கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.

பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் இறந்தார். எனவே, புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த தொகையை பிரியங்கா சோப்ரா வழங்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா சோப்ரா, தன் தந்தையின் மறைவை கண்ணீர்மல்க நினைவு கூர்ந்தார். அவருக்கு நேர்ந்ததுபோல் மற்ற யாருக்கும் ஏற்படக்கூடாது என்று கூறிய பிரியங்கா, இந்த புற்றுநோய் சிறப்பு மையத்துடன் இணைந்து செயல்படுவதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.

தேர்தலில் பிரச்சாரம் செய்தால் மக்களிடம் எப்படி வாக்கு கேட்பர்கள்? என்று நிருபர்கள் கேட்டபோது, "நான் பிரதமர் ஆனால், நாட்டில் ஊழலை அறவே ஒழிப்பேன் என்று மக்களிடம் வாக்கு கேட்பேன்" என்றார் பிரியங்கா.

...

shared via

[Continue reading...]

Monday, 21 October 2013

சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பாக அரசிடம் உள்ள 64 ரகசிய கோப்புகளை மம்தா வழங்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை Nethaji family asks for files related to him

- 0 comments

சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பாக அரசிடம் உள்ள 64 ரகசிய கோப்புகளை மம்தா வழங்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை Nethaji family asks for files related to him

கொல்கத்தா, அக்.22-

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த 68 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத கல்முடிச்சாகவே இருந்து வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டெல்லியில் உள்ள மிஷன் நேதாஜி என்ற அமைப்பு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேதாஜியின் மரணம் தொடர்பான 33 கோப்புகளின் நகலை கேட்டு மனு செய்திருந்தது.

அந்த தகவல்களை அளித்தால் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவும், நாட்டின் இறையாண்மையும் பாதிக்கப்படும் என மத்திய அரசு கூறிவிட்டது.

நேதாஜி, தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கடந்த ஆண்டில் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், இவ்விவகாரத்தில் உதவிட அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கினார்.

இதுமட்டுமின்றி 1943ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்தபடியே இந்தியா இனி யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சுதந்திரமானவர்கள் என்று நேதாஜி பிரகடனம் செய்தார். இதற்கு 9 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த இருநிகழ்வுகளின் 70ம் ஆண்டு விழா நேற்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. ஜப்பானில் உள்ள நேதாஜியின் பற்றாளர்கள் சிலர் அவரது பெயரில் நேற்று புதிய இணையதளம் ஒன்றையும் துவக்கினர்.

கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தியாகிகள் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

இவ்விழாவில் பேசிய நேதாஜியின் உறவினர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ரகசிய கோப்புகளை மேற்கு வங்காள அரசிடம் உள்ளது. அவை நமக்கு கிடைத்தால் அவரைப் பற்றிய ஏராளமான தகவல்களை அறிய முடியும். ஆனால், இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நாங்கள் பலமுறை கடிதங்கள் எழுதி விட்டோம்.

ஒரு கடிதத்திற்கு கூட அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாநில அரசே நேதாஜியின் வாழ்க்கை பற்றிய தகவல்களை அளிக்க மறுத்து விட்டால்.. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எவ்வாறு பெற முடியும்?

மாநில அரசும், மத்திய அரசும் நேதாஜி தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து கோப்புகளையும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

...

shared via

[Continue reading...]

இந்தியாவின் 25 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்கு: 2 வீரர்கள் படுகாயம் Pak fires at 25 Indian border posts

- 0 comments

இந்தியாவின் 25 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்கு: 2 வீரர்கள் படுகாயம் Pak fires at 25 Indian border posts

ஜம்மு, அக். 21-

காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் நேற்றிரவும் ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர்கள் நேற்றிரவு முழுவதும் ஜம்மு, சம்பா, கத்துவா செக்டர்களின் 190 கி.மி. சர்வதேச எல்லை அருகே உள்ள ஆர்.எஸ். புரா, ராம்கார், கனாசக், அர்னியா, செகினெக் உள்ளிட்ட 25 ராணுவ நிலைகள் மீது துப்பாக்கி மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் ஜம்மு நகரின் சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.  

இதுமட்டுமில்லாமல், பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எல்லை அருகிலுள்ள கிராமங்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் உயிருக்கு பயந்த அப்பகுதி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிவிட்டனர். அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க தலையிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதல்கள்களை அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த 8 வருடங்களில், இந்த ஆண்டு முதல் முறையாக 140 முறை எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதி அருகே பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு பதிலளிக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சனி இரவும் 14 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதிலும் இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். இப்பகுதிகளை நாளை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே பார்வையிடுகிறார்.

...

shared via

[Continue reading...]

மணலியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி atm machine break attempt robbery in manali

- 0 comments

மணலியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி atm machine break attempt robbery in manali

திருவொற்றியூர்,அக். 21–

மணலி, காமராஜர் சாலையில் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை. இன்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்றவர்கள் எந்திரம் உடைந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் குத்தி உடைத்து இருப்பது தெரிந்தது. பணத்தை எடுக்க முடியாததால் அவர்கள் திட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர். இதனால் பல லட்சம் பணம் தப்பியது.

அங்கிருந்த ரகசிய காமிராவை போலீசார் ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

கொள்ளை கும்பல் ரகசிய காமிரா இருப்பதை கவனிக்காததால் அதனை சேதப்படுத்தாமல் சென்றுள்ளனர்.

...

shared via

[Continue reading...]

இன்று 4–வது நாளாக தேடுதல்வேட்டை: தங்கபுதையல் சாமியாருக்கு நரேந்திரமோடி ஆதரவு Modi to support the priest gold treasure

- 0 comments

இன்று 4–வது நாளாக தேடுதல்வேட்டை: தங்கபுதையல் சாமியாருக்கு நரேந்திரமோடி ஆதரவு Modi to support the priest gold treasure

அலகாபாத், அக்.21–

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஷோபன்சர்க்கார் என்பவர், ராஜா ராவ்ராம் பக்சிங் தன் கனவில் தோன்றி உன்னாவ் பகுதியில் உள்ள தமது கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்து இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

அந்த 1000 டன் தங்கத்தை அரசு தோண்டி எடுக்க வேண்டும் என்று அவர் கடந்த சில ஆண்டுகளாக கூறி வந்தார்.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அந்த கோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் தேடும் பணியை தொடங்கியது. ஜேசிபி எந்திரங்கள் மற்றும் ஆழ்துளை கருவிகள் மூலம் கோட்டை பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதா என்று தேடப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இன்று (திங்கட்கிழமை) 4–வது நாளாக தங்கம் தேடும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே 1000 டன் தங்கம் தேடப்படுவதை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் இதுபற்றி கூறுகையில், ''1000 டன் தங்கம் தேடுவதை எல்லா நாடுகளும் உற்றுப் பார்க்கின்றன. இது தேவை இல்லாதது. அங்கு தங்கம் தோண்டுவதை விட்டு விட்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள 1000 டன்னுக்கு மேல் உள்ள தங்கத்தை திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

மோடியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து சாமியாரை அவர் அவமதித்து விட்டதாக கூறப்பட்டது.

சில இந்து அமைப்புகள் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி தங்கள் அதிருப்தியை வெளியிட்டன.

இதையடுத்து நரேந்திர மோடி உத்தரபிரதேச சாமியாருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ''கடந்த பல ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்கள் கோபன் சர்க்கார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது தியாகத்துக்கு நான் தலைவணங்குகிறேன்'' என்று கூறியுள்ளார்.

...

shared via

[Continue reading...]

Sunday, 20 October 2013

மாணவர்களை கற்பழித்த ஆசிரியை! – மாணவனை பலாத்கரித்த அதிபர்! (படங்கள் இணைப்பு)student rape by teacher

- 0 comments

மாணவர்களை கற்பழித்த ஆசிரியை! – மாணவனை பலாத்கரித்த அதிபர்! (படங்கள் இணைப்பு)

North Carolina வை சேர்ந்த 49 வயதாகும் David Ellis Edwards என்ற Douglas Byrd நடுத்தர பாடசாலையின் அதிபர், மாணவனை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். 

இவரது அலுவலக வாசலின் முன்னர் அம் மாணவனது பெற்றோர் காத்திருந்த வேளையில், தனது அலுவலகத்தினுள் இவ் வக்கிர செயலை புரிந்துள்ளமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர்மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல மாணவர்களை இவர் துஷ்பிரயோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்றம் இவருக்கு $140,000 பிணை விதித்துள்ளது.

இந் நிலையில்…

Grand Rapids பாடசாலை ஆசிரியை ஒருவர், தன்னிடம் கல்விபயின்ற 15 – 16 வயதுகளுக்கு இடைப்பட்ட நான்கு மாணவர்களை பலாத்காரம் செய்தமை தொடர்பில் கைதாகியுள்ளார்.

தற்போது பாடசாலையில் இருந்து பதவி நீக்கப்பட்டிருக்கும் இவர், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு 8 – 15 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டணை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

shared via

[Continue reading...]

தேதி அறிவித்த பின் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு: சீமான் பேட்டி After announced coalition parliamentary election date seeman Interview

- 0 comments

தேதி அறிவித்த பின் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு: சீமான் பேட்டி After announced coalition parliamentary election date seeman Interview

மயிலாடுதுறை, அக்.21–

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில் கலந்துகொள்ள வருகை தந்த கட்சியின் தலைவர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை கண்டித்து வருகிற 23ந் தேதி(புதன்கிழமை) குடவாசலில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் திரளான விவசாயிகள், கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த மாதம் 8, 9ந் தேதிகளில் பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தமிழ் தேசிய இயக்க அமைப்பாளர் பழ.நெடுமாறன், நடராசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நரேந்திரமோடி பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனியார் மயம், பொருளாதார கொள்கை மட்டுமே பேசுகிறார்.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து இதுவரை பேசவில்லை. கச்சத்தீவில் சீனா முகாமிட்டுள்ளது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் கலியபெருமாள், சாகுல்அமீது, நடராசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

...

shared via

[Continue reading...]

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை Aravind Kejriwal takes door to door campaign in Delhi

- 0 comments

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை Aravind Kejriwal takes door to door campaign in Delhi

புதுடெல்லி, அக்.21-

டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போதைய டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

பழைய டெல்லி பகுதியில் உள்ள வாக்காளர்களை நேற்று (ஞாயிறு) வீடுவீடாக சென்று சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் துடைப்பம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவரை சூழ்ந்துக் கொண்ட அப்பகுதி மக்கள் மின் கட்டணம், குடிநீர் மற்றும் வடிகால் கட்டணங்களை டெல்லி அரசு உயர்த்திவிட்டது தொடர்பாக கவலை தெரிவித்தனர்.

அவற்றை பொறுமையாக கேட்டுக்கொண்ட கெஜ்ரிவால், எங்கள் கட்சியின் ஆட்சி அமைந்தால் உயர்த்தப்பட்ட கட்டணங்களை அனைத்தும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

காரில் செல்லாமல் ஆட்டோவில் சென்று வாக்காளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவாலை பல பெண்கள் துடைப்பத்தை உயர்த்தி காட்டி வரவேற்றனர்.

அரசியலில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காகவே துடைப்பத்தை என் கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தாலும், துடைப்பத்தை உயர்த்தி காட்டி அவரை பெண்கள் வரவேற்பது தர்மசங்கடமாக உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

...

shared via

[Continue reading...]

மழை பனிக் காலத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக எல்லையோரம் பதுங்கியுள்ள 700 பாக். தீவிரவாதிகள் 700 Pakistan militants ready to infiltrate Indian border

- 0 comments

மழை பனிக் காலத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக எல்லையோரம் பதுங்கியுள்ள 700 பாக். தீவிரவாதிகள் 700 Pakistan militants ready to infiltrate Indian border

ஜம்மு, அக்.21-

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் எல்லையோரம் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 150 முறைக்கும் மேலாக இதுபோன்ற தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஆரம்பத்தில் சிறிய அளவிலான துப்பாக்கி சூட்டில் மட்டுமே ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தற்போது ராக்கெட் மற்றும் மோர்டார் குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எல்லைக் கோட்டுப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாகிஸ்தானின் அசுர தாக்குதலுக்கு பயந்து ஊரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

எல்லை பகுதியை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நாளை (22ம் தேதி) நேரில் சென்று பார்வையிட உள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ஆர்.எஸ்.புரா செக்டரில் உள்ள 5 ராணுவ நிலைகளின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

இரவு 9 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி தந்ததாகவும் இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்ததாகவும் ஜம்முவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டின் அருகேயுள்ள பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் 40 தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் சுமார் 700 பேர், அடைமழை மற்றும் உறைபனி காலத்தை எதிர்நோக்கி இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக காத்திருப்பதாக நம்பத்தகுந்த உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

...

shared via

[Continue reading...]

Friday, 4 October 2013

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக சந்தானம் பாடும் பாடல் “சரக்கடி நண்பா நீ சரக்கடி” sivakarthikeyan and santhanam song in movie

- 0 comments

"சரக்கடி நண்பா நீ சரக்கடி" சந்தானத்தின் குரலில் உருவான பாடல்

by abtamil

நகைச்சுவை நடிகர் சந்தானம் முதன் முறையாக முழுப்பாடலை பாடியுள்ளார்.

ஸ்ரீகாந்த்- சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் படத்தில் நம்பியார் என்ற படத்தில் தான் பாடலை பாடியுள்ளார்.

விவேகாவின் எழுத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் பாடி அசத்தி உள்ளார்.

சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா, இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார்.

ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத கதைக்களம், அதற்காக வெறும் நகைச்சுவையை மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல.

சந்தானம் சார் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் மற்ற படங்களுக்கும் இந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

படத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் வரும் பாடலை யாரை வைத்துப் பாட வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, விஜய் அண்டனி சார் சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார்.

சந்தானம் மறுத்துவிடுவார் என்றுதான் நினைத்தோம். ஆனால் சந்தோஷமாக பாட வந்துவிட்டார்.

ஐந்து மணி நேரம் எடுக்கும் என்று நினைத்த பாடலை பதினைந்து நிமிடங்களில் முடித்துக்கொடுத்துவிட்டார்.

'ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி' என்று ஆரம்பிக்கும் வரிகள்.

மனதுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் ஒரு போர் என்று சொல்லலாம் அந்த காட்சியை.

அதுவரை தன் நண்பர்கள் தண்ணியடித்தால் கோக்கை வாங்கி வைத்துக்கொண்டு கம்பனி கொடுக்கும் ஸ்ரீ முதல்முறையாக தண்ணியடிக்கும் சங்கடமான சூழ்நிலை.

இந்த காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு செமையா பொருந்தி வந்திருக்கு என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் கூறுகையில், சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக்கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார்.

அவரது நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்றும், சந்தானத்துக்கு நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Show commentsOpen link

[Continue reading...]

விஜய்யுடன் ரொமான்சில் புகுந்து விளையாடும் காஜல் vijay romance with kajal agarwal

- 0 comments

விஜய்யுடன் ரொமான்சில் புகுந்து விளையாடும் காஜல்

by abtamil

விஜய்யுடன் எனக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார் காஜல் அகர்வால்.

துப்பாக்கி படத்தையடுத்து விஜய்யும், காஜல் அகர்வாலும் ஜோடி சேர்ந்துள்ள படம் ஜில்லா.

முந்தைய படம் ஆக்ஷன் கதையில் உருவானதால், அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் அதில் மிகவும் குறைவாக இருந்தன.

ஜில்லாவில் இந்த குறை இருக்க கூடாது என்பதற்காக விஜய்-காஜல் ஜோடியின் காதல் காட்சிகள் அதிக அளவில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

தமிழில் தனக்கு போட்டி அதிகமாகி விட்டதால் காஜலும் இந்த படத்தில், காதல் காட்சிகளில் கூடுதல் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறாராம்.

மேலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான சில காட்சிகளையாவது படத்தில் வையுங்கள் என இயக்குனரிடம் கெஞ்சி கேட்டு அதுபோன்ற காட்சிகளில் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் எனக்கும், விஜய்க்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். ரசிகர்களுக்கு இது விருந்தாக இருக்கும் என்கிறாராம் காஜல்.

Show commentsOpen link

[Continue reading...]

இங்கிலாந்தில் கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம் blind man gets vision through tooth transplant

- 0 comments

இங்கிலாந்தில் கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம் blind man gets vision through tooth transplant

Tamil NewsYesterday,

லண்டன், அக். 5-

1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்தது. அடிப்பட்ட கண்ணில் அடிக்கடி வலியுடன் நீர் வடியும் நிலையில் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

நாளடைவில், அந்த கண்ணின் பார்வை சுத்தமாக பறிபோனது. இதனால் அவர் வேலையை விட்டு நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலை ஏற்பட்டது.

அவரது இடது கண்ணின் பார்வையும் ஓரிரு ஆண்டில் பறிபோனதால், உலகமே இருண்ட நிலையில் சூன்ய பிரதேசத்தில் வசிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

புரட்சிகரமான ஓர் அறுவை சிகிச்சையின் மூலம் இயான் டிபெட்சுக்கு மீண்டும் கண்ணொளியை ஏற்படுத்த பிரைட்டனில் உள்ள சுசெக்ஸ் கண் ஆஸ்பத்திரியின் பேராசிரியர் கிரிஸ்டோபர் லியு முடிவு செய்தார்.

இதன்படி, அவரது தாடையின் ஒரு பகுதியையும், முன் பல்வரிசையில் ஒன்றையும் டாக்டர்கள் அகற்றினர்.

தாடையை தொட்டிலாக்கி, அதில் பல்லை இணைத்து அவரது கன்னப் பகுதியில் பொருத்தி விட்டனர். அந்த பல்லில் அதிநவீன காண்டாக்ட் லென்சை இணைத்து 3 மாதங்களுக்கு அப்படியே விடப்பட்டது.

இதற்கிடைப்பட்ட காலத்தில் அந்த புதிய இணைப்பில் திசுக்களும் ரத்த நாளங்களும் வளரத் தொடங்கின.

அதை அப்படியே மொத்தமாக எடுத்து அவரது வலது கண்ணுக்குள் திணித்து, மூளைக்கு செல்லும் நரம்பு மண்டலத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த நவீன அறுவை சிகிச்சை நடந்த சில வாரங்களில் கண்ணொளி திரும்பப் பெற்று பழைய மனிதராக இயான் டிபெட்ஸ் தற்போது நடமாட தொடங்கி விட்டார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

சிறுநீரை குடிக்கச் சொல்லி என்னை கொடுமைப்படுத்தினார்: டெல்லியில் மீட்கப்பட்ட வேலைக்கார சிறுமி பேட்டி rescued delhi girl accuses of making to drink urine

- 0 comments

சிறுநீரை குடிக்கச் சொல்லி என்னை கொடுமைப்படுத்தினார்: டெல்லியில் மீட்கப்பட்ட வேலைக்கார சிறுமி பேட்டி rescued delhi girl accuses of making to drink urine

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக். 5-

வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டாள்.

சிறுமியின் கூக்குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து உடல் முழுக்க காயங்களுடன் மிக மோசமான நிலையில் இருந்த அந்த பரிதாபத்திற்குரிய சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் என்னை வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருந்த முதலாளி அம்மா, சற்று நேரம் கூட ஓய்வு தராமல் தொடர்ந்து என்னிடம் வேலை வாங்கி வந்தார்.

நான் செய்த வேலையில் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் அவர் சூடு போட்டும், பெல்ட், பிரம்பு போன்றவற்றால் அடித்தும் சித்ரவதை செய்வார். சில வேளைகளில் வெட்டுக்கத்தியால் தாக்கியும் கொடுமை படுத்துவதுண்டு என்று கூறினார்.

அவர் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை அந்த சிறுமியின் தலை மற்றும் உடலில் உள்ள வெட்டு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய வந்தனா திர் என்ற 50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை சந்தித்த டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை மந்திரி கிரண் வாலியா, சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியுள்ளார்.

தற்போது ஆஸ்பத்திரியில் உடல்நலம் தேறிவரும் அந்த பெண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

'என்னை கத்தி, நாய் சங்கிலி, தோசைக்கல் போன்வற்றால் அடித்து கொடுமைப்படுத்திய எஜமானி தனது சிறுநீரை குடிக்கச் சொல்லியும் என்னை கொடுமைப்படுத்தினார்.

கழிவறையிலேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கியும் நான் அவதிப்பட்டேன்' என்று அவர் கூறினார்.

டெல்லியில் கடந்த ஆண்டு 13 வயது வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு முதலாளி குடும்பத்தினர் தாய்லாந்து சுற்றுலா சென்றதும், பூட்டிய வீட்டினுள் பல நாட்கள் தனியாக தவித்த அந்த சிறுமியை போலீசார் மீட்டதும் நினைவிருக்கலாம்.
...
Show commentsOpen link

[Continue reading...]

16 வயதினிலே ரஜினி கமல் நட்பு மாறவில்லை 16 vayathinile rajini kamal friendship

- 0 comments

எங்கள் நட்பு மாறவில்லை: கமல்
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் .

16 வயதினிலே டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பங்கேற்று பேசியதாவது:–

16 வயதினிலே அப்போது பெரிய வெற்றி படமாக அமைந்தது. 36 வருடங்கள் கழித்து அந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இங்கே விழா எடுக்கப்படுகிறது. 16 வயதினிலே அற்புதமான படம். அதில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள். அதை மீண்டும் நினைவூட்டுவது போல் இவ்விழா இருக்கிறது. இந்த படத்தில் இருந்த எல்லோருமே வெற்றி கண்டு இருக்கிறார்கள். இளையராஜா இசை சிறப்பாக இருந்தது. நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே 'ஸ்லோ மோஷன்' காட்சி இப்படத்தில் இருந்தது. தயாரிப்பாளர் எல்லாவற்றையும் கொட்டி இந்த படத்தை எடுத்தார்.

இப்படத்தின் முதல் நாயகன் பாரதிராஜாதான். படம் எடுத்தபோது சிலர் எதிர்மறை கருத்துக்கள் சொன்னார்கள். தயாரிப்பாளர் நிலையை நினைத்து பயந்தேன். ஆனால் படம் வெற்றி பெற்றது. அதை மீண்டும் ரிலீஸ் செய்ய நடக்கும் இது போன்ற விழா அரிதான ஒன்று.

துவக்கத்தில் நானும் ரஜினியும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்தோம். பிறகு முதலீடு காரணமாக பிரிந்தோம். ரஜினி ஆரம்ப காலத்தில் எங்கு தங்கினார் என்று தெரியாது. ஒரு படம் முடிந்ததும் வேறு படத்துக்கு போக வண்டி வரும். வண்டியிலேதான் தங்கினாரா என்று நினைக்க தோன்றியது. 16 வயதினிலே படத்தில் நடித்தபோது எங்களுக்கு சில ஆயிரங்கள்தான் சம்பளம் கிடைத்தது. அப்போது ரஜினி எப்படி இருந்தாரோ அப்படித்தான் 10 வருடங்களுக்கு முன்பும் இருந்தார். இன்றும் அப்படியே தான் இருக்கிறார்.

இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதற்கான பெருமை எங்கள் இருவரையுமே சாரும். நான் உங்களுக்கு செய்த நட்பு நீங்கள் செய்த அன்பின் பலம். இந்த விழாவில் இளையராஜாவும் ஸ்ரீதேவியும் பங்கேற்று இருந்தால் சந்தோஷமாக இருந்து இருக்கும். அவர்கள் சார்பில் நாங்கள் வந்து இருக்கிறோம். எனக்கு நல்ல நண்பர்களும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு கமல் பேசினார்.

The post எங்கள் நட்பு மாறவில்லை: கமல் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

இதுதான் ‘கயல்’ படத்தின் கதையாம்? லீக்கான விசயம்! Movie kayal story

- 0 comments

இதுதான் 'கயல்' படத்தின் கதையாம்? லீக்கான விசயம்!

by abtamil
Tamil newsToday,

'கும்கி' படத்துக்கப்புறம் ரொம்ப கேப் விட்டதால பிரபுசாலமன் அடுத்து சுனாமியைப் பத்தித்தான் படமா எடுக்கப்போறார்னு சொன்னாங்க, ஆனா சுனாமி எப்போ வரும்ணே தெரியாத மாதிரி அவர் அடுத்த படத்தை எப்போ ஆரம்பிப்பார்ங்கிற விஷயமே தெரியாம இருந்தது தான் மிச்சம்.

திடீர்னு ஒருநாள் 'கயல்'ங்கிற பேர்ல ஒரு படத்தை ஆரம்பிச்சி அதற்கான ஆரம்ப விழாவுல பிரஸ் பீப்புளை மீட் பண்ணினார்.
பிரஸ்மீட்ல படத்தோட டைட்டில், ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன்களை மட்டும் தான் செய்தியாச் சொன்னாரே தவிர ஒரு ரெண்டு வரிக்கூட செய்தி எழுதுறக்கு படத்தைப் பத்தி எந்த விஷயத்தையும் அவர் சொல்லல.

ஹீரோ சந்திரன், ஹீரோயின் அனந்தின்னு மட்டும் சொல்லிட்டு வழக்கம் போல ஒரு வரிச் சொன்னாக்கூட படத்தொட கதை 'லீக்'காயிடும்ணு எஸ்கேப் ஆயிட்டார்.

ஆனா இந்தப்படத்துல கண்டிப்பாக காதல் இருக்கும்னு மட்டும் சொன்னார். அப்படி பொத்தி பொத்தி வெச்ச 'கயல்' படத்தோட கதை லீக்காயிருக்கு.

அதாவது மைனா படத்தை காடும், காடு சார்ந்த இடங்களுமாக காட்டிய பிரபு சாலமன், அடுத்த படமான கும்கியில மலையும் மலை சார்ந்த இடங்களுமா காட்டினார். இப்போ இந்தப்படத்துல கடலும் கடல் சார்ந்த இடங்களுமாக திரைக்கதையை அமைச்சிருக்காராம்.

நகரும் கதைங்கிறதுனால நாகர்கோவில்ல தொடங்கி கன்னியாகுமரி, சென்னை, மைசூர், சிமோகா, மேகாலயா, லால், லடாக்குன்னு டோட்டல் இந்தியாவையும் ஒரு ரவுண்டு வரப்போறாராம் பிரபு சாலமன்.

சரி கதைக்குள்ள வருவோம்…
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு சொன்ன வில்லேஜ்ல உள்ள பொண் தான் படத்தோட ஹீரோயின் கயல்விழி. மின்சாரம்கூட இல்லாத குடிசையில் வாழ்கிறவள். அப்பாவும் அம்மாவும் விவசாய கூலிகள்.

காதல் என்கிற வார்த்தையை கூட அறிந்திருக்காத ஆனந்திக்கு உள்ளூர் இளைஞன் சந்திரன் மேல காதல் வருகிறது. காதல் ஹை-ஸ்பீடுல போய்க்கிடுக்கிற நேரத்துல தான் விவசாயம் பொய்த்துப் போய் கொடிய பஞ்சம் வருது. அதனால பஞ்சம் பிழைக்கிறதுக்காக ஆனந்தியின் குடும்பம் வடநாட்டுக்குச் செல்கிறது.

காதலர் இருவரும் திசைக்கு ஒருவராக பிரிக்கப்படுகிறார்கள். காதலன் நம்மை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் ஆனந்தியும், அவளை எப்படியாவது கண்டுபிடித்து கரம் பிடிப்பது என்று காதலன் சந்திரனும் தங்களோட பயணத்தை தொடர்கிறார்கள்.

ஆனந்தி எங்கிருக்கிறாள் என்பது தெரியாமல் அவளை இந்தியா முழுவதும் தேடுகிறான் சந்திரன். அவளை கண்டுபிடித்தானா, கரம் பிடித்தானா என்பதுதான் கயல் படத்தின் கதையாம்.

பொத்தி பொத்தி வெச்ச கதை லீக்காயிடுச்சி என ஒரு பக்கம் பேச்சிக்கொண்டிருக்க, இதுதான் கதையா என்பது பிரபுசாலமனுக்கே வெளிச்சம்.

Show commentsOpen link

[Continue reading...]

விஜயின் நடனத்தைப் பார்த்து நடுநடுங்கி விட்டேன்- அமலாபால் vijay dance with amalapaul

- 0 comments

விஜயின் நடனத்தைப் பார்த்து நடுநடுங்கி விட்டேன்: அமலாபால்

by abtamil
Tamil newsToday,

சென்னை: தலைவா படத்தில் நடிக்கும் போது, விஜயின் நடனத்தைப் பார்த்து தனக்கு உள்ளூர நடுக்கம் உண்டானதாகத் தெரிவித்துள்ளார் அமலாபால். இயக்குநர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் ஜோடியாக அமலாபால் நடித்திருந்தப் படம் 'தலைவா'. படம் ரிலீசாவதில் பலப் பிரச்சினைகளைச் சந்தித்தப் போதும், அமலாவின் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது.

அத்தோடு, தற்போது தனுஷுடன் வேலையில்லாப் பட்டதாரி படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். அந்தவகையில் விஜயுடன் தலைவாவில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார் அமலா. அதில் 'சிறு வயதிலிருந்தே தான் விஜயின் தீவிர ரசிகை என்றும், இவ்வளவு சீக்கிரத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விஜயுடன் நடனக் காட்சிகளில் நடிப்பது குறித்து உள்ளூர படபடப்பாக இருந்ததாம். இது குறித்து அமலா பால் கூறுகையில், 'விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது' எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது ஆஸ்தான நாயகர்களில் ஒருவரான விஜயுடன் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக இயக்குநர் விஜய்க்கும் தனது நன்றியை தெரிவித்தார் அமலாபால்.

Show commentsOpen link

[Continue reading...]

கன்னியாஸ்திரியாக மாற நயன்தாரா முடிவு மூன்றாவது காதலும் தோல்வி nayanthara 3rd love news

- 0 comments

மூன்றாவது காதலும் தோல்வியா..? கன்னியாஸ்திரியாக மாற நயன்தாரா முடிவு.

by abtamil
Tamil newsToday,

சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவரையும் வெறித்தனமாக காதலித்த நயன் தாரா, பின்னர் காதல் தோல்வி அடைந்தபின், மிகவும் கலங்கினார். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு வர பல மாதங்கள் ஆகியது. 
தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக காதலில் தோல்வி அடைந்துள்ளதால் இனி என் வாழ்வில் காதலே இல்லை. நான் விரைவில் கன்னியாஸ்திரியாக மாறப்போகிறேன் என தனக்கு நெருங்கிய தோழிகளிடம் கூறியுள்ளார். இதனால் தென்னிந்திய படவுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம்.நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். தற்போது மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார்
 ராஜா ராணி ஷூட்டிங்கிற்கு இடையே ஆர்யாவுடன் நெருங்கி பழகினார் நயன் தாரா. இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு டாக் பரவிப்போனது. அந்த சமயத்தில்தான் நயன், மீண்டும் பழைய நயனாக மாறி கலகலப்பாக இருந்தார்.
வழக்கம்போல் ஆங்கில மீடியாவுக்கு மட்டுமாவது பேட்டிகளை கொடுத்தார். ராஜா ராணி ஷூட்டிங் முடிந்தபோதுதான் வந்தது சோதனை. அனுஷ்கா ரூபத்தில். ஐதராபாத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது தெரிந்து நயன்தாரா நொறுங்கிப்போனார் என்கிறது அவருக்கு வேண்டப்பட்ட வட்டாரம்.
 

Show commentsOpen link

[Continue reading...]

Thursday, 3 October 2013

லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: அப்துல்கலாம் அறிவுரை Abdulkalam advice students have to work hard to achieve goal

- 0 comments

லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: அப்துல்கலாம் அறிவுரை Abdulkalam advice students have to work hard to achieve goal

Tamil NewsYesterday,

சேலம், அக்.4-

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுடன் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசியதாவது:-

பசுமை நிறைந்த மரங்கள் இருப்பதினால் மட்டுமே தூய்மையான காற்று நமக்கு கிடைக்கிறது. பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 5 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு மரக்கன்றுகளை நாம் நட்டுவந்தால் பசுமையான நாடாக நம்நாடு மாறும். மாணவர்கள் படித்துமுடித்த பிறகு நாம் படித்த பள்ளியையும், நமக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் மறந்துவிடக்கூடாது.

ஒவ்வொரு இளைஞர்களும் கனவு காண வேண்டும். அதாவது உறக்கத்தில் வருவது இல்லை கனவு! உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு!. வாழ்வில் வெற்றிடைய ஒவ்வொருவரும் இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும். அதாவது மிகவும் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும். மற்றொன்று கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதிவேண்டும். தோல்விக்கு விடை கொடுத்து லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.

1930-40 ல் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான் 5-ம் வகுப்பு படித்தேன். எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யர். அப்போது பள்ளியின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதை காணமுடியும். அந்த ஆசிரியரின் முகத்திலே அறிவு ஒளி தெரியும். தூய்மை பிரதிபலிக்கும். இதற்கு மேல் மாணவனுக்கு என்ன தேவை. நல்ல ஆசிரியர் கிடைத்துவிட்டால் மாணவர்கள் கல்வியிலும், வாழ்விலும் வெற்றிபெறலாம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்லுறவு இருப்பது அவசியம். கல்வி நிறுவனங்கள் என்பது தொழில் மையமாக இருக்கக்கூடாது.

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பரவூர் கிராமத்தில் நடந்த விஞ்ஞானம் மூலம் மக்களை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அந்த கிராமத்தில் 2,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்க வைப்பதாக அக்கிராமத்தில் உள்ளவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். அப்போது 12 மாணவர்களை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு மாணவனிடம் கேள்வி கேட்டேன்.

அதில், எனக்கு உளவியல் படிக்க ஆசை என்றும், ஆனால் எனது பெற்றோர்கள் தொழிற்கல்வி படிக்க ஆசைப்படுவதாகவும் கூறினான். இதற்கு நான், பெற்றோர் உன்னை நேசிப்பதால் அப்படி விரும்புகிறார்கள் என்று கூறினேன். உடனே கூட்டத்தில் இருந்த அந்த மாணவனின் பெற்றோர் எழுந்து நின்று, மகன் விருப்பப்படியே உளவியல் படிக்க வைப்பதாக தெரிவித்தார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால், அன்பும், அரவணைப்பும் மாணவர்களுக்கு கட்டாயம் தேவை.

இன்னமும், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மன உறுதியுடன் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக வேண்டும் கோர்ட்டு உத்தரவு Defamation case Actress Anjali must appear directly court order

- 0 comments

டைரக்டர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு: நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக வேண்டும் கோர்ட்டு உத்தரவு Defamation case Actress Anjali must appear directly court order

Tamil NewsYesterday, 05:30

எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கூறியிருந்தார்.

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்றும் கூறி டைரக்டர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி முன் வந்தது. அப்போது நடிகை அஞ்சலி தரப்பு வக்கீல் முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், நடிகை அஞ்சலி இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். அதற்கு டைரக்டர் களஞ்சியம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு நகலை பெற நடிகை அஞ்சலி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger