Saturday, 13 July 2013

இன்று மாலை இளவரசன் உடல் அடக்கம்

- 0 comments

தர்மபுரி காதல்–கலப்பு திருமண விவகாரத்தில்
காதலன் இளவரசனின் மரணம்
பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்
தற்கொலை செய்து கொண்டதாக போலீசும்,
சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும்
உறவினர்களும் கூறினார்கள். இதனால்
அவரது உடல் இரண்டு முறை பிரேத
பரிசோதனை செய்யப்பட்டது.
முதலில்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை நிபுணர்களான
டாக்டர்கள் தண்டர் சீப், சதீஷ்குமார்.
ரவிக்குமார் ஆகிய 3 பேர்
அவரது உடலை பரிசோதனை செய்தனர்.
பின்னர் சென்னை தனியார்
கல்லூரி தடயவியல் துறை நிபுணர்கள்
தங்கராஜ், சம்பத்குமார் ஆகிய 2 பேர் இளவரசன்
உடலை ஆய்வு செய்தனர்.
நேற்று டெல்லியில் இருந்து வந்த அகில
இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (எய்ம்ஸ்)
மருத்துவமனையில் பணியாற்றும் தடயவியல்
துறை மருத்துவம் மற்றும் விஷ
முறிவு சிகிச்சை பிரிவு துறையின்
தலைமை பேராசிரியர் டாக்டர் டி.என்.பரத்வாஜ்,
கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் சுதீர்குமார்
குப்தா , டாக்டர் மில்லோ டாபின் ஆகியோர்
நேற்று மாலை இளவரசன் உடலை மறு பிரேத
பரிசோதனை செய்தனர்.
அப்போது இளவரசனின் பெற்றோர் இளங்கோ–
கிருஷ்ணவேணி ,ஊர் கவுண்டர்
சின்னசாமி,விடுதலை சிறுத்தைகள்
கட்சி நிர்வாகி நந்தன் உள்ளிட்ட 5பேர் மட்டும்
உடன் இருந்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் மாலை 5–30
மணிக்கு இளவரசன் உடல்
அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் இளவரசன்
உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர்
இளவரசன் உடல் அரசின் இலவச ஆம்புலன்ஸ்
மூலம் அவர்களது சொந்த ஊரான நத்தம்
காலனிக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு வீட்டு முன்பு சிறிய பந்தல்
அமைக்கப்பட்டு உடல் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டு உள்ளது.சவப்பெட்டி அருகே இளவரசனின்
பெரிய உருவப்படம்
அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
உறவினர்கள், நண்பர்கள் ,நத்தம் காலனி மக்கள்,
இளவரசனுடன் படித்த பள்ளி–
கல்லூரி மாணவ–மாணவிகள் ஆகியோர்
அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மாலை இளவரசனின் உடல் அடக்கம்
நடக்கிறது. இதற்காக நாயக்கன் கொட்டாயில்
இருந்து நத்தம் காலனிக்கு வரும் வழியில்
தொடக்க
வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பின்புறம்
30 சென்ட் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த
இடத்தில்தான் இளவரசன் உடல் அடக்கம்
செய்யப்படுகிறது. இதற்காக
குழி தோண்டப்பட்டு சிமிண்டால்
கல்லறை வடிவில் கட்டப்பட்டு உள்ளது.
இளவரசன் உடல் அடக்கம்
நடைபெறுவதை யொட்டி நத்தம் காலனியில்
எஸ்.பிக்கள் அஸ்ரா கார்க் (தர்மபுரி),
சக்திவேல் ( கிருஷ்ணகிரி) ஆகியோர்
தலைமையில் பலத்த போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த
காலனிக்கு வர வழி உள்ள
இரண்டு பாதையிலும் போலீசார் செக்போஸ்ட்
அமைத்து உள்ளனர். தர்மபுரியில்
இருந்து திருப்பத்தூர் செல்லும் பாதையிலும்
பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

[Continue reading...]

பாகிஸ்தானில் கிறிஸ்த்துவ பெண்கள் நிரவாணமாக

- 0 comments

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்ட
பட்டோகி பகுதியை சேர்ந்தவர் முஸ்லிம்
பணக்காரரார் முகமது முனீர். இவருக்கும்
அப்பகுதியில் உள்ள மாசி என்ற கிறிஸ்தவ
குடும்பத்தை சேர்ந்தவருக்கும் இடையே கடந்த
மாதம் மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டது.
இது தொடர்பாக மாசியின் மகன்கள்
முகமது முனீர் குடும்பத்தினருடன்
வாய்ச்சண்டையில் ஈடுபட்டனர்.
இச்செய்தி முகமது முனீருக்கு தெரியவர
மாசியின் வீட்டுக்கு அடியாட்களுடன்
சென்றுள்ளார். இதைபார்த்த மாசி,
பயந்து வீட்டை
விட்டு வெளியே ஓடிவிட்டார்.
அப்போது அவர்கள், வீட்டிலிருந்த மாசியின்
மகன்கள் 3 பேரின்
மனைவிகளை வெளியே இழுத்துபோட்டு
கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.
பின்னர் அவர்கள் மூன்று பேரையும்
நிர்வாணமாக்கி வீதியில்
இழுத்து சென்றுள்ளனர். குறிப்பிட்ட தூரம்
வீதியில் இழுத்துசென்ற பிறகு, அவர்கள்
மூன்று பேரையும் விடுவித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து போலீசாரிடம் சொன்னால், கடும்
விளைவுகளை சந்திக்க நேரிடும்
என்று அப்போது முனீர் மிரட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஆசிய மனித
உரிமை அமைப்பில்
பேசப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
பின்னர் இது குறித்து லாகூர் உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதுகுறித்து கசூர் மாவட்ட மற்றும்
அமர்வு நீதிமன்றங்கள் இரு வாரங்களுக்குள்
அறிக்கை சமர்பிக்க உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

[Continue reading...]

நிச்சியத்த பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறோரு பெண்ணை மணந்த மலையாள நடிகர்

- 0 comments

மலை யாள சினிமாவில் 1970ல்
முன்னணி நடிகராக இருந்தவர் ஜெயன்.
இவரது அண்ணன் மகன் ஜெயன் என்ற
ஆதித்யன் (36). இவர் மலையாளத்தில், ‘ரிதம்’
உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களிலும்,
ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆதித்யன் மீது கண்ணூர்
கக்காடு பகுதியை சேர்ந்த 21
வயது இளம்பெண், கண்ணூர் குற்றவியல்
முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த
ஆண்டு எனக்கும், ஆதித்யனுக்கும்
குருவாயூரில் நிச்சயதார்த்தம் நடந்தது.
அப்போது, ரூ.4 லட்சம்
வரதட்சணை வாங்கினார்.
பிறகு என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம்
செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம்,
ஆதித்யனை கைது செய்து ஆஜர்படுத்த
கண்ணூர் போலீசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, கொல்லம்
கடப்பாக்கடை பகுதியில் உள்ள
அவரது வீட்டில் ஆதித்யனை போலீசார்
நேற்று கைது செய்தனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger