சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர்.
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் சாந்தமயமான நடிகையின் வீட்டில் புயல் வீசுவதாக கூறப்படுகிறது. நடிகைக்கும், பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயமானவருடன் நடிகை அடிக்கடி தொடர்பில் இருப்பது சில நாட்களாக ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. முதலில் இதை நம்ப மறுத்த நடிகையின் கணவர், பின்னர் அவருடைய நடத்தையில் சிறிது சந்தேகம் கொண்டதாக தெரிகிறது.
சென்னை அண்ணா சாலையில் இயங்கும் பிரபல துப்பறியும் நிறுவனத்திடம் நடிகையின் கணவர் இதுகுறித்து ரகசியமாக விசாரிக்க சொன்னாராம். அவர்களும் நடிகைக்கு தெரியாமல் பின் தொடர்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிட்டியுள்ளதாக தெரிகிறது. இந்த கள்ளத்தொடர்பால் வெறுத்துப்போன நடிகையின் கணவர், நடிகையை நேரில் கண்டித்துள்ளார். இவையெல்லாவற்றையும் முதலில் மறுத்த நடிகை, பின்னர் ஒரு கட்டத்தில் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல், ஆமாம், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது உண்மைதான், இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளாராம். இதனால் மனம் வெறுத்த போன நடிகையின் கணவர், நடிகையை விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் கோடம்பாக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?