Monday, 10 October 2011

Mupozhudhum Un Karpanaigal Movie Spot Stills

- 0 comments
Muppozhudhum Un Karpanaigal�Shooting Spot Stills



Mupozhudhum Un Karpanaigal Movie Spot Stills,�Mupozhudhum Un Karpanaigal Shooting Spot Stills, Mupozhudhum Un Karpanaigal Shooting Spot gallery, Mupozhudhum Un Karpanaigal Shooting Spot photo



[Continue reading...]

ஜெயலலிதாவுக்கு கலைஞர் சவால்!

- 0 comments
 
 
திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். நேருவை ஆதரித்து தேர்தல் பிரசார தி.மு.க பொதுக்கூட்டம் நேற்று இரவு திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தி.மு.க பொருளாளர் கே.கே.எம். தங்கராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது:-
 
நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். நேரிலே வந்து வாக்கு கேட்க வேண்டியவர் இன்று சிறைகோட்டையில் பூட்டப்பட்டு இருக்கிறார். தேர்தல் ஜனநாயக அடிப்படையில் நடைபெறும் என்பது இலக்கணம். ஆனால் இந்த ஆட்சியில் நடைபெறுகின்ற இடைத்தேர்தலும், உள்ளாட்சி தேர்தலும் ஜனநாயக அடிப் படையை குழிதோண்டி புதைத்து விட்டு நடத்தப்படுகிறது.
 
திருச்சி மாநகர உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் யார் யார் போட்டியிடுவார்கள் என்று அவர்களை சிறையில் தள்ளி, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
தி.மு.க.வின் முன்னோடிகள், நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்தால் சிறையில் தள்ளினால் தொண்டர் ஓடி விடுவார்கள் என்றும், கட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் தேர்தல் பணியாற்ற வரமாட்டார்கள் என எண்ணி காவல்துறையோடு கைகோர்த்து எதை வேண்டுமானாலும் செய்துகொண்டு இருக்கிறார்.
 
நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். அடிக்க அடிக்க தான் பந்து மேலாக எழும். திராவிட முன்னேற்ற கழகத்தின் வீரர்கள், இளைஞர்கள், இதற்கெல்லாம் பயந்து அஞ்சுபவர்கள் அல்ல என்பதை திருச்சியில் நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் எடுத்துக்காட்டுகிறது. திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ சோதனைகள், எவ்வளவோ வேதனைகளை எல்லாம் தாண்டித்தான் வந்தது.
 
இந்த கழகம் கொள்கையுடன் பட்டொளி வீசிக்கொண்டு இருக்கிறது. அண்ணாவின் லட்சியங்கள், கொள்கைகள், குறிக்கோளை நிறைவேற்றிக்கொண்டு ஆயிரம், ஆயிரம் இளைஞர்களை கொண்டு தாங்கி நிற்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை யாராலும், எந்த காலத்திலும், எந்த நிலையிலும் சிதைக்க முடியாது. தேர்தலில் தோல்வியை கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல.
 
அரசியலில் வெற்றி, தோல்வி வரும் போகும். வெற்றி கிடைக்கும் போது வெறியாட்டம் போடக் கூடாது. தோல்வி அடையும் போது துவண்டும் போக கூடாது. அப்படி சோர்ந்து விடாமல் இயக்கத்தை நடத்துகிறவன் தான் வீரன். அமைச்சர் பதவி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல, தி.மு.க. தமிழர்களுக்காக தமிழர்களை வாழ வைப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. தமிழ் இனம், திராவிட இனம், நாடு செழிக்க உலகம் செழிக்க இந்த இயக்கம் பாடுபட்டு கொண்டிருக்கிறது.
 
ஒரே ஒரு நேரு வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவோ, ஒரு மேயர் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவோ வாக்கு கேட்பதற்காக மட்டும் நான் இங்கே வரவில்லை. தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் திராவிடலட்சியங்கள் காப்பாற்றப்படவேண்டும். அதனை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நம்மீது படை எடுக்க விடாமல் பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பது தான் நமது கொள்கை.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்- அமைச்சராக வந்த நான் இப்போது வெறும் கருணாநிதியாக வந்து நிற்கிறேன். முதல்-அமைச்சராக இருந்த போதும், வெறும் கருணாநிதியாக இருக்கிற இப்போதும் தமிழ் தமிழ் என்பதே எனது அரசியல் பணி ஆகும். 1926-ல் தமிழ் வளர்க்கும் பணியை தொடங்கினேன். மொழிப்பற்றும், மொழி பேசுகிற மக்கள் மீதும் நான் வைத்திருக்கிற பற்று, என்னை விட்டு அகலாது.
 
நான் மறைந்து விட்ட பிறகும் அது ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். அண்ணா அறிவாலயத்தை கருணாநிதி எப்படி கட்டினார்? அவரது யோக்கியதை தெரியாதா? கருணாநிதியை போல் தான் அவரது சீடர் நேருவும் இருப்பார் என்றும் ஜெயலலிதா பேசி இருக்கிறார். அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கான நிலத்தை 1972-ல் எப்படி வாங்கினோம் என்பதை இங்கே விளக்க விரும்புகிறேன்.
 
யாரோ ஒரு ஜமீன் இளைய மகன் சுப்புரத்தினம் நாயுடுவை மிரட்டி வாங்கியதாகவும், அதற்கான பத்திரத்தில் 10 பேருக்கு பதில் ஒரே நபர் மட்டும் கையெழுத்து பெற்றதாகவும் கூறி இருக்கிறார். இதற்கு ஆதாரமாக சர்க்காரியா கமிஷன் பற்றியும் பேசி இருக்கிறார்.
 
நான் அம்மையாருக்கு அன்போடு அறைகூவல் விடுகிறேன். 1972-ல் அறிவாலயம் மனை ஏறத்தாழ 25 கிரவுண்ட் நிலம் வாங்கி தி.மு.க. அறக்கட்டளை பெயரில் பதிவு செய்தோம். அதில் யார் யார் உறுப்பினர்கள் தெரியுமா? கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், 3-வது பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
 
கிரைய பத்திரத்தில் ஒரு இடத்தில் கூட யாருடைய கையெழுத்தும் இல்லை என்றும் திருச்சியில் ஜெயலலிதா பேசியதால் நான் சென்னை அறிவாலயத்துடன் தொடர்பு கொண்டு ஆகாய விமானம் மூலம் அதன் நகலை இன்று காலை வரவழைத்தேன். 10 பேர் தி.மு.க. அறக்கட்டளைக்கு 9 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு கிரையம் செய்து கொடுத்து இருக்கிறார்கள்.
 
இதற்கான ஆதாரத்தை சென்னையில் இருந்து வரவழைத்து இருக்கிறேன் (கூட்டத்தினரை பார்த்து கிரைய பத்திரம் நகலை காட்டினார்) அந்த இடத்தில் தான் அறக்கட்டளை உருவாக்கி நான் தலைவராகவும், எம்.ஜி.ஆர். பொருளாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு விலகிய பின்னர் இப்போது மு.க. ஸ்டாலின் வரை அறக்கட்டளையில் இருக்கிறோம்.
 
நான் விடுக்கும் ஒரே ஒரு அறைகூவலுக்கு அம்மையார் பதில் அளிப்பாரா? ஜெய லலிதா இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறாரா? ஏற்றுக்கொண்டு எங்கள் தோழர்களை எல்லாம் நீதிமன்றத்திற்கு இழுக்கிற ஜெயலலிதா நீங்கள் நீதிமன்றத்திற்கு வர தயாரா? தயார் இல்லை என்றால் அதற்குரிய தண்டனையை அவரே தீர்த்துக்கொள்ளவேண்டும்.
 
இவ்வாறு கருணாநிதி பேசினார்.



[Continue reading...]

Will Velayutham be Genelia’s swan song in Tamil?

- 0 comments
 

Genelia the first girl to be on every directors mind when it comes to bubbly, happy-go-lucky, innocent girl is all set to tie the knot in February next year.

So will Vijay's Diwali release Velayutham be her swan song in Tamil?

Yes seems to be the answer as a little birdie informs us that Gene is getting married to Riteish Deshmukh and the wedding will take place at an upmarket five star hotel and a grand reception later for the filmindustry at the Mumbai Race Club grounds.

Genelia is on cloud nine as she has become hot and happening in Bollywood. Her Force, the Hindi remake of Khakka Khakka with John Abraham has been declared a hit.

She has three more Hindi films coming up for release in the next six months.

Meanwhile there are rumours that she is one among the front runners to be paired opposite Dhanush in Chimbudevan directed Mareesan produced by UTV.

The chemistry between them sizzled in Uthamaputhiran .

[Continue reading...]

Ippadi kudichitu varingaley, ennanga enakku

- 0 comments
 
Wife: Ippadi kudichitu varingaley. Pondati'nu oruthi irukrathu ungaluku maranthu pocha?

Hus: Atha maraka thaan kudikaren.





Wife:
Ennanga.. Seekiram vaanga.. Kulandhai aluthu..

Husband:
Unna yaarudi Make-up illama Kulandhai kitta poga Sonnathu.?




WIFE:ennanga enakku en thankachiya parkkanum pola irukku
ava kudava irukanum pola iruku



HUSBAND:nan ninaichen. nee sollitta..


[Continue reading...]

இந்திய வெளியுறவுச் செயலாளர், பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு!

- 0 comments

இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு. ரஞ்சன் மத்தை, பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவை இன்று காலை(ஒக்-10) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பில் இரு தரப்புறவு குறித்தும், விசேடமாக பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந் சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே கான்தாவும் கலந்துக் கொண்டிருந்தார்.

[Continue reading...]

சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு

- 0 comments
 
 
சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் இதை சுந்தர்.சி மறுத்தார். ஆனால் வடிவேலுதான் இந்தப் பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தற்போது செய்திகள் கூறுகின்றன.
 
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்தார் வடிவேலு. அவரது முக்கிய தாக்குதலாக விஜயகாந்த் அமைந்தார். அதிமுகவை அப்படியே விட்டு விட்டு தேமுதிகவையும், விஜயகாந்த்தையும் போட்டு தாளித்து விட்டார் வடிவேலு.
 
ஆனால் துரதிரஷ்டவசமாக திமுக பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் வடிவேலு நிலைமை கவலைக்கிடமாகி விட்டது. விஜயகாந்த்தைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கருதி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வடிவேலுவை தங்களது படங்களில் புக் செய்ய தயங்குவதாக தெரிகிறது. இதனால் விவேக், சந்தானம், கஞ்சா கருப்பு போன்றவர்களின் காமெடியை மட்டுமே பார்க்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
வடிவேலுவின் காமெடி இல்லாமல் தமிழ்ப் படங்கள் கிட்டத்தட்ட வறட்சியாகவே உள்ளது என்பது வடிவேலு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான தமிழ் திரையுலக ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.
 
இந்த நிலையில்தான் சுந்தர்.சி படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை உடனடியாக சுந்தர்.சி மறுத்து விட்டார். அப்படியெல்லாம் திட்டம் ஏதும் இல்லை என்று கூறினார்.
 
ஆனால் வடிவேலுவை சுந்தர்.சி அணுகியது உண்மைதான் என்கிறார்கள். வடிவேலுதான் இப்படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டாராம். தற்போது பல்வேறு கெட்டப்களில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராகி வருகிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கியுள்ள இந்த காலகட்டத்தி்ல் அந்தப் படத்திற்காகத்தான் தயாராகி வருகிறாராம் வடிவேலு. அந்தப் படத்தை முடித்து விட்டு, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி விட்டு பின்னர் மீண்டும் காமெடி வேடங்களில் முழு வீச்சில் நடிக்க அவர் தயாராகி வருகிறாராம். இதனால்தான் சுந்தர்.சி படத்தை வேண்டாம் என்று அவர் கூறி விட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால்தான் கோபத்தில், வடிவேலுவை எனது படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் இல்லை என்று சுந்தர்.சி கூறியதாக கூறப்படுகிறது.



[Continue reading...]

கனிமொழியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ., எதிர்க்கவில்லை

- 0 comments
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கோரியுள்ளார்.
 
இம்மனு மீதான விசாரணை வருகிற அக்.17-ம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. தரப்பில் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.
 
ஆகையால் இவ்வழக்கில் இருந்து கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என தெரிகிறது.
 
முன்னதாக, கனிமொழியின் வக்கீல் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஒரு பெண் என்பதாலும், சிறு வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் அவருக்கு இவ்வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

டாப்லெஸ் போஸ் கொடுத்த டீச்சர் பள்ளிக்கு திரும்பினார்!

- 0 comments
 
 
 
பள்ளியில் சக ஆசிரியருக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்த டீச்சர் 6 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் பள்ளிக்கு திரும்பினார். உள்ளாடை விளம்பரத்துக்கு அவர் போஸ் கொடுத்த படங்கள் வெளியானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஹாரோ நகர பள்ளியில் கலை ஆசிரியையாக வேலை பார்த்தவர் ஜோன் சலி (34). கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். வடக்கு அயர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாலே நடனம் தெரிந்தவர். பகுதி நேரமாக டிவி நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்குபவர்.
 
கடந்த மார்ச்சில் பள்ளியின் போட்டோலேப் அறையில் இருந்த பென் டிரைவ் ஒன்று மாணவர்களின் கையில் சிக்கியது. அதை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்.. சலி டீச்சரின் டாப்லெஸ் போட்டோக்கள் அதில் இருந்தன. மாணவர்களின் செல்போன்கள் சரமாரியாக டாப்லெஸ் போட்டோக்களை பரிமாறிக் கொண்டன. பள்ளியே பரபரப்பானது. பெற்றோர்கள் கொதித்தனர். விஷயம் பூதாகரமானது. பள்ளியில் விசாரணை நடந்தது. பள்ளியின் சக ஆசிரியரும் போட்டோகிராபருமான பியோனா கோர்த்தின் என்ப வருக்கு ஒரு பிராஜக்ட்டுக்காக சலி டீச்சர் தாராளமாக போஸ் கொடுத்தது தெரிய வந்தது.
 
அவரது தொழில் சம்பந்தமான செயல்களில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், கண்ணியம் காக்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்று அறிவுறுத்தியது. இதையடுத்து, பள்ளியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சலி. இந்நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு ஹாரோ பள்ளியில் மீண்டும் ஆசிரியை பணிக்கு திரும்பியிருக்கிறார் சலி. ''எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிட்டன. இனி என் ஆசிரியர் தொழிலை கண்ணிய குறைவின்றி செய்வேன்'' என்று பேட்டியளித்திருக்கிறார் சலி. இதற்கிடையில், ஒரு பிரபல ஷோரூம் சார்பில் உள்ளாடை விளம்பரத்துக்கு சலி போஸ் கொடுத்த போட்டோக்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



[Continue reading...]

செல்போன் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது!

- 0 comments
 
 
 
செல்போன் ரோமிங் கட்டணம் விரைவில் ரத்து செய்யப்படவுள்ளது.
 
மத்திய அரசின் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வரைவு அறிக்கையை இன்று அந்தத் துறையின் அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.
 
அதில், நாடு முழுவதும் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் இப்போது தொலைத் தொடர்பு வட்டங்கள் 22 ஆகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லையில் உள்ள தொலைத் தொடர்பு வட்டத்திற்குள் நுழையும் போது ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரத்து செய்து நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து எந்தப் பகுதிக்குப் பேசினாலும் ஒரே கட்டணம் என்ற முறை அமலாக்கப்படவுள்ளது.
 
இந்த நடவடிக்கையால் செல்போன் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மக்களுக்கு பெரும் பயன் ஏற்படும்.
 
மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விற்பனையிலும் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இனி ஸ்பெக்ட்ரம் மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படும்.
 
நாடு முழுவதும் பிராட்பேண்ட் சேவையை விரிவாக்கவும், 2017ம் ஆண்டுக்குள் கிராமப் பகுதிகளில் தொலைத் தொடர்பு அடர்த்தியை (rurual teledensity) 60 சதவீதமாக உயர்த்தவும், 2020ம் ஆண்டுக்குள் இதை 100 சதவீதமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.



[Continue reading...]

நோர்வே படுகொலைக��் திரைப்படமாவதற���கு எதிர்ப்பு (டி���ெய்லர் இணைப்பு)

- 0 comments


நோர்வேயில் உள்ள உற்றயா தீவில் ஆயுதம் ஏந்திய நோஸ்க் பயங்கரவாதி ஒருவரினால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் திரைப்படமாக வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க திரைப்பட தயாரிப்பு துறையினர் இந்த சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். உற்றோயா ஐலன்ட் என்ற பெயரில் தயாராகிறது.

இதற்கான ரெய்லர் யூருப்பில் வெளியாகியுள்ளது. வெள்ளை நிற தலைமுடியுள்ள இளைஞன் ஒருவன், நோஸ்க் போலீசாரின் சீருடை அணிந்து இளைஞர்களை சுட்டுத்தள்ளும் காட்சிகளுடன் இது வெளியாகியுள்ளது. உற்றயா தீவில் நடைபெற்ற இந்த மனநோய் அனர்த்தத்தில் குடும்பங்களை பறி கொடுத்தவர்கள் தமது குடும்பத்தினர் பலியான பரிதாபக் காட்சிகள் திரைப்படமாவதை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

மேலும் நோஸ்க் போலீசார் இந்தத் திரைப்படம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியானதை நீக்கும்படி கேட்டுள்ளார்கள். நோஸ்க் ஆபைட்ஸ் கட்சியின் இளையோர் பிரிவினரே இந்த அனர்த்தத்தில் உயிர் கொடுத்தவர்கள். ஆகவே இக்கட்சியினரும் இதற்கு கடும் எதிர்ப்புடையோராக உள்ளனர்.

மேலும் திரைப்படத்தை தயாரிப்பவர்களைத் தடுப்பதற்கு இவை போதுமான எதிர்வினையாகத் தெரியவில்லை. அதேவேளை இக்கதையையே சிறிய மாற்றங்களுடன் கற்பனை போல தயாரிக்கப்பட்டால் தடுப்பது சிரமாகிவிடும். ஆனர்ஸ் பிறீவிக் என்ற நோஸ்க் இளைஞனால் இந்தத் தீவில் பிள்ளைகள் உட்பட 69 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.



http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    தமிழக மீனவர்கள் ���ீது இலங்கை கடற்��டையினர் தாக்குத���்

    - 0 comments


    கச்சதீவுக்கு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் செயல் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய்க்கும் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள நிலையில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன், இலங்கை வருவதற்கு முன்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்துள்ளதுடன், இச்சந்திப்பின் போது பிரதானமாக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்போது தமிழக மீனவர்களைத் தாக்கி வரும் செயல் குறித்து முதலமைச்சர் கடுமையாகப் பேசியதுடன், இந்தப் பிரச்சினையை இந்திய அரசு தேசியப் பிரச்சினையாக அணுக வேண்டும், இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    மண்டபம் பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்கப்பட்டு விட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    கடாபி படைகள் தோல���வியின் கடைசி வி��ிம்பில்

    - 0 comments


    கடாபி பிறந்த நகரான சிற்றாவில் மணற்புயல் காரணமாக நிறுத்தப்பட்ட போர் தொடர்ந்து வேகமாக நடைபெறுகிறது. இன்று சிற்றா நகரின் முக்கிய விரைவுச் சாலையை போராளிகள் குழுவினர் கைப்பற்றியுள்ளார்கள். கடாபியின் படைகள் போர் நடத்தும் கடைசி பாக்கெட் இதுவாகும். இதற்குள்ளும் அவர்கள் தோல்வியை தழுவியபடி உள்ளனர். மேலும் சிற்றா நகரின் மையம் வெறும் கால் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சிறிய பகுதி என்று போராளிகள் படைத்தரப்பு தளபதி நாஸர் அபு சைன் தெரிவித்துள்ளார்.

    நேற்று வீசிய மணற் புயல் காரணமாக கடாபி படைகள் வேகமாக முன்னேறி நகர மையத்திற்கு வந்தனர். அதன் பின்னர் மேலை நாடுகளின் உதவியோடு 100 கவச வாகனங்கள், அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு புதிய வீறுடன் சண்டை ஆரம்பித்தது. இப்போது அல்லா ஓ அக்பர் என்றபடி போராளிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுவே கடாபியின் இறுதி நகரமாகும். ஆனாலும் கடாபியின் படைகள் மிகச் சிறப்பாகவும் படிமுறையாகவும் போரிடுவதை மேலை நாடுகள் இதுவரை மறுக்கவில்லை. உலகத்தை எதிர்த்து ஆறு மாத காலம் அவரது படைகள் தாக்குப் பிடித்தது பெரிய விடயமாகும்.

    http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger