ஏழெட்டு வருஷம் முன்பு, பஹரைனில் இந்தியன் பேன்ட் என சொல்லப்படும் அழகிகளின் நடன பார்கள் கோலோச்சிய நேரம் அது, எங்கள் ஹோட்டலிலும் நடனம் பார் உண்டு, இங்கு ஆடும் அழகிகள் பெரும்பாலும் சென்னை வடபழனியை சேர்ந்த, சினிமா பாடல்களுக்கு சைடில் ஆடும் நடிகைகளைதான் மூணு மாசம் அக்ரிமென்ட் போட்டு அழைத்து வருவார்கள்.
இவர்கள் மேடையில் ஆடும் போது, பூமாலைகள், ரோஜாப்பூக்களை [[பிளாஸ்டிக்]] கஸ்டமர் டேபிளில் வைத்திருப்பார்கள், ஒவ்வொரு அழகிக்கும் எவ்வளவு மாலை, ரோஜாப்பூ கிடைக்குதோ அதன் அடிப்படையில் அவர்களுக்கு பங்கு கொடுக்கப்படும் அதுதான் அவர்கள் சம்பளம்.
அடுத்து அவர்கள் இஷ்டப்படி வெளியே போகக்கூடாது, ஹோட்டலில் நாலஞ்சி ரூம்களை ஒதுக்கி, அவர்களை உள்ளே வைத்து அடைத்து விடுவார்கள். கஸ்டமர்கள் பேசவேண்டுமானால் ரிஷப்சனுக்கு போன் செய்தால் கனெக்சன் கொடுக்கப்படும்.
இவர்களுக்கு மது, பாக்கு, சிகரெட் வகைகளுக்கு தடை உண்டு, இவர்களை நடன மேடைக்கு அழைத்து வந்து, கூட்டிச்செல்வது அரபி செக்கியூரிட்டிகள், சாவி இருப்பது ரூம் சர்வீசான எங்கள் கையில் இருக்கும்.
அழகிகளுக்கு சாப்பாடு கொடுப்பதும் நாங்கள்தான், ஷகீலா கூட பத்துநாள் அங்கே தங்கி நடனம் ஆடினது உண்டு [[அய்யய்யோ ஒரு டிக்கெட் பத்து தினார்னு நினைக்குறேன்]] ஏ யப்பா என்னாக்கூட்டம் என்னாக்கூட்டம்!!!!!
விஜயகாந்த்'தின் தர்மா படத்தில் முதல் பாடலில், ஒரு பெண் டான்ஸ் ஆடும் போது ஒருத்தன் அந்த பெண்ணின் இடுப்பை பிடிப்பான், விஜயகாந்த் ஓடி வந்து ஒரு அறை அறைவார், அந்தப்பெண்ணும் இங்கே நடன அழகி, பெயர் ரம்லத் அவள் தங்கையின் [[சித்தி மகள்]]பெயர் ரோகினி [[இவர்கள் உண்மையான பெயரை சொல்லமாட்டார்கள்]]
அடுத்து அர்ஜூனின் கர்ணா படத்தில் ஒரு பாட்டுக்கு நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் இருந்து வரும் பெண்ணின் தொப்புளில் பந்தடித்து விளையாடுவார்களே அந்தப்பெண் பெயர் மனீஷா, மனீஷா ரஜினியின் படையப்பா படத்தில் "சுற்றி சுற்றி வந்தீக" பாட்டில் முன் வரிசையில் நின்று நடனம் செய்வதை பார்க்கலாம்.
பிரீத்தி, இவர் சினிமாவில், கில்மா படங்களில் நடித்தவர் உண்மையான பெயர் தெரியாது, விவேக் ஆட்டோகிராப் படத்தை கிண்டல் பண்ணி ஒரு படத்தில் ஜோக் பண்ணி இருப்பார் படம் பேர் மறந்துடுச்சு, அதில் சொர்ணாக்கா'வா அருவாளை தூக்கிட்டு வருவாளே, அவள்தான் பிரீத்தி, ஒரு படத்தில் வடிவேலுவை பாத்ரூமுக்குள் வைத்து கும்முவார்.....
அடுத்து, ஜெயராமும் கவுண்டமணியும் நடிச்ச ஒரு [[படம் பெயர் மறந்துடுச்சு]] படத்துல கவுண்டமணிக்கு பொண்ணு பார்க்க போவாங்களே, அவள் பெயர் சொப்னா, இப்பிடி அனேகம் துணை நடிகைகள் இங்கே வருவது உண்டு.
இவங்களுக்கு தமிழ் அல்லாது வேற பாஷையும் தெரியாது...! ஸோ அந்த ஹோட்டலில் ஒரே தமிழன் நான் மட்டுமே, என்னோடு மிகுந்த பாசமாக இருப்பார்கள், இவர்கள் கஷ்டமரோடு பர்ச்சேஸ் செய்ய அனுமதி உண்டு ஆனால் செக்கியூரிட்டி கூட செல்வார்கள்...!!!
அப்படி செல்லும் போது, எனக்கு உள்ளாடை தவிர்த்து என்னெல்லாம் வேணுமோ எல்லாம் வாங்கிட்டு, கஷ்டமரிடத்தில், தன் அண்ணனுக்கோ தம்பிக்கொன்னு பொய் சொல்லி வாங்கி வந்து, என்னை அழைத்து அந்தபில்லையும் துணிமணிகளை எனக்கு தந்து விட்டு, அதே கடைக்கு என்னை போக செய்து பில்லை காட்டி எனக்கான அளவு துணியை மாற்றி வாங்கி கொள்ள செய்வார்கள்....!!!
என்கூட வேலை செய்யும் மலையாளி நண்பர்களுக்கு காதுல புகையா வரும், அவனுகளும் என்னெல்லாம் முயற்ச்சி செய்தும் கிடைக்கவே இல்லை, இந்த பெண்களுக்கு கஸ்டமர்'கள் கொடுக்கும் கிப்ட் இருக்கே சொல்லி மாளாது...
நகைகள் கிப்டாக வந்தால் அக்கவுண்ட்ஸ்'ல வைத்துக்கொண்டு, அவர்கள் ஊர் போகும் போது கமிஷன் கட் பண்ணிவிட்டுதான் கொடுப்பார்கள். நான் லீவுக்கு ஊர் போகும் நாள் வந்தபோது, எனக்கு கிடைத்த வாக்மேன் கிஃட் [[வாக்மேன்கள் பிரபலமா இருந்தநேரம் அது]] பதினைந்து, அப்போ என்னெல்லாம் கிடச்சிருக்கும்னு நீங்களே கணிச்சுக்குங்க...!
மலையாளத்துல ஷகீலாவின் கின்னாரத்தும்பிகள் வெளியாகி சக்கை போடு போட்ட நேரம், ஷகீலா வந்து தங்கி இருந்தாங்க, ரொம்ப நல்ல டைப், ஆனால் எப்போவும் பாட்டல் வேண்டும், கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க இவங்களுடைய ரூம் சாவியும் எங்கள் கையில்தான்....!!
கிளைமாக்ஸ்.......
இந்த அழகிகள் எல்லாம் மொத்தமாக ரம்ஜான் நோன்புக்கு ஊர் போவார்கள் [[ரம்ஜானுக்கு இங்கே பார்கள் நாட் அலவுட்]] அப்பிடி போனவர்கள், சென்னை ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் செக்கிங்கில் ரம்லத்தின் [[தர்மா படம்]] சூட்கேசில் ஏகப்பட்ட நகைகள், மொத்தம் நான்கு கிலோ, கஸ்டம்ஸ் கிடிக்கிபிடி டாக்ஸ் போட, இவள் தனியாக கஸ்டம்ஸ் ஆபீசரிடம் என்னமோ பேச, ஆபீசர் [[நம்ம ஆபீசர் இல்லை]] விட்டுவிட்டார்...!!!
கூடப்போன தோழிகளுக்கு ஷாக், முதல்ல நாலுகிலோ நகைகள் எப்பிடி...??? அடுத்து சரி கஸ்டம்ஸ்'சில் எப்படி தப்பினாள் என கேட்கவும் கூலாக சொன்னாளாம், ஒரு பேப்பர்ல ஹோட்டல் [[சென்னை]] பெயரையும் ரூம் நம்பரும் எழுதி குடுத்துட்டு ராத்திரி வாருங்கள்னு சொன்னாளாம், மற்றும் பல்கா கொஞ்சம் பணம்....!!!
சரி இந்த நாலுகிலோ நகைகள், ஹோட்டல் நிர்வாகத்துக்கு எப்படி தெரியாம போச்சு...???
வடபழனியில் இந்த சைடு நடிகைகளின் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள், ஆண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்தாத குறைதானாம் [[இது அந்த நடிகைகளே சொன்னது]] பெண் பிள்ளைதான் குடும்பத்துக்கு சம்பாதித்து [[நடித்து, ஆடி]] கொடுக்குமாம், ஆண்கள் வழக்கம் போல ஊதாரிகள்...!!!
ரம்லத், ஒருநாள் மிகவும் அழுதுகொண்டிருந்தாள், என்னை கண்டதும் கட்டிக்கொண்டு அழுதாள், என்னவென்று கேட்டேன், அவள் அண்ணனுக்கு எத்தனை முறையோ சம்பாதித்து ஆட்டோ வாங்கி கொடுத்தும், அவன் அதை வித்து குடித்து விடுவானாம், கல்யாணம் ஆகாத மூன்று தங்கைகள் வேறு, அவர்களும் என்னை மாதிரி ஈனபொழைப்புக்கு வந்துறக்கூடாது மனோ'ன்னு அவள் வறுமையை சொல்லி அழுதாள்.
ஒரு ஸ்ரீலங்கா தமிழன் ரம்லத் மீது மிகவும் காதல் கொண்டான், மூணு மணி நேரத்துல ஒரு லட்சம் ரூபாக்கு மாலை போடுவான் அவளுக்கு, பிரான்ஸ்'ல இருந்து வந்துருந்தார், எங்க ஹோட்டலில் தங்கவில்லை டெல்மன் ஹோட்டலில் தங்கி இருந்தார், இவர் போட்ட மாலைகளால் மேனேஜ்மென்ட் நல்லா கல்லா காட்டுச்சு, ஆனால் ரம்லத்தை ஏமாற்ற ஆரம்பித்தார்கள், செக்ஸ் டார்ச்சர் கொடுத்தான் முதலாளி.
இவள் அழவேண்டுமானால் என்னை கூப்பிட்டு வச்சு சொல்லி சொல்லி அழுவாள். அப்பிடி ஒருநாள் அவள் வறுமையை சொல்லி அழவும், முதலாளி இவளை ஏமாற்றுவது தெரிஞ்சதும் நான் ஒரு ஐடியா சொன்னேன் அதை கேட்டு அவள்முகம் வெற்றி கொண்டது போல் பிரகாசித்தது, வாழ்கையில் ஜெயித்துவிடலாம் என நம்பிக்கை தெரிந்தது அவள் கண்களில், அதை பார்க்க எனக்கு சந்தோஷமாக இருந்தது.....!!!
ஐடியா இதுதான், மேனேஜ்மென்ட் இவளை ஏமாற்றுவதை, அவளின் காதலனுக்கு எடுத்து சொன்னாள், ஆகவே நீங்கள் நடன பாருக்கு வாருங்கள், ஒன்னு ரெண்டு மாலையோ, ரோஜாப்பூவோ போட்டுட்டு போய் விடுங்கள், அதே பணத்துக்கு உங்களுக்கு பிடிச்ச நகைகளாய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், நான் மனோ'வை நீங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அனுப்புகிறேன், அவனிடம் கொடுத்து விடுங்கள், மனோ என்னிடம் சேர்த்து விடுவான் என சொல்ல.....விளையாட்டு தொடங்கியது....அதுதான் அந்த நாலுகிலோ நகைகள்....!!! எனக்கே ஆச்சர்யம்தான், ஏன்னா ஒரே நாளில் நாலுகிலோ தரவில்லை கொஞ்ச கொஞ்சமாக தந்துவிட்டார்...!!!
ஹோட்டல் நிர்வாகம் இப்பவும் மண்டையை பிச்சிகிட்டுதான் இருக்கு, சும்மாவா நாலுகிலோ தங்கம் ஆச்சே....!!!
ஊருக்கு போயி போன் பண்ணினாள், குடிசை வீடு, முப்பது லட்சம் ரூபாய் பங்களா'வானது, அந்த பங்களா டிவி சீரியல்கள், சினிமாக்கள் என வாடகைக்கு விடப்பட்டது, ஏழு மாடி வீட்டில் இரண்டு பிளாட் வாங்குயாச்சு இஷ்டம் போல பணம் பேங்கில், இனி எனக்கு இந்த ஈனபிழைப்பு வேண்டாம் மனோ, நானும் சராசரி பெண்ணாய் வாழப்போறேன், சிறிலங்கா காதலனைதான் கல்யாணமும் கட்டிக்ப்போறேன்...
உனக்குத்தான் எப்பிடி நன்றி சொல்றதுன்னு தெரியலைன்னு கண்கலங்கினாள் என் மரணம் வரை உன்னை வணங்குவேன், மறவேன் என அழுதாள். கல்யாணம் முடிந்து ஒரு ஐந்து வருடம் தொடர்பில் இருந்தாள், எனக்கு வேலையில் பிரமோஷன் மேலே பிரமோஷன் வர ரெஸ்பான்ஸ் கூட கூட, போன் நம்பர் மாற எங்களுக்கான கனெக்சன் கட்டாகிருச்சு....!!!
எங்கிருந்தாலும் நீ வாழ்க குடும்பத்துடன் ரம்லத்....!!!
டிஸ்கி : வெள்ளை தங்கத்தை லவட்டிய நடிகை, பதிவு அப்பாலிக்கா போடுறேன்.....
மனதில் இனிமையாக மலரும் நினைவுகள்....!!! நாகர்கோவில் டூ மும்பை எக்ஸ்பிரஸில், மதுரை வரை என்னோடு யாத்திரை செய்யும் ஆபீசர்...!!!
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?