Thursday, 22 December 2011

திமுக ஆட்சியில் முதல்வர் முதல் மேயர் வரை மக்களுக்கு துரோகம்: சைதை துரைசாமி

- 0 comments
 
 
 
மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் வீடுகள் உள்ள கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை பகுதியில் இருந்த கால்வாய் தூர்த்து வாரப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்ட முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் முதல் மேயர் வரை மக்களுக்கு துரோகம் செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
 
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் கந்தன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் வீடுகள் கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் இருந்த கால்வாயை மூடி விட்டு 20 அடி சாலை 60 அடியாக அகலப்படுத்தப்படு பெரும் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? மூடப்பட்ட கால்வாய் அகலப்படுத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதில் அளித்த மேயர் சைதை துரைசாமி கூறியதாவது,
 
கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. திமுக அரசும், அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும் மக்களுக்கு எதிராக செயல்பட்டது தெரிய வந்தது.
 
கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் மேயர் வரை சட்டத்தை மீறி மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். இந்த சாலைப் பகுதியில் உள்ள கால்வாயில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் எம்.ஜி.ஆர். அரசும், அதற்குப் பிறகு ஜெயலலிதா அரசும் அந்த கால்வாயை செப்பனிட்டு கரைகளை பலப்படுத்தின. ஆனால் திமுக ஆட்சியிலே அந்த கால்வாயின் பெரும் பகுதியை தூர்த்துவிட்டு சாலையை அகலப்படுத்தியுள்ளனர்.
 
தனி நபர்கள் ஆதாயத்திற்காக இவ்வாறு செய்துள்ளனர். அந்த சாலையில் மொத்தமே 9 வீடுகள் தான். அதற்காக தனியாக பூங்கா அமைத்து விதியை மீறியுள்ளனர். இது குறித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து மாநகராட்சி மன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார்.
 
பிறகு கேள்வி நேரத்தின்போது துணை மேயர் பெஞ்சமின், அதிமுக கவுன்சிலர்கள் தி.நகர் சத்யா, ஜெயந்தி, நூர்ஜகான், ஹேமமாலினி ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு மேயர் சைதை துரைசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
 
சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் சாலை வசதிகள், மழைநீர் வடிகால்வாய்கள், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்ய பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் மட்டும் சுமார் ரூ.220 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தும் பணிகள் துவங்கும்.
 
கோடம்பாக்கம் ஆற்காடு சாலை 130வது வட்டத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விருகம்பாக்கத்தில் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணி, அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் இருந்து கூவம் வரை தனியாக பக்க கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.32 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் வரும் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும்.
 
மாநகராட்சிகளின் சில வார்டுகளில் குப்பைகளை அகற்ற நியமிக்கப்பட்ட நீல்மெட்டல் பனால்கா என்கிற தனியார் நிறுவனம் ஒழுங்காக செயல்படவில்லை. இதனால் அந்நிறுவனத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் 31ம் தேதி முடிகிறது.
 
அதற்குப் பதிலாக நியமிக்கப்படும் புதிய நிறுவனத்திடம் இந்த நிறுவனப் பணியார்களை சேர்த்துக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்யும் என்றார்.



[Continue reading...]

உலகின் 'எதிர்கால நட்சத்திரங்கள்' பட்டியலில் 10 இந்திய இளைஞர்கள்(போட்டோக்கள்)

- 0 comments
 
நாளைய உலகின் 'எதிர்கால நட்சத்திரங்கள்' பட்டியலில் 30 வயதுக்கு குறைவான 10 இந்திய இளைஞர்கள் இடம் பிடித்துள்ளனர்.
 
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், நிதி, ஊடகம், சட்டம், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட 12 துறைகளில் சர்வதேச அளவில் சாதனை சுவடுகளை பதித்து வரும் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் இடம் பிடித்துள்ளனர்.
 
அவர்களது விவரம்:
 
1. பரம் ஜக்கி (17-வயது இவர் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றும் பாசியை (algae) அடிப்படையாகக் கொண்ட கருவியை உருவாக்கியுள்ளார்.
 
2. 23 வயதான விவேக் நாயர். டமாஸ்கஸ் பவுன்டேஷன் என்ற அமைப்பின் தலைமை செயல் அதிகாரி. கார்பனைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.
 
3. குணால் ஷா (29-வயது 29). இவர் பிரபல கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித பட்டதாரியான இவர், கடந்த 2004ம் ஆண்டில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். 27 வயதில் இதன் நிர்வாக இயக்குனர் பதவிக்கு வந்துவிட்டார்.
 
4. விகாஸ் மொகிந்திரா. 25 வயதான இவர் பேங்க் ஆப் அமெரிக்கா மெர்ரில்லிஞ்ச் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக உள்ளார்.
 
5. மன்வீர் நிஜார். 28 வயதான இவர் சிட்டி வங்கியின் ஐரோப்பிய முன்பேர பங்கு வர்த்தக பிரிவின் இணைத் தலைவராக உள்ளார். லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்சில் படித்தவர்.
 
6. 29 வயதான ராஜ் கிருஷ்ணன், பயலாஜிகல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனராக உள்ளார். புற்றுநோயைக் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனையை கண்டுபிடித்தவர் இவர். ரத்தத்தின் மின்வீச்சை வைத்து புற்றுநோயை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.
 
7. சிதாந்த் குப்தா. 27 வயதான வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவரான இவர், மின்சாரம், கேஸ், வெப்பத்தின் தேவையைக் குறைக்கும் சென்சார்கள் மற்றும் சாப்ட்வேரை உருவாக்கி வருகிறார்.
 
8. 24 வயதான நிகில் அரோரா, இவர் குறைந்த விலையில் உண்ணத்தகுந்த காளான்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் ஆவார்.
 
9. மன்ஜீத் அகுஜா- 17 வயதான இவர் சிஎன்பிசியின் தயாரிப்பாளராகவும், அமெரிக்கப் பங்குச் சந்தையில் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
 
இவர்கள் உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.





[Continue reading...]

கிங்பிஷரை பின் தள்ளிய மாறனின் ஸ்பைஸ்ஜெட்!

- 0 comments
 
 
 
இந்திய விமான சந்தையில் கிங்பிஷர் விமான நிறுவனம் 2வது இடத்திலிருந்து 5வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.
 
நிதித் தட்டுப்பாடு என்று கூறி திடீரென நூற்றுக்கணக்கான விமான சேவைகளை சொல்லாமல் கொள்ளாமல் ரத்து செய்தது விஜய் மல்லையாவின் கிங்பிஷர். அத்தோடு செலவுக் கட்டுப்பாடு என்று கூறி பலவிதமான சலுகைகளையும் ரத்து செய்தது.
 
இதையடுத்து அந்த நிறுவன விமானங்களின் பயணிப்போர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அடுத்த நிலையில் இருந்த இந்த நிறுவனம் இப்போது 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
இப்போது இந்தியாவில் பயணிகள் அதிகமாக பயணிக்கும் விமான நிறுவனங்களில் முதலிடத்தில் ஜெட் ஏர்வேஸே உள்ளது. இந்த நிறுவனம் 27.1 சதவீத சந்தையை தன் வசம் வைத்துள்ளது.
 
அடுத்த இடத்தை ராகுல் பாட்டியாவின் இன்டிகோ (19.8%) நிறுவனமும், 3வது இடத்தை ஏர் இந்தியாவும் (17.4%.) பிடித்துள்ளன.
 
4வது இடத்தை சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் (15.5) பிடித்துள்ளது. 5வது இடத்தில் தான் கிங்பிஷர் உள்ளது.



[Continue reading...]

கோவையில் பெண்களை செல்போனில் துரத்தும் ரோமியோக்கள்

- 0 comments
 
 
அன்று ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்ல கடிதம் அனுப்பினோம். ஆனால்... இன்று இன்டர்நெட், செல்போனில் மெசேஜ் அனுப்புகிறோம். அன்று ஒருவரிடம் ஒரு முக்கியமான விசயம் பற்றி பேச நேரில் சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால்... இன்று இன்டர்நெட், செல்போனில் தொடர்பு கொண்டு அடுத்த நிமிடமே தகவலை பரிமாறிக் கொள்கிறோம். இதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியை காட்டுகிறது.
 
 
ஆனால் அந்த விஞ்ஞான வளர்ச்சியில் உருவான கருவிகளெல்லாம் சில நேரங்களில் சில கிரிமினல்களிடம் சிக்கி தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு குற்றங்கள் உருவாகிறது.
 
சமீபத்தில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார் அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் நடத்தும் கம்பெனிக்கு தனது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். எத்தனை முறையோ எச்சரித்தும் தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் முத்துக்குமாரை அந்த பெண் கண்டித்தார்.
 
அப்போதும் அவர் எல்லை மீறி போனதால் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். கைது செய்யப்பட்ட முத்துக்குமாரிடம் வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதும் அதில் பெண்கள் பேசினால் வசியம் செய்யும் வகையில் ஆபாசமாக பேசுவதும் எச்சரித்தால் இணைப்பை துண்டித்து விடுவதும் எனது பொழுதுபோக்கு என்று போலீசாரிடம் வாக்குமூலமாக சொன்னார்.
 
முத்துக்குமாரை போன்று கோவையில் ஏராளமான ரோமியோக்கள் உலா வருகிறார்கள். பெண்கள் நடத்தும் தையல் கடைகள், நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மூலம் செல்போன் எண்களை அறிந்து கொண்டோ அல்லது அந்த பெண்களின் நண்பர்கள் மூலமாக ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எண்களை பெற்றுக் கொண்டோ பேசுகிறார்கள்.
 
முதலில் தெரியாமல் தொடர்பு கொண்டு விட்டதாக பேச்சில் காட்டிக் கொள்ளும் அவர்கள் எதிர்முனையில் பேசும் பெண்கள் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் அவ்ளோதான். தங்களது ரோமியோ கேரக்டரை பேச்சில் காட்டி அந்த பெண்களை மயக்கி விடுகிறார்கள். இது பின்னர் காதல் அல்லது கள்ளக்காதலில் போய் முடிகிறது. தொடர்ந்து சில குற்றச் செயல்களுக்கும் காரணமாகி விடுகிறது.
 
கோவை பீளமேட்டை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ராணி (பெயர் மாற்றம்). தனியார் கல்லூரியில் படித்த இவருக்கும் சென்னையில் வேலை பார்த்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் செல்போன் மிஸ்டு கால் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
 
அடிக்கடி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பேசியதால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ராணியை சந்திக்க விரும்பிய ரமேஷ் தனது வேலையை கோவைக்கு மாற்றம் செய்து இங்கு வந்தார்.
 
ஒண்டிப்புதூரில் ரூம் எடுத்து தங்கிய ரமேஷ் ஒருநாள் ராணியை அங்கு அழைத்தார். கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வந்த ராணி ஒண்டிப்புதூர் சென்று ரமேசை சந்தித்தார். அங்கு காதல்... காமத்தில் முடிந்தது. அந்த காம படத்தை ராணிக்கு தெரியாமல் ரமேஷ் தனது செல்போனில் படமாக்கிக் கொண்டார்.
 
இன்னொருநாள் ரமேசை சந்திக்க சென்றபோது அவரது லேப்டாப்பை ராணி பார்க்க நேரிட்டது. அதை திறந்து பார்த்த ராணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது அந்தரங்க லீலைகளை ரமேஷ் படம் பிடித்து வைத்திருந்ததை கண்டு ராணி அதிர்ந்தார். அதற்கும் மேலாக தன்னைப்போல மேலும் பல பெண்களிடம் ரமேஷ் உல்லாசம் அனுபவித்ததும் அதில் படமாக ஓடியது.
 
இதுபற்றி கேட்ட போது ராணியிடம் ரமேஷ் தனது கிரிமினல் முகத்தை காண்பித்தார். "உன்னுடன் நான் இருக்கும் இந்த படத்தை இன்டர்நெட்டில் பரவ விட்டுவிடுவேன். அப்படி செய்யாமல் இருக்க பணம் கொடு" என்று கேட்டு மிரட்டினார்.
 
தொழில் அதிபரின் மகள் என்பதாலும் தனது எதிர்காலம் பாழாவிடுமே என்று அச்சமடைந்ததாலும் ராணி அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார். இப்படி பணம் கேட்டு மிரட்டும் பழக்கம் தொடர்ந்து கொண்டே போனதால் ஒரு கட்டத்தில் ராணி பணம் தர முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ரமேஷ் தனது லேப்டாப்பில் இருந்த ராணியின் அந்தரங்க லீலைகளை இன்டர்நெட்டில் பரவவிட்டார். அதிர்ச்சி அடைந்த ராணி இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய... ரமேஷ் கைதானார்.
 
இதேபோல போத்தனூரை சேர்ந்த திருமணமான ஒரு பெண் எதிர்வீட்டில் இருந்த ஒரு வாஸ்து நிபுணர் குமரேசனுடன் எசகுபிசகாக பழக அது உல்லாசத்தில் முடிந்தது. அதை படம் பிடித்த வாஸ்து நிபுணர் இன்டர்நெட்டில் பரவ விட்டார். இதை அந்த பெண்ணின் கொழுந்தனார் பார்த்து விட விவகாரம் பெரிதானது. அந்த பெண் கணவரை பிரிந்து வீட்டை விட்டு துரத்தப்பட்டார்.
 
வாழ்க்கை பறிபோன வேகத்தில் சைபர் கிரைம் போலீசுக்கு அந்த பெண் சென்றார். விளைவு... வாஸ்து நிபுணர் கைதானார். இப்படி செல்போன், இன்டர்நெட் வாயிலாக கோவையில் நடைபெறும் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன.
 
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சைபர் கிரைம் போலீசில் 93 வழக்குகள் பதிவாகியுள்ளது. 2010-ம் ஆண்டு அந்த வழக்குகள் 508 ஆக உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு கடந்த நவம்பர் மாதம் வரை 1140 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 730 வழக்குகளை போலீசார் முடித்துவிட்டனர். 410 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகிறது.
 
சிக்கிக் கொண்டால் தண்டனை உண்டு என்று தெரிந்திருந்தும் இன்னமும் பெண்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் இளசுகள் நடமாடத்தான் செய்கிறார்கள். ஏதாவது ஒரு செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் விட்டு அந்த நபர் தொடர்பு கொண்டு பேசும்போது அது பெண்ணாக இருந்தால் பேச்சை தொடர்வதும் அப்போதும் பேச்சு கொடுத்தால் ஆபாசத்தை தொடங்குவதும் இந்த ரோமியோக்களின் ஸ்டைல்.
 
போலீசில் சிக்கும்போது அவர்கள் சொல்வது என்னவென்றால், செல்போனில் பேசுவது, மெசேஜ் அனுப்புவது எனக்கு பொழுதுபோக்கு என்கிறார்கள். ஆனால் அவர்களது அந்த பொழுதுபோக்கு சில பெண்களின் எதிர்காலத்தை பாதிப்பதையும் சில பெண்களின் குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்தாக அமைவதையும் அவர்கள் புரிந்து கொள்ளாததுதான் காலத்தின் கோலம்!
 
ஆனால் இதுபோன்ற செயல்களால் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். செல்போன் பயன்படுத்தும் பெண்களாக இருந்தால் தெரியாத எண்களில் தொடர்பு கொள்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் செய்யும் பெண்களாக இருந்தால் அழைப்புகள் வர வாய்ப்பு உண்டு. அப்படி தொடர்பு கொண்டு பேசும்போது எதிர்முனையில் பேசுபவரின் பேச்சை கவனித்து பேச்சுக் கொடுக்க வேண்டும். பேச்சு வித்தியாசமாக இருந்தால் தைரியமாக போலீசில் புகார் செய்ய தயாராக வேண்டும்.
 
அப்போதுதான் செல்போன் ரோமியோக்களின் கொட்டத்தை அடக்க முடியும். எத்தனை இருந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை மட்டுமல்ல செல்போன் தொல்லைகளையும் ஒழிக்க முடியாது! போலீசுக்கே போன் செய்து மிரட்டல் இளைஞர்கள்தான் விஞ்ஞான வளர்ச்சியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் மாணவர்களும் தங்களது பள்ளி, கல்லூரி நிர்வாகத்தை மிரட்டவும் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.
 
பள்ளியில் வெடிகுண்டு இருக்கிறது, கல்லூரியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று புரளியை கிளப்பி மாணவர்களும் பஸ், ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி இளைஞர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். இப்படியும் பலர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
 
சைபர் கிரைம் போலீசாரின் கணக்குபடி இதுபோன்று மிரட்டல் விடுத்து இதுவரை கடந்த ஒரு ஆண்டில் மாணவர்கள் உள்பட 25 பேர் கைதாகி உள்ளனர். கோவை வாசிகளை தவிர வெளியூர்களில் இருந்தும் கோவைக்கு தொடர்பு கொண்டு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானவர்களும் இருக்கிறார்கள்.
 
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கே அதாவது 100-க்கு போன் செய்து பெண் போலீஸ்களை கலாய்த்தவர்களும் இருக்கிறார்கள். அதற்கும் மேலாக போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கே தொடர்பு கொண்டு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான கில்லாடிகளான புதுக்கோட்டையை சேர்ந்த முத்தமிழ்செல்வம், தேனியை சேர்ந்த சுந்தரபாண்டி ஆகியோரும் இதில் அடங்குவர்.



[Continue reading...]

சுவிட்சர்லாந்தில் கொண்டாட்டம் சிக்கப் போகிறார் ஜீவா?

- 0 comments
 
 
 
இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் உண்மைத்தன்மைக்கு நமது சுவிட்சர்லாந்து வாசகர்கள்தான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். காரணம், நாம் கேள்விப்பட்ட தகவல் உண்மைதானா என்பதை அறிய பலமுறை ஜீவாவுக்கு போன் செய்துவிட்டோம். நாட் ரீச்சபுள் என்பதுதான் ஒரே பதிலாக இருக்கிறது.
 
நாம் கேள்விப்பட்ட செய்தி இதுதான். வருகிற ஜனவரி மாத புத்தாண்டு தினத்தன்று ஜீவாவும், அவருடன் சங்கீதா, அவரது கணவர் க்ருஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கப் போகிறார்கள். இவர்களுக்கு அங்கு பலமான விருந்து காத்திருக்கிறது. இவர்கள் செய்யப் போகும் வேலை?
 
அங்குள்ள தமிழர்களிடத்தில் அளவளாவி மகிழ்வதும், மகிழ்ச்சியூட்டுவதும்தான். இதிலென்ன தவறு என்கிறீர்களா? அடுத்த வரிக்கு வாருங்கள். இந்த விருந்தை ஏற்பாடு செய்திருப்பதே இலங்கை அரசின் வலது பாக்கெட்டில் அமர்ந்திருக்கிற கருணாதான் என்கிறார்கள்.
 
தெரிந்தேதான் செல்கிறார்களா, அல்லது தெரியாமல் செல்கிறார்களா என்பதுதான் நமது கேள்வி.



[Continue reading...]

சோ.அய்யருக்கு விரைவில் டாட்டா?

- 0 comments
 
 
சசிகலா குடும்பத்தினரை களையெடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா அடுத்த கட்டமாக சசிகலா ஆதரவாளர்கள் மீதும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் உள்ளதாக கூறப்படுகிறது.
 
சசிகலாவுக்கு வேண்டப்பட்ட பலர் அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் பி.ஏக்கள், காவல்துறை அதிகாரிகள் என பல மட்டத்தில் நிறைந்துள்ளனர். இவர்களையெல்லாம் எப்படி ஜெயலலிதா களையெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இதில் சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இந்த வரிசையில் அடுத்து மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யரின் பெயர் அடிபடுகிறது. இவர் சசிகலா குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராம். பெயர்தான் அய்யர், ஆனால் இவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்.
 
இவரது பதவிக்கு இப்போது ஆபத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரை சீக்கிரமாக தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டு போய் விடுவார் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர், பல்துறைச் செயலாளர் பதவிகள் உள்ளிட்டவற்றை வகித்த ஐஏஎஸ் அதிகாரிதான் அய்யர். சசிகலா பரிந்துரைப்படிதான் இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் பெயரும் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதாக தெரிகிறது.
 
நீண்ட காலமாக ஜெயலலிதாவின் ஆஸ்தான வக்கீலாக இருந்து வந்த ஜோதியை, சசிகலா தரப்பு ஓரம் கட்டியதால் கடுப்பான ஜோதி திமுகவில் போய் ஐக்கியமாகி விட்டார். இதையடுத்து அந்த இடத்துக்கு சசி தரப்பால் கொண்டு வரப்பட்டவர்தான் நவநீதகிருஷ்ணன்.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பிறந்தநாள் பரிசு வழக்கு உள்ளிட்டவற்றில் இவர்தான் ஆஜராகி வந்தார். 3வது முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இவரையே அட்வகேட் ஜெனரலாக்கி விட்டார் ஜெயலலிதா - சசி பரிந்துரையின் பேரில்.
 
ஆனால் நவநீதகிருஷ்ணனால் ஜெயலலிதா அரசுக்கு சிக்கல்கள்தான் வந்ததே தவிர ஒரு நல்லதும் நடக்கவில்லை. அதில் முக்கியமானது சமச்சீர் கல்வி வழக்கு. தேவையில்லாமல் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக சமச்சீர்கல்வித் திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய, அதை தடுக்காமல், உரிய சட்ட ஆலோசனை கூறாமல் உச்சநீதிமன்றம் வரை இட்டுச் சென்று ஜெயலலிதா அரசுக்குப் பெரும் களங்கத்தையும், கெட்ட பெயரையும் ஏற்படுத்தியவர் நவநீதகிருஷ்ணன்.
 
மேலும் மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என பலவற்றிலும் கூட நவநீதகிருஷ்ணன் பெரிய அளவில் சொதப்பினார். ஜெயலலிதா அரசை ஒவ்வொரு கோர்ட்டாக குட்டு வாங்க வைத்தார்.
 
இந்த நிலையில் தற்போது சசிகலாவே போய் விட்டதால் விரைவில் நவநீதகிருஷ்ணனும் தூக்கப்பட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.
 
இதேபோல அமைச்சர்களுக்கு நியமிக்கப்பட்ட அரசியல் ரீதியான பி.ஏக்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலர் சசி ஆதரவாளர்கள் என்று தெரிகிறது. எனவே விரைவில் இவர்கள் நீக்கப்படுவார்கள் என்று பேசப்படுகிறது.



[Continue reading...]

ராகுலை மணக்க பெண்கள் போட்டாபோட்டி: குவியும் இமெயில்கள்

- 0 comments
 
 
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை மணக்க விருப்பம் தெரிவித்து பல பெண்கள் அவருக்கு இமெயில் அனுப்பி வருகின்றனர்.
 
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு 40 வயதாகியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எப்பொழுதும் அமைதியாகக் காணப்படும் ராகுலுக்கு நாட்டில் பல ரசிகைகள். அவருக்கு 40 வயதாகிவிட்டாலும் அவரை மணக்க இளம்பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சில திரைப்பிரபலங்கள் கூட ராகுலை மணக்க விரும்புகின்றனர்.
 
காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி இந்த வருடமாவது திருமணம் செய்துகொள்ள மாட்டாரா என்று எதிர்பார்க்கின்றனர். ராகுல் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை முன்னி்ட்டு அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே தனக்கு தினமும் வரும் இமெயில்களைப் படித்து பதில் அனுப்ப அவர் தவறுவதில்லை.
 
சமீப காலமாக அவருக்கு திருமணம் பற்றிய இமெயில்கள் வநது குவிகின்றன. பல பெண்கள் தங்களைத் மணந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர். பலர் ராகுலை திருமணம் செய்ய வலியுறுத்தியும், தங்களுக்கு தெரிந்த பெண்களை மணக்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இமெயில்களைப் பார்க்கும் ராகுலுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இருப்பினும் தன் மீதுள்ள அன்பால் இமெயில் அனுப்புபவர்களுக்கு திருமணம் பற்றி நாசுக்காக பதில் அனுப்புகிறார்.



[Continue reading...]

நடைபாதையில் மேஜை-நாற்காலி அமைத்து மக்கள் பணியாற்றுவேன்: மு.க. ஸ்டாலின்

- 0 comments
 
 
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எல்லைக்குள்ளாகவே பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதற்கும், அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை கேட்டு, அவற்றை களைவதற்கும் ஏதுவாக தலைவர் கலைஞர் 1996ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்களை கட்டித்தர உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் பெரும்பான்மையான தொகுதிகளில் அப்பணி நிறைவேற்றப்பட்டது.
 
அந்த வகையில், சென்னையில் ஏற்கனவே இருந்த 14 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகங்கள் சென்னை மாநகராட்சி சார்பிலும்-பொதுப்பணித்துறையின் சார்பிலும் அமைத்துத்தரப்பட்டுள்ளது. தொகுதிகளின் மறு சீரமைப்பு அடிப்படையில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சென்னை 16 சட்டமன்றத் தொகுதிகளாக உயர்ந்தது.
 
அதில் ஐந்து தொகுதிகளுக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகங்கள் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2011 ஜூன் மாதத்தில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் மேற்சொன்ன ஐந்து சட்டமன்றத் தொகுதி அலுவலகங்கள் கட்டுவதற்கு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதன் அடிப்படையில், கொளத்தூர் தொகுதியில் முதல் வட்டச் சாலை, ஜவஹர் நகர், கொளத்தூர் என்னும் இடத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு கட்டப்பட்டு, எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் இருந்த, பழைய கட்டிடம் ஒன்றினை சீர்ப்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தினர், தொகுதி அலுவலகமாக தற்போது எனக்கு வழங்கினார்கள்.
 
அன்று முதல் தொடர்ந்து, சென்னையில் நான் இருக்கும் சமயங்களில் எல்லாம், வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அலுவலகத்திற்குச் சென்று பொதுமக்களிடத்தில் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்து கொண்டு வருகிறேன். அதுமட்டுமல்லாமல், இரண்டு பேரை நிரந்தரமாய் அங்கே பணியில் அமர்த்தி, முழுநேரமும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உரிய துறைகளுக்கு அனுப்பி, தீர்வு காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
இதனை சகித்துக்கொள்ள முடியாத, அ.தி.மு.க. அரசு, அந்த அலுவலகத்தை ஒதுக்கீடு செய்தது தவறு என்றும், மீண்டும் மன்றக் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து முடிவெடுத்து அனுப்பும்படியும் அரசு செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அன்றைய மேயர் மா. சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.
 
அந்த வகையில், அன்றைய மேயர் தலைமையில் மன்றம் கூடி, அனைத்துக்கட்சித் தலைவர்கள் குறிப்பாக தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் மு.க. ஸ்டாலினுக்கு விதி முறைகளின்படிதான், நியாயமாக அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது.
 
மக்களுக்கு மிகச்சிறப்பாக சேவை ஆற்றிட பயன்படும் அந்த அலுவலகம், அங்கேயே தொடர்ந்திட வேண்டும் என உரையாற்றி, அந்த உரைகளின் குறிப்புகளெல்லாம், முறைப்படி அரசு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருசில குறுகிய கண்ணோட்டம் கொண்ட ஆளுங்கட்சியின ரின் தூண்டுதலின்பேரில், அ.தி.மு.க. அரசு அந்த அலுவலகத்தை காலி செய்ய தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
 
சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற வகையில் எனது தொகுதி மக்களுக்கு கடமையாற்றும் அந்த அலுவலகம் பறிக்கப்படுமேயானால், கொளத்தூர் மையப்பகுதியில் எங்கேயாவது ஒரு நடை பாதையின் நடுவே மேஜை- நாற்காலி போட்டுக் கொண்டு, என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.



[Continue reading...]

கமல் படத்தில் ஷங்கர் - லிங்குசாமி?

- 0 comments
 
 
 
கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளைக் கேட்டு வருகிறாராம்.
 
கமலிடம் இப்போது இரு இயக்குநர்களின் ஸ்கிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் இரு இயக்குநர்களும் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
 
அந்த இருவர் இயக்குநர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி. லிங்குசாமியின் ஸ்கிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம்.
 
எனவே லிங்குசாமி இப்போது வேட்டை முடிந்ததும், விஷாலை வைத்து படம் பண்ணப் போகிறாராம். அதே நேரம் கமல் படத்திலும் அவர் இருப்பாராம். எப்படி? ஒரு தயாரிப்பாளாராக.
 
ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கக் கூடும் என்கிறார்கள், வேட்டை இசை விழாவுக்கு ஷங்கர் வந்ததை வைத்து.
 
தமிழ் சினிமாவில் எந்தக் கணிப்பும் மாறலாம்... அதுவும் கமல் விஷயத்தில் பல கணிப்புகள் பொய்யாய் போயிருக்கின்றன. தனக்கு சரி எனப் படும் வரை எதற்காகவும் சமரசமாகாத கலைஞர் அவர். எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்!



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger