Thursday 22 September 2011

உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக -காங்கிரஸ் திடீர் ரகசியப் பேச்சு

- 0 comments
 
 
 
 
 
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்தது.
 
பின்னர் சமரசப் பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து, இன்று எதிர்க்கட்சியாகியுள்ளது.
 
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீட்டுக்காக கூட்டணிக் கட்சிகள் காத்திருந்த நேரத்தில் அத்தனை இடங்களுக்கும் அதிரடியாக தனது வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சியில் மூழ்கியது. தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டதால் என்ன செய்வது, எங்கு போவது, எப்படிப் போவது என்பது தெரியாமல் தேமுதிகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
 
தற்போது இடதுசாரிகளை மட்டும் அழைத்து அதிமுக பேசி வருகிறது. அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.
 
இந்த நிலையில் தேமுதிக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்புடன் ரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து வந்தது. ஆனால் திமுக திடீரென தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டதால் காங்கிரஸ் குழம்பிப் போய் நிற்கிறது. இரு கட்சிகள் சார்பிலும் யார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இப்படி திமுக, அதிமுகவால் திராட்டில் விடப்பட்ட காங்கிரஸும், தேமுதிகவும் திடீரென பேசத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்கள் கனிந்து, புதுக் கூட்டணி உருவாகுமா, அதில் இடதுசாரிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



[Continue reading...]

ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்

- 0 comments
 
 
 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம் குற்றம் சாட்டியதையடுத்து நேற்று முன் தினமே தனது பதவியை ராஜினாமா செய்ய சிதம்பரம் முன் வந்தார். ஆனால், அவரை பிரதமர் மன்மோகன் சிங் தடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
 
இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் பி.ஜி.எஸ். ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குனர் வினி மகாஜனுக்கு கடந்த மார்ச் மாதம் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகே இந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
 
இந்தக் கடிதத்தை ஆர்டிஐ சட்டப்படி பெற்று, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவுடன், அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த பிரதமரை சிதம்பரம் தொடர்பு கொண்டு, தனது நேர்மை சந்தேகிக்கப்படுவதால் பதவி விலக விரும்புவதாகக் கூறினார்.
 
அப்போது பிராங்பர்ட்டில் இருந்த பிரதமர், இந்த விவகாரத்தில் நான் நாடு திரும்பும் வரை அமைதி காத்திடுங்கள். எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம். உங்களது நேர்மையை நான் உள்பட யாரும் சந்தேகிக்க முடியாது என்று கூறியதோடு, இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் பேசுவதாக உறுதியளித்தார்.
 
மேலும் நான் டெல்லிக்குத் திரும்பும்வரை இது தொடர்பாக உங்களது கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதனால் தான் இதுவரை சிதம்பரம் இது குறித்து எந்த விளக்கமும் தர மறுத்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
மேலும் சிதம்பரத்தின் பெயரைக் கெடுக்க நடந்துள்ள இந்த முயற்சிக்கு காங்கிரஸ் பணியக் கூடாது என்று சோனியா காந்தியும் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் சிதம்பரத்துக்குப் பின்னால் அந்தக் கட்சி அணி திரண்டு வருகிறது.
 
இது குறித்து தன்னுடன் விமானத்தில் அமெரிக்கா பயணித்த நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 2ஜி விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து விரிவாக பேச முடியாது. ஆனால், ப.சிதம்பரத்தின் நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு.
 
இந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு மத்திய அமைச்சர்களிடையே மோதல் நடப்பதாக நீங்களாக யூகித்துக் கொள்வதும் தவறு என்றார்.
 
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அரசுத் துறைகளின் நடைமுறைகளை திசை திருப்பி ஊழல் போல காட்ட எதிர்க் கட்சிகள் காட்ட முயல்வது அபாயகரமானது என்று கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பல்வேறு அரசியலமைப்பு அமைப்புகளுக்கிடையே பிளவை உண்டாக்கும் மோசமான முயற்சி நடந்து வருவது நல்லதல்ல என்றார்.
 

 


[Continue reading...]

ராஜினாமா முடிவை ப.சிதம்பரம்தான் எடுக்க வேண்டும்- கருணாநிதி

- 0 comments
 
 
 
பிரணாப் முகர்ஜியின் கடிதத்தைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதா, இல்லையா என்பதை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
சென்னையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதலாவது திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கருணாநிதி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டி பிரணாப் முகர்ஜி புகார் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
 
அதற்குப் பதிலளித்த கருணாநிதி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையையும், பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தவறாமல் தெரிவித்து வந்தார் ராசா.
 
முழு விவரம் தெரியாமல் ப.சிதம்பரம் விலக வேண்டுமா என்பது குறித்து நான் பதிலளிக்க முடியாது. விலகல் குறித்து ப.சிதம்பரம்தான் எடுக்க வேண்டும்.
 
சிதம்பரத்திற்கு இது தெரியும் என்றுதான் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அவருக்குத் தொடர்பு உள்ளது என்று அதற்கு அர்த்தம் இல்லை என்றார் கருணாநிதி.
 
இருப்பினும் பிரணாப் முகர்ஜியின் கூற்று தங்களுக்குச் சாதகமாக இருக்கும், ராசாவின் வாதம் வலுவடையும் என திமுக தலைமை நம்புவதாக தெரிகிறது. இதை 2ஜி வழக்கின் விசாரணையின்போது ராசா முன் வைப்பார் என்றும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
'திமுகவுக்குப் பிரகாசமான வெற்றி வாய்ப்பு':
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதால் திமுக தனித்துப் போட்டியிடுகிறது. மக்களின் அடிப்படைத் தேவையை நோக்கமாகக் கொண்டே தேர்தலை சந்திக்கிறது திமுக.
 
தனித்துப் போட்டியி்ட்டாலும் சூழ்நிலைக்கேற்ப சில கட்சிகளுக்கு சில இடங்களை விட்டுத் தருவோம் என்றார்.



[Continue reading...]

விஜயகாந்த் வரவேற்பு பேனர் கிழிப்பு

- 0 comments
 
 
 
 
 
 
கோவையில் வருகிற 25 - ந் தேதி தே.மு.தி.க. 7 - ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்றும், இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
 
இதையடுத்து விஜயகாந்தை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பஸ் நிறுத்தத்தில் மிகப் பெரிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
 
 
 
இந்த பேனரை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் பிளடோல் கிழித்து சேதப்படுத்தி விட்டனர்.
 
இந்த தகவல் கிடைத்ததும் தே.மு.தி.க. வினர் 50 - க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு உருவானது. பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
 
பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அங்கு பதட்டம் நிலவுகிறது.
 
விஜயகாந்த் வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டதற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.



[Continue reading...]

நேப்பியர் பூங்க��வில் அன்பழகன்!

- 0 comments


க – 21 அண்ணாவின் அமைச்சரவையில் போலீஸ் இலாகா கருணாநிதிக்கே தரப்படும் என்று பேசப்பட்டது; ஆனால் அது நடக்கவில்லை. தற்போது கருணாநிதி முதலமைச்சர். அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்த இலாகாக்களில் ஒன்று போலீஸ் இலாகா. அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் தவிர ப.உ. சண்முகம், கே.வி. சுப்பையா, ஓ.பி.ராமன், சி.பா. ஆதித்தனார் ஆகிய நால்வரையும் அமைச்சராக்கியிருந்தார் கருணாநிதி. இந்த நால்வரில் ஆதித்தனாரை மட்டும் எம்.ஜி.ஆரால் ஜீரணிக்க முடியவில்லை. காரணம், பழைய பகை. எம்.ஜி.ஆர் திரைப்படங்களைத் தன்னுடைய பத்திரிகைகளில் கேலி செய்திருந்தார் [...]

http://famousstills.blogspot.com



  • http://famousstills.blogspot.com

  • [Continue reading...]

    கற்கள் எப்படி வந���தன?

    - 0 comments


    ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் அக்டோபர் 20-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர் சாதாரண பிரஜையாகத்தான் நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். தமிழக முதல்வராக இருக்கக்கூடாது. எனவே, அவர் இப்போதே பதவி விலக வேண்டும். தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தால், மீண்டும் முதல்வர் பதவியில் அமரலாம்!’ என்று கோரி டிராஃபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டப்படி கோர்ட்டில் ஆஜராகும் போது முதல்வராக இருக்கக்கூடாதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, தார்மீக [...]

    http://famousstills.blogspot.com



  • http://famousstills.blogspot.com

  • [Continue reading...]

    ஃபுக்குஷிமா முத��் கூடங்குளம் வரை – 1

    - 0 comments


    மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென [...]

    http://famousstills.blogspot.com



  • http://famousstills.blogspot.com

  • [Continue reading...]

    ஃபுக்குஷிமா முத��் கூடங்குளம் வரை – 2

    - 0 comments


    முதல் பாகம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் விவசாயத்துக்குள் நுழைந்து நாகரிகங்களாக உருமாற ஆரம்பித்தது. அதன் பின் எத்தனையோ நாகரிகங்களும் பேரரசுகளும் உருவாகி மடிந்துபோயிருக்கின்றன. கோடி தலைமுறைகள் வந்துபோயிருக்கின்றன. ஒருவேளை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருகதிரியக்க விபத்து நடந்திருந்தால் அதன் தாக்கத்தை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருப்போம். காரணம், கதிரியக்கப் பொருட்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வீரியத்துடன் இருக்கும் தன்மையுடையவை.  இந்நிலையில், இன்று நாம் செய்யும் ஒரு தவறு நம்முடைய எத்தனை சந்ததிகளை அழிக்க வல்லது என்பதை நாம் பரிந்துகொள்ளவேண்டும். [...]

    http://famousstills.blogspot.com



  • http://famousstills.blogspot.com

  • [Continue reading...]

    அன்புள்ள மோடிக்��ு, ஹிட்லர் எழுது��து…

    - 0 comments


    அன்புள்ள நரேந்திர மோடி, நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. நாம் இதுவரை சந்தித்துக்கொண்டதில்லை என்றாலும் உன்னை என்னுடைய சகோதரனாகவே கருதிவந்தேன். இப்போது உன்னை குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். விளக்குகிறேன். இனவெறுப்பு அல்லது இனஅழித்தொழிப்பு என்னும் பெயரால் என் செயல்கள் இன்று அழைக்கப்படுகின்றன. மனித குலத்தின் விரோதியாகவும், படுபயங்கர சாத்தானாகவும் என்னைப் பலர் உருவகப்படுத்துகிறார்கள். பல லட்சக்கணக்கானவர்களை நான் கொன்றேனாம். குழந்தைகள் என்றும் பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் யூதர்களை நான் தேடித்தேடி சிறைப்பிடித்து அழித்தேனாம். [...]

    http://famousstills.blogspot.com



  • http://famousstills.blogspot.com

  • [Continue reading...]

    ஆதாம் கடித்த மிச���சம் – அத்தியாயம�� 20

    - 0 comments


    பரவும் ஆப்பிள் காய்ச்சல் ஆப்பிள் செல்போன் தயாரிப்பதற்கு முன்னரே பல கம்பெனிகள் பல செல்போன்களை பல்வேறு ஆப்ஷன்களோடு விற்றுக்கொண்டு தான் இருந்தன. புது செல்போன்களையும் அவ்வப்போது அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருந்தன. அப்படியிருக்க ஒரு கம்பெனி ஒரே ஒரு செல்போன் மூலம் எப்படி ஒரு துறையின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது? அதற்கு முன் இருந்த செல்போன்கள் அவ்வளவு மோசமாக இருந்ததா? அல்லது ஆப்பிளின் செல்போன் அவ்வளவு மேம்பட்டதாக இருந்ததா? இல்லை என்பதுதான் பதில். செல்போன் எவ்வளவு சிறிதாக [...]

    http://famousstills.blogspot.com



  • http://famousstills.blogspot.com

  • [Continue reading...]

    அரசாங்கம் விலகி��்கொள்ளட்டும்!

    - 0 comments


    பொது போக்குவரத்துத் துறையில் (அதாவது தனியார் வாகனங்கள் அல்லாதவை)  பல பத்தாண்டுகளாகக் கடும் தொடர் பற்றாக்குறை நிலவிவருகிறது. சென்னையின் தேவை சுமார் 6000 நகரப் பேருந்துக்கள். ஆனால் அதில் பாதி அளவு தான் ஒடுகின்றன. பற்றாக்குறையினால் பலரும் இரண்டு சக்கர வாகனங்கள் அல்லது கார்கள் வாங்கி உபயோகிக்கின்றனர். ஏறக்குறைய 70 நபர்கள் ஒரு பஸ்ஸில் செல்லலாம். பஸ் இல்லாததால், சொந்த வாகனங்களை இந்த 70 பேரும் உபயோகிக்கும்போது, road space குறைந்து, நெரிசல் அதிகரிக்கின்றது. கூடவே, மாசும். [...]

    http://famousstills.blogspot.com



  • http://famousstills.blogspot.com

  • [Continue reading...]

    சொந்த மகனைப் போல பாசம் காட்டிய ஜெயலலிதா! - அஜீத் உருக்கம்

    - 0 comments
     
    சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.
     
    சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன்.
     
    அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!," என்று கூறியுள்ளார்
     
    திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.
     
    என் சாவுக்கு கூடும் கூட்டம்....
     
    மேலும் அவர் கூறுகையில், "எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று தெரிவித்துள்ளார்.



    [Continue reading...]

    உள்ளாட்சி தேர்தல்:தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

    - 0 comments
     
     
     
     
     
     
    உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திமுக தனது முதல் வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட்டது. சென்னை மேயர் பதவிக்கு தற்போதைய மேயர் மா.சுப்ரமணியம் மீண்டும் போட்டியிடுகிறார்.
     
    உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக திமுக ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் நட்டாற்றில் விடப்பட்ட காங்கிரஸ் கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் பல கோஷ்டிகளாகப் பிரிந்து கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.
     
    இந்த நிலையில் மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்கள், நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் குறித்து திமுக தலைமை ஆலோசனை நடத்தி வந்தது. இதையடுத்து தற்போது வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர்.
     
    இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். முதல் பட்டியலாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
     
    மீண்டும் மா.சுப்ரமணியம்
     
    அதன்படி சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு தற்போதைய மேயர் மா.சுப்ரமணியமே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
     
    ஈரோடு மேயர் பதவிக்கு செல்லப்பொன்னி மனோகரன், நெல்லைக்கு அமுதா, தூத்துக்குடிக்கு பொன் இனிதா, திருப்பூருக்கு செல்வராஜ், கோவைக்கு கார்த்திக், வேலூருக்கு ராஜேஸ்வரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
     
    மதுரை, திருச்சி, சேலத்திற்குப் பின்னர்
     
    மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார்.
     
    86 நகராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
     
    இதேபோல 86 நகராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கான வேட்பாளர்களையும் கருணாநிதி அறிவித்தார்.



    [Continue reading...]

    கமிஷனரிடம் வீடியோ ஆதாரம் கொடுத்தார் சோனா!

    - 0 comments
     
     
     
     
     
    சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து, எஸ்பிபி சரண் தன்னை எப்படியெல்லாம் பலாத்காரம் செய்தார் என்பதற்கான வீடியோ ஆதாரம் கொடுத்தார் நடிகை சோனா.
     
    தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி. சரண் மது விருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாண்டி பஜார் போலீசில் நடிகை சோனா புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
     
    எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பணம் பறிக்கும் நோக்கில் சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
     
    ஆனால் தனக்கு சரண் கொலை மிரட்டல் விடுப்பதாகக்கூறி அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சோனா எதிர்த்தார்.
     
    இந்த நிலையில் சோனா இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
     
    பின்னர் சோனா நிருபர்களிடம் கூறுகையில், "எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன்.
     
    வீடியோவை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்," என்றார்.
     
    அவரிடம், "இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?" என்று நிருபர்கள் கேட்டனர்.
     
    அதற்கு சோனா, "இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லா விட்டால் நான் விடமாட்டேன்," என்றார்.
     
    "வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?" என்று கேட்டபோது, "அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்," என்றார் சோனா.



    [Continue reading...]

    தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்

    - 0 comments
     
     
     
     
     
    மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
     
    நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.
     
    ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத்.
     
    ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.
     
    'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.
     
    'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!



    [Continue reading...]

    Fw: ஐ.நா.வில் அனாதரவாக விடப்பட்ட மன்மோகன்

    - 0 comments
     
     
     
     
     
    வழக்கமாக பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. கூட்டத்திற்குப் போனால் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்துப் பேச அலை பாய்வார்கள், ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா போயுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையோ, இங்கிலாந்து பிரதமரையோ, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களையோ இந்த முறை அவர் சந்திக்கவில்லை.
     
    அன்னா ஹஸாரே போராட்டம், ஊழலுக்கு எதிரான இந்திய மக்களின் கொந்தளிப்பு, தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான ஊழல் புகார்கள் உள்ளிட்டவை காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் மிஸ்டர் கிளீன் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நற்பெயர் சர்வதேச அளவில் காலியாகியுள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
     
    இதன் காரண்மாகவே மன்மோகன் சிங்கை சந்திக்க எந்த வல்லரசுத் தலைவரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜபக்சே போன்ற இரண்டாம் கட்ட உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தும் நிலைக்கு பிரதமர் தள்ளப்பட்டுள்ளார்.
     
    இருப்பினும் இதைப் பொருட்படுத்தவில்லை மன்மோகன் சிங். மாறாக, மிக முக்கியமான விஷயத்தை அவர் தனது பேச்சின்போது ஐ.நா. மன்றத்தில் வைக்கவுள்ளார். அது ஐ.நா. சபையின் விரிவாக்கம் மற்றும் மறு சீரமைப்பு மற்றும் இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி என்பதுதான்.
     
    இந்தக் கோரிக்கைக்கு ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா மட்டும் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இந்த நிலையில் தற்போதைய கூட்டத்தில் ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் குறித்து விரிவாகப் பேசத் திட்டமிட்டுள்ளார் மன்மோகன் சிங்.
     
    இதுகுறித்து டெல்லியிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா .சபையை சீரமைக்கும் முயற்சியின்போது, குறிப்பாகப் பாதுகாப்புச் சபையை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் ஐ.நா. அமைப்பானது நடுநிலையுடனும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும்.
     
    ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர் நாடாக பொறுப்பேற்றதிலிருந்து, உலக அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாதுகாப்புச் சபையின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
     
    பணவீக்கம் போன்ற பிரச்சனைகளால் உலகப் பொருளாதாரம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தால் உலகப் பாதுகாப்புக்கும், நாடுகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் எழுந்துள்ள பிரச்னைகளால், எதிர்காலத்தில் ஸ்திரமற்ற சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
     
    பாலஸ்தீனப் பிரச்னை இதுவரை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. ஈரான், தெற்கு சூடான், இலங்கை, ஜப்பான், நேபாளம் ஆகிய நாடுகளுடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
     
    ராஜபக்சேவை சந்தித்துப் பேசும்போது இலங்கையின் முக்கியப் பிரச்சனையான தமிழர் பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் பெரிதாக பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மாறாக, இலங்கையை ஐஸ் வைக்கும் வகையிலான பல விஷயங்கள் குறித்தே பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     
    சீனாவைக் காரணம் காட்டி இந்தியாவிடமிருந்து முடிந்தவரை லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் ராஜபக்சே, இந்த சந்திப்பின்போதும் தனக்கு சாதகமான பல விஷயங்களை இந்தியாவிடமிருந்து உறுதிமொழியாக பெற முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     
    பிரதமரின் ஐ.நா. பயணத்தின்போது இன்னொரு முக்கிய சந்திப்பும் நிகழவுள்ளது. அது நேபாள பிரதமர் பாபுராம் பட்டாராயுடனான சந்திப்பு. ஏற்கனவே பாகிஸ்தானுடன் பஞ்சாயத்து உள்ளது. வங்கதேசமும் முழுமையாக ஒத்துவருவதில்லை. சீனாவைக் காட்டி இலங்கை மிரட்டுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக நேபாளமும் இந்தியாவின் நட்பு வட்டத்திலிருந்து வேகமாக விலகிக் கொண்டிருக்கிறது. எப்படி பாகிஸ்தான், இலங்கை ஆகியவை சீனாவின் நட்பு நாடுகளாக விளங்குகின்றனவோ அதே நிலையை நோக்கி நேபாளமும் செல்ல ஆரம்பித்திருப்பதால் இந்தியாவுக்கு கவலை அதிகரித்துள்ளது.
     
    எனவே நேபாளத்தை மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த நாட்டு பிரதமருடன் பேச மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நேபாள நாட்டுத் தலைவரை நீண்ட காலமாகவே இந்தியத் தரப்பில் யாரும் சந்திக்காமல் உள்ளனர். மேலும் நேபாளம் குறித்து இந்தியா முன்பு போல அதிக அக்கறை காட்டுவதில்லை. அலட்சியப் போக்கில்தான் இருந்து வருகிறது. இதுவே இந்தியாவை விட்டு நேபாளம் விலகிச் செல்ல முக்கியக் காரணம். இதை இப்போதுதான் இந்தியா உணர்ந்துள்ளதாக தெரிகிறது.
     
    மொத்தத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, வழக்கமாக வல்லரசு நாடுகளின் தலைவர்களுடன் பேசுவதற்கே நேரம் போதாமல் பிசியாக இருக்கும் மன்மோகன் சிங், இந்த முறை குட்டித் தலைவர்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போகிறார். அதேசமயம், ஐ.நா. மறுசீரமைப்பு என்ற முக்கிய வாதத்தையும் பொதுச் சபைக் கூட்டத்தில் வைத்து விட்டு வரப் போகிறார். இந்தியா மற்றும் பிரதமரின் எந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.



    [Continue reading...]

    2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

    - 0 comments
     
     
     
     
     
    2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.
     
    இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.
     
    2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார்.
     
    இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் Economic Affairs பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
     
    அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.
     
    ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.
     
    ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான்.
     
    இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
     
    இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது.
     
    இதன்மூலம் மத்திய அரசுக்குள் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி-ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
     
    நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.
     
    இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார்.
     
    கருத்து கூற பிரணாப் மறுப்பு:
     
    இந் நிலையில் இந்தக் கடிதம் குறித்து கருத்துக் கூற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார்.
     
    இந்திய- அமெரிக்க முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றார்.
     
    அதே நேரத்தில் ஊழலை ஒழிக்க தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்ததே நான் தான் என்றும் அவர் கூறினார்.
     
    சிதம்பரம் பதவி விலக பாஜக கோரிக்கை:
     
    இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகையில், பிரதமருக்கு பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதம் மூலமாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் தொடர்பு அம்பலமாகி விட்டது. நிதியமைச்சகமும், தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஸ்பெக்ட்ரம் விலை விவகாரத்தில் உடன்பட்டதால்தான், அதை செயல்படுத்த ஒப்புக்கொண்டதாக ஏற்கனவே பிரதமரும் கூறியுள்ளார்.
     
    ஸ்பெக்ட்ரமுக்கு விலையை நிர்ணயிப்பதில் ராசா பின்பற்றிய வழிமுறையை முதல் நாளில் இருந்தே ப.சிதம்பரம் ஆதரித்தார். ஆனால், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளோ, 2001ம் ஆண்டு விலைக்கு ஸ்பெக்ட்ரமை ஒதுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் நிலைப்பாட்டை ப.சிதம்பரம் ஏற்றிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.
     
    ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி கட்சியின் ஊழல் என்றும், ராசாவே தனியாக எடுத்த முடிவு என்றும் நாடு நம்ப வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். ஆனால், பிரணாப் முகர்ஜியின் கடிதம் மூலம், இந்த ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றார்.
     
    சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல-இந்திய கம்யூனிஸ்ட்:
     
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல. அவரது தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், பிரதமரிடம் ஆலோசனை நடத்தியே அனைத்து முடிவுகளும் எடுத்ததாக ராசா கூறி வருவதால், இதில் பிரதமரும் பதிலளிக்க வேண்டும் என்றார்.
     
    சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டு-காங்கிரஸ் நிராகரிப்பு:
     
    இந் நிலையில் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.
     
    இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், எந்த வகையிலும் சுப்ரமணிய சாமியின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சிதம்பரத்தின் நேர்மையை யாராலும் சந்தேகிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் சாமியால் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. விசாரணை முடிவடைவதற்குக் காத்திருக்காமல் சாமியோ அல்லது வேறு எவருமோ சிதம்பரம் தவறு செய்திருப்பதாக முடிவுக்கு வருவது ஆட்சேபத்துக்குரியது என்றார்.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger