விஜயின் நடனத்தைப் பார்த்து நடுநடுங்கி விட்டேன்: அமலாபால்
by abtamil
Tamil newsToday,
சென்னை: தலைவா படத்தில் நடிக்கும் போது, விஜயின் நடனத்தைப் பார்த்து தனக்கு உள்ளூர நடுக்கம் உண்டானதாகத் தெரிவித்துள்ளார் அமலாபால். இயக்குநர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் ஜோடியாக அமலாபால் நடித்திருந்தப் படம் 'தலைவா'. படம் ரிலீசாவதில் பலப் பிரச்சினைகளைச் சந்தித்தப் போதும், அமலாவின் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது.
அத்தோடு, தற்போது தனுஷுடன் வேலையில்லாப் பட்டதாரி படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். அந்தவகையில் விஜயுடன் தலைவாவில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார் அமலா. அதில் 'சிறு வயதிலிருந்தே தான் விஜயின் தீவிர ரசிகை என்றும், இவ்வளவு சீக்கிரத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விஜயுடன் நடனக் காட்சிகளில் நடிப்பது குறித்து உள்ளூர படபடப்பாக இருந்ததாம். இது குறித்து அமலா பால் கூறுகையில், 'விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது' எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது ஆஸ்தான நாயகர்களில் ஒருவரான விஜயுடன் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக இயக்குநர் விஜய்க்கும் தனது நன்றியை தெரிவித்தார் அமலாபால்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?