Thursday, 15 March 2012

இணையத்திலும் வெளியானது “சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்“

- 0 comments
 
 
சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' ஆவணப்படத்தை சனல்-4 தொலைக்காட்சி பிரித்தானிய நேரம் நேற்றிரவு 10.55 மணியளவில் ஒளிபரப்பியது.
பிரித்தானியா மற்றும் அயர்லாந்து நாடுகளில் மட்டும் இது ஒளிபரப்பானது. இந்த ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி இணையத்தளத்திலும் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.
பதிவு செய்து உள்நுழைவதன் மூலம், 49 நிமிடங்களைக் கொண்ட உயர் துல்லியமான இந்த ஆவணப்படத்தை காணமுடியும்.

ஆவணப்படத்தை http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3212461 இந்த இணைப்பில் காணலாம்.4od#3212461

பணத்தை இரட்டிப்பாக ஒரே சுலபமான வழி அதை இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதுதான்.
[Continue reading...]

ரயில்வே பட்ஜெட் 2012: முக்கிய அம்சங்கள்

- 0 comments
 
 
புறநகர் ரயில் கட்டணங்களும் கி.மீக்கு 2 பைசா உயர்வு
 
பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ. 5 ஆக உயர்வு
 
3வது வகுப்பு ஏசி பெட்டிகளில் கட்டணம் கிலோமீட்டருக்கு 10 பைசா உயர்வு
 
ஏசி முதல் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 30 பைசா உயர்வு
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2013-ல் முடிவடையும்
 
ஏசி, முதல் வகுப்பு கட்டணமும் உயர்வு
 
கிலோமீட்டருக்கு 2 முதல் 30 பைசா வரை கட்டணம் உயர்வு
 
300 கி.மீக்கு மேல் கட்டணம் ரூ. 12 வரை உயர்வு
 
10 ஆண்டுகளுக்குப் பின் ரயில் கட்டணம் முதன்முறையாக உயர்வு
 
2ம் வகுப்பு ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்வு
 
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள்
 
ரயில்வே விளையாட்டுவீரர்களுக்கு ரயில் கேல் ரத்னா விருது
 
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
 
75 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 பயணிகள் ரயில்கள் அறிமுகம்
 
ரயில்வே துறை செலவுகளை 10% குறைக்க திட்டம்
 
இதுவரை எந்த உருப்படியான அறிவிப்பும் ரயில்வே பட்ஜெட்டில் இல்லை
 
சோனியா குடும்பத்தின் ரே பரேலி தொகுதியில் ரயில் பெட்டி தொழிற்சாலை
 
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரயில்வே துறை ரூ 3.5 லட்சம் முதலீடு செய்ய திட்டம்
 
விபத்து சதவீதம் 0.77ல் இருந்து 0.55% ஆகக் குறைந்துள்ளது
 
லாலு பெயரை குறிப்பிடாத ரயில்வே அமைச்சர். லாலு கட்சி எம்பிக்கள் கோஷம்
 
வரும் நிதியாண்டில் 20,000 வேகன்கள் தயாரிக்கப்படும்
 
டபுள் டக்கர் ரயில்வே கன்டெய்னர்கள் தயாரிக்க திட்டம்
 
சுய அதிகாரம் கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர்
 
ரயில்வே ஆராய்ச்சி, மேம்பாட்டு கவுன்சில் அமைக்க பரிந்துரை
 
உருப்படியான அறிவிப்புகள் இல்லை என எதிர்க் கட்சி எம்பிக்கள் கோஷம்
 
ரயில்களின் சராசரி வேகத்தை 160 கி.மீயாக உயர்த்த திட்டம்
 
5 ஆண்டுகளில் அனைத்து ரயில்வே கிராசிங்களும் நீக்கம். அனைத்திலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும்
 
ரயில்வே துறைக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தேவை
 
2012-13ம் ஆண்டில் ரயில்வேதுறைக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 60,000 கோடி
 
அணு விஞ்ஞானி அனில் ககோட்கர் தலைமையில் ரயில்வே பாதுகாப்புக்கு குழு
 
487 திட்டங்களுக்கு உடனடி நிதி தேவை
 
புதிய சிக்னல்கள் அமைக்க, சிக்னல்களை மேம்படுத்த ரூ. 39,111 கோடி
 
புதிய ரயில்களை அறிமுகப்படுத்த புதிய டிராக்குகள் தேவை
 
19,000 கி.மீ நீள தண்டவாளங்களை நவீனமாக்க திட்டம்
 
ரயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு. நிதி தேவையோ ரூ.45,000 கோடி
 
கேரளா உள்பட 4 இடங்களில் புதிய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை
 
சென்னை ராயபுரம் ரயில் நிலையம் புதிய முனையமாக்கப்படும்
 
அனைத்து ரயில் நிலையங்களும் விமான நிலையங்களைப் போல மேம்படுத்தப்படும்
 
ரயில் நிலையங்களை மேம்படுத்த புதிதாக ரயில்வே நிலைய மேம்பாட்டுக் கழகம் அமைப்பு
 
நாடு முழுவதும் 11,250 ரயில்வே பாலங்கள் மேம்படுத்தப்படும்
 
19,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் சீரமைக்கபப்டும்
 
அனைத்து சிக்னல்களும் நவீனமயமாக்கப்படும்
 
பயணிகள் பாதுகாப்புக்கு புதிய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்
 
40% ரயில் விபத்துகள் ஆளில்லா ரயில்வே கேட்களில் தான் நடக்கின்றன
 
ரயில் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும்
 
12வது திட்ட காலத்தில் ரயில்வே மேம்பாட்டுக்கு ரூ. 7.35 லட்சம் கோடி ஒதுக்கீடு
 
நவீனமயாக்கல் குறித்து ஆராய சாம் பித்ரோடா தலைமையில் குழு
 
ரயில்வே பாதுகாப்புக்கு ரூ. 16,842 கோடியில் திட்டம்
 
ரயில்வேயை நவீனமயமாக்க அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடி தேவை
வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீரை இணைக்க புதிய திட்டங்கள்
 
பட்ஜெட்டில் கவிதைகளை பாடி நேரத்தை கடத்தும் அமைச்சர் திரிவேதி



[Continue reading...]

TAMILNADU NEW TRAINS

- 0 comments
 

கோவை-பிகானீர் ஏசி எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

சென்னை-பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்(தினசரி)

திருச்சி-திருநெல்வேலி(தினசரி)

தாதர்(டி)-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

விசாகப்பட்டினம்-சென்னை எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

கச்சேகுடா-மதுரை எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

ஷாலிமார்-சென்னை எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

சென்னை-புரி எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

அசன்சோல்-சென்னை எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ்(3 வாரத்துக்கு ஒருமுறை)

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில்(தினசரி)

விழுப்பரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்(தினசரி)
[Continue reading...]

தமன்னா நடித்தால் நான் மீண்டும் நடிக்கிறேன் : சிரஞ்சீவி!

- 0 comments
 
 
"நான் 150வது திரைப்படத்தில் நடிக்க, நல்ல கதையும் தேவை, கதாநாயகியாக நடிக்க நடிகை தமன்னாவும் தேவை என, நடிகர் சிரஞ்சீவி தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தீவிர அரசியலுக்கு வந்த பின்னரும், சினிமாவில் நடிக்கும் ஆசை தன்னை விடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ஐதராபாத் டவுனில் பீப்பிள்ஸ் பிளாசா வளாகத்தில், சிரஞ்சீவியின் மகன் தெலுங்கு திரைப்பட கதாநாயகன் ராம் சரண் தேஜா நடித்துள்ள "ரச்ச (கலாட்டா) என்ற தெலுங்கு படத்தின், "சிடி வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார்.
 
விழாவில், நடிகை தமன்னா பேசும் போது, ""ராம்சரண் தேஜா நடித்து வெளியாகிய மகதிரா , ஆரென்ஜி ஆகிய திரைப்படங்கள் போல, இந்த "ரச்ச திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும். ரசிகர்களின் ஆதரவு, ஆசியினால் தான் எனது குடும்பத்தினரும், மைத்துனர் அல்லு குடும்பத்தினரும், இந்த அளவுக்கு உயர்வை எட்ட முடிந்தது. ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
 
பின்னர் சிரஞ்சீவி பேசுகையில், "இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்தேன். கதாநாயகி தமன்னா தனது திறமையையும், அழகையும் வெளிப்படுத்தி நடித்துள்ளார். அவரது நடிப்பை பார்க்கும் போது, எனக்கும் உற்சாகம் ஏற்படுகிறது. ரசிகர்களின் விருப்பப்படி, நல்ல கதை கிடைத்தால், 150வது திரைப்படத்தில் நடிப்பேன். அப்போது அந்த படத்திற்கு, தமன்னாவையே கதாநாயகியாக தேர்ந்தெடுப்பேன் என, ரசிகர்களின் ஆரவார கரவொலிக்கிடையே நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.



[Continue reading...]

விஜயகாந்துடன் விவசாயி வாக்குவாதம்: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு

- 0 comments
 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று சங்கரன் கோவில் அருகே உள்ள கடையாலுருட்டி என்ற கிராமத்தில் பிரசாரம் செய்தார். பிரசார வேனில் இருந்த படி அவர் பேசினார். அவர் பேசும் போது, இடைத் தேர்தலுக்கு பிறகு மின் வெட்டு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.தற்போதைய நிலவரப்படி அதிகளவு மின் வெட்டு நிலவுகிறது என்றார்.
 
அப்போது, கிராம வாசி ஒருவர் குறுக்கிட்டு, மின்சாரம் இருக்கிறது என்பதால் தானே நீங்க பேசுறீங்க என கேள்வி கேட்டார். இதைக் கேட்டு எரிச்சல் அடைந்த விஜயகாந்த், 'யாரு நீங்க...' என அவரை நோக்கி கேட்டார். அதற்கு, எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு? என்று கிராம வாசி எகிற, மேலே வா சொல்றேன் என்று விஜய காந்த் சூடாக சொல்ல, அதே வேகத்துடன் நீ கீழே வா என்று கத்தினார் அந்த கிராம வாசி.
 
இப்படி இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றவே, போலீசார் தலையிட்டு கிராம வாசியை அமைதிப்படுத்தினார். போலீசாரை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர், நாங்கள் போகும் இடமெல்லாம், ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா வரும் போது, நாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வோம் என்றனர்.
 
சம்பந்தப்பட்ட நபர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல, என்று கூறி தே.மு.தி.க. வினரை போலீசார் சமாதானப்படுத்தினர். தகராறை தொடர்ந்து, அங்கு தனது பிரசாரத்தை முடித்த விஜயகாந்த், வேறு பகுதிக்கு கிளம்பிச் சென்றார்.
 
சங்கரன்கோவில் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட தர்மத்தூரணி கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த கட்சியின் முன்னாள் செயலாளர் பரமன் தனது கோஷ்டியினருடன் நின்று கொண்டு விஜயகாந்த்தை பேச விடாமல், தடுத்தார்.
 
தனக்கு ஏன் பொறுப்பு வழங்க வில்லை என்று கேள்வி கேட்டார். அதற்கு விஜயகாந்த் பிரசாரம் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம். அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் பரமனும், அவரது கோஷ்டியினரும் தொடர்ந்து குரலெழுப்பி கொண்டே இருந்தனர்.
 
இதனால் விஜயகாந்த் டென்ஷன் ஆனார். உடனே அவரது உதவியாளர் பார்த்தசாரதி, விஜயகாந்திடம் விரைவில் பேச்சை முடியுங்கள் என்றார். இதையடுத்து விஜயகாந்த் அங்கிருந்து வேப்பங்குளத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார். விஜயகாந்த் எந்த முடிவும் தெரிவிக்காததால் பரமன் கோஷ்டியினர் அங்கு கட்டப்பட்டிருந்த தே.மு.தி.க. டிஜிட்டல் போர்டுகளை தேசப்படுத்தினர்.
 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



[Continue reading...]

தயாரிப்பாளரும், இயக்குநரும் கேட்டதையெல்லாம்., கொடுத்தேன். புலம்பும் நீலிமா ராணி(video in)

- 0 comments
 

எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் முக்கிய பாத்திரங்களில் முகம் காட்டி வரும் வளரும் நடிகை நீலிமா ராணி, அங்கொன்றும் இங்கொன்றுமாக பெரிய திரைப்படங்களிலும்இரண்டாவது மூன்றாவது நாயகியாக, நண்பியாக தலைகாட்டி வருவதைப் பார்த்திருக்கலாம்! அம்மணி மீது யார் கண் பட்டதோ., சமீபத்தில் ரிலீஸ் ஆன காதல் பாதை என்றொரு படத்தில் இரண்டொரு சீன்களில் மட்டுமே வந்து போனார். இது பற்றி நீலிமாராணி இவ்வாறு புலம்பி வருகிறார்.

தயாரிப்பாளரும், இயக்குநரும் கேட்டதையெல்லாம்., கொடுத்தேன். என்னை இரண்டு நாயகிகளில் ஒருவர் என சொல்லி புக் பண்ணி படம் பண்ணி, இரண்டொரு சீன்களில் மட்டும் வரும்படி எடிட் பண்ணி விட்டனர்.இனி பெரிய திரையுலக புரடியூசர்கள், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்… என்று நீலிமா கண்ணீர் வடித்து வருகிறாராம்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger