௧ : பெரிய கருப்பன்னு பேரை வச்சிகிட்டு அப்பாவியாக இருப்பவர்கள்...!!!
௨ : பஞ்சு'ன்னு பேரை வச்சிகிட்டு, தாதாவாக இருப்பவர்கள்....!!!
௩ : அன்பு'ன்னு பேரை வச்சிகிட்டு, எறிஞ்சி விழுபவர்கள்....!!!
௪ : சொர்ணம்'ன்னு பேரை வச்சிகிட்டு, அருவாளோடு அலைபவர்கள்...!!!
௫ : தங்கம்'ன்னு [[சூனியா பூந்தி]] பேரை வச்சிகிட்டு, இரக்கம் இல்லாமல் நடமாடுகிரவர்கள்...!!!
௬ : கருணை'யை மூலமான பேரை வச்சிகிட்டு, கருணையே இல்லாமல் இருக்கும் துரோகிகள்...!!!
௭ : கனி'ன்னு பேரை வச்சிகிட்டு, கனிவில்லாமல் மக்களை கொள்ளை அடிப்பவர்கள்...!!!
௮ : ராஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, மக்கள் ரத்தம் உறிஞ்சுபவர்கள்...!!!
௯ : அன்புதாஸ்'ன்னு பேரை வச்சிகிட்டு, சொந்த மனைவியை அடித்து துன்புறுத்துகிரவர்கள்...!!!
௰ : அழகான கிரி,ன்னு பேரை வச்சிகிட்டு, பத்திரிக்கை ஆபீசை கொளுத்தி கொல்பவர்கள்...!!!
௧௧ : ரோஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, ரோசமில்லாமல் இருப்பவர்கள்....!!!
௧௨ : செல்வராசா'ன்னு பேரை வச்சிகிட்டு, தரித்திரியமாய் வாழ்பவர்கள்...!!!
௧௩ : மனோ'ன்னு பேரை வச்சிகிட்டு, மன"ரஞ்சித"மாக வாழாதவர்கள்...!!!
௧௪ : மன்னன்'ன்னு பேரை வச்சிகிட்டு, பரதேசியாய் திரிபவர்கள்....!!!
௧௫ : மது'ன்னு பேரை வச்சிகிட்டு, மது அருந்தாமல் இருப்பவர்கள்...!!!
௧௬ : பன்னிகுட்டி'ன்னு பேரை வச்சிகிட்டு, பன்னி மேய்க்காமல் இருப்பவர்கள்...!!! [[நான் செத்தேன் இன்னைக்கு]]
௧௭ : அன்பன்'ன்னு பேரை வச்சிகிட்டு, அலப்பறை செய்பவர்கள்...!!!
௧௮ : நக்கீரன்'ன்னு பேரை வச்சிகிட்டு, நியாயத்துக்கு நடுநிலை வகிக்காதவர்கள்...!!! [[நாய் நக்ஸ் அல்ல]]
௧௯ : இம்சை அரசன்'ன்னு பேரை வச்சிகிட்டு, இம்சையே செய்யாதவர்கள்...!!! [[அருவா அருவா]]
௨௦ : சம்பந்தம்'ன்னு பேரை வச்சிகிட்டு, சம்பந்தம் இல்லாமல் ஹாஜர் ஆகிறவர்கள்....!!!
டிஸ்கி : இது நான் சந்தித்த ஆச்சர்யங்கள், சரியான்னு சொல்லுங்க...
"மனோ'தத்துவம் : ரோட்டுல கார் போனா ஜாலி, காருக்கு கீழே நீ போனால் காலி.....[[ரோட்டை கிராஸ் பண்ணும போது கவனம் தேவை]]
"மனோ"தத்துவம் 2 : சைக்கிளுக்கு ரோட்டின் சிக்னல்கள் தேவையில்லை, கொஞ்சம் கவனம்தான் தேவை...!!!
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?