இதுதான் 'கயல்' படத்தின் கதையாம்? லீக்கான விசயம்!
by abtamil
Tamil newsToday,
'கும்கி' படத்துக்கப்புறம் ரொம்ப கேப் விட்டதால பிரபுசாலமன் அடுத்து சுனாமியைப் பத்தித்தான் படமா எடுக்கப்போறார்னு சொன்னாங்க, ஆனா சுனாமி எப்போ வரும்ணே தெரியாத மாதிரி அவர் அடுத்த படத்தை எப்போ ஆரம்பிப்பார்ங்கிற விஷயமே தெரியாம இருந்தது தான் மிச்சம்.
திடீர்னு ஒருநாள் 'கயல்'ங்கிற பேர்ல ஒரு படத்தை ஆரம்பிச்சி அதற்கான ஆரம்ப விழாவுல பிரஸ் பீப்புளை மீட் பண்ணினார்.
பிரஸ்மீட்ல படத்தோட டைட்டில், ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன்களை மட்டும் தான் செய்தியாச் சொன்னாரே தவிர ஒரு ரெண்டு வரிக்கூட செய்தி எழுதுறக்கு படத்தைப் பத்தி எந்த விஷயத்தையும் அவர் சொல்லல.
ஹீரோ சந்திரன், ஹீரோயின் அனந்தின்னு மட்டும் சொல்லிட்டு வழக்கம் போல ஒரு வரிச் சொன்னாக்கூட படத்தொட கதை 'லீக்'காயிடும்ணு எஸ்கேப் ஆயிட்டார்.
ஆனா இந்தப்படத்துல கண்டிப்பாக காதல் இருக்கும்னு மட்டும் சொன்னார். அப்படி பொத்தி பொத்தி வெச்ச 'கயல்' படத்தோட கதை லீக்காயிருக்கு.
அதாவது மைனா படத்தை காடும், காடு சார்ந்த இடங்களுமாக காட்டிய பிரபு சாலமன், அடுத்த படமான கும்கியில மலையும் மலை சார்ந்த இடங்களுமா காட்டினார். இப்போ இந்தப்படத்துல கடலும் கடல் சார்ந்த இடங்களுமாக திரைக்கதையை அமைச்சிருக்காராம்.
நகரும் கதைங்கிறதுனால நாகர்கோவில்ல தொடங்கி கன்னியாகுமரி, சென்னை, மைசூர், சிமோகா, மேகாலயா, லால், லடாக்குன்னு டோட்டல் இந்தியாவையும் ஒரு ரவுண்டு வரப்போறாராம் பிரபு சாலமன்.
சரி கதைக்குள்ள வருவோம்…
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு சொன்ன வில்லேஜ்ல உள்ள பொண் தான் படத்தோட ஹீரோயின் கயல்விழி. மின்சாரம்கூட இல்லாத குடிசையில் வாழ்கிறவள். அப்பாவும் அம்மாவும் விவசாய கூலிகள்.
காதல் என்கிற வார்த்தையை கூட அறிந்திருக்காத ஆனந்திக்கு உள்ளூர் இளைஞன் சந்திரன் மேல காதல் வருகிறது. காதல் ஹை-ஸ்பீடுல போய்க்கிடுக்கிற நேரத்துல தான் விவசாயம் பொய்த்துப் போய் கொடிய பஞ்சம் வருது. அதனால பஞ்சம் பிழைக்கிறதுக்காக ஆனந்தியின் குடும்பம் வடநாட்டுக்குச் செல்கிறது.
காதலர் இருவரும் திசைக்கு ஒருவராக பிரிக்கப்படுகிறார்கள். காதலன் நம்மை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் ஆனந்தியும், அவளை எப்படியாவது கண்டுபிடித்து கரம் பிடிப்பது என்று காதலன் சந்திரனும் தங்களோட பயணத்தை தொடர்கிறார்கள்.
ஆனந்தி எங்கிருக்கிறாள் என்பது தெரியாமல் அவளை இந்தியா முழுவதும் தேடுகிறான் சந்திரன். அவளை கண்டுபிடித்தானா, கரம் பிடித்தானா என்பதுதான் கயல் படத்தின் கதையாம்.
பொத்தி பொத்தி வெச்ச கதை லீக்காயிடுச்சி என ஒரு பக்கம் பேச்சிக்கொண்டிருக்க, இதுதான் கதையா என்பது பிரபுசாலமனுக்கே வெளிச்சம்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?