பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி:
அசாராம்பாபு மகன் மீதும் பெண் செக்ஸ்
புகார் Woman molested complaint on Asaram
son
இந்தூர், செப். 8–
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்
ஆசிரமத்தில் 15
வயது பெண்ணை கற்பழித்ததாக
சாமியார்
அசாராம்பாபு கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். இந்த நிலையில்
சாமியாரின் மகன் நாராயண் சாய் மீதும்
ஒரு பெண் செக்ஸ் புகார்
கூறியுள்ளார்.
நாராயண்சாய் இந்தூரில் உள்ள
ஆசிரமத்தில் தங்கியுள்ளார். தன்
தந்தை இல்லாத நேரங்களில் அங்குள்ள
சீடர்களுக்கு இவர் உபதேசம்
செய்வது உண்டு. இந்த நிலையில்
இந்தூரைச் சேர்ந்த பெண் நாராயண்சாய்
மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:–
நாராயண் சாய் என்னை பல வழிகளில்
ஏமாற்றி மோசடி செய்துள்ளார். 2004–ம்
ஆண்டு ஆசிரமத்துக்கு வந்திருந்த
நாராயண் சாய் அங்கு தங்கி இருந்த
என்னை தனது சீடர் ஒருவரை திருமணம்
செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.
வேறு வழியின்றி அவரை திருமணம்
செய்தேன்.
ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்
என்பதும்
விவாகரத்து பெறவில்லை என்பதும்
தெரிய வந்தது. இதுபற்றி நாராயண்
சாயிடம் புகார் செய்தேன். அவர்
அதை கண்டு கொள்ளவில்லை.
என்னையும் பாலியல் பலாத்காரம்
செய்ய முயன்றார்.
நடந்த சம்பவங்களை வெளியில் சொல்லக்
கூடாது, சொன்னால்
கொலை செய்வேன் என்று மிரட்டல்
விடுத்தார்.
அவரது செல்வாக்கு காரணமாக
அப்போது நான் புகார் செய்யவில்லை.
இப்போது சாமியாருக்கு எதிராக
மாணவி புகார் செய்ததால் நானும்
தைரியமாக வந்து இந்த
புகாரை அளித்துள்ளேன்.
இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து அசாராம் மகனும்
கைது செய்யப்படலாம் என
கூறப்படுகிறது.