தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிடுவதாக கட்சி பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம் என மதிமுக முதலில் அறிவித்திருந்தது. ஆனால் மதிமுகவை கூட்டணி சேர்க்க பாமக முன்வரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் கூட அது தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை.
இதையடுத்து மதிமுக தனித்துப் போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளார் வைகோ. மேலும் முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னை மாநகர மேயர் பதவிக்கு நா. மனோகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பாஸ்கர சேதுபதியும், கோவையில் அர்ஜூன ராஜும் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி மேயர் பதவிக்கு பாத்திமா பாபு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு பூங்கொடி சாமிநாதனும், திருப்பூர் மேயர் பதவிக்கு நாகராஜும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?