நரேந்திர மோடி வருகை சென்னையில் கல்லூரி, பூங்காக்களில் ஆன்லைனில் பெயர் பதிவு narendra modi visit chennai college park online name register
Tamil NewsToday, 05:30
சென்னை, செப். 24–
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (வியாழன்) திருச்சி வருகிறார். அங்கு பொன்மலையில் நடை பெறும் பிரமாண்டமான கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக 130–க்கு 40 அடி அகலத்தில் செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடை சுற்றிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
மாநில முழுவதிலும் இருந்து விண்ணப்பம் மற்றும் ஆன்–லைன் மூலம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் பூங்காக்கள், மெரீனா கடற்கரையில் நடை பயிற்சிக்கு வருபவர்களிடம் திருச்சி மாநாட்டுக்கு வரும்படி அழைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். கையில் லேப்–டாப்பும் வைத்து இருக்கிறார்கள். மாநாட்டுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு உடனடியாக பெயர் பதிவு செய்யப்பட்டது.
இதே போல் கல்லூரி வாசல்களிலும் லேப்–டாப்புடன் நின்றபடி மாநாட்டுக்கு வரவிருப்பம் தெரிவித்த மாணவர்களின் பெயர்கள் ஆன்–லைனில் பதிவு செய்யப்பட்டது.
கே.கே.நகர் சிவன் பூங்காவில் இன்று காலையில் தென்சென்னை மாவட்டம் சார்பில் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் காளிதாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி தலைவர் அலங்காரமுத்து, பொது செயலாளர் பிரேம் ஆனந்த், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?