சனல் 4 காணொளிக்கு எதிரான காணொளி பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் : தொடரும் சிறீலங்காவின் பரப்புரை:
உலக நாடுகளின் கண் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற போர் குற்ற விசாரணை மீது கவனம் செலுத்த ஆரம்பித்ததன் பின்னனியில் இலங்கை அரசின் பரப்புரை முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இதற்கு இடையே மனித நேய அமைப்பான "crisis group" Human rights watch மற்றும் amnesty international உடன் இணைந்து சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சிறீலங்காவின் கொலைக்களம்" என்ற விவரணப்படத்தை ஜரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 12/10/2011அன்று ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.(தமிழ் மக்களின் போராட்டம் மனித நேய அமைப்புக்கள் கையில்)
இந்த விவரணப்படத்திற்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் தங்கள் பக்க நியாயத்தை உலகிற்கு விளக்க அதே நாள் அதாவது 12/10/2011 அன்று மாலை 5 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் "portcullis house" இல் தங்களால் சித்தரிக்கப்பட்ட விவரணப்படத்தை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. சிறீலங்கா தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் சிறீலங்க தூதுவராலய அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?