Friday, 19 August 2011

கவலையற்றிருத்தலே வீடு.

- 0 comments



கவலையற்றிருத்தலேவீடு-பாரதியின் வார்த்தைகளுக்கு  என்னுடையஅத்தனை பதிவுகளும் ஈடாகாது.வரியின் அர்த்தமும் ஆழமும் புரிந்தவர்களுக்கு இதுதெரியும்.கடந்த ஓராண்டில் உடல் நலம்,மன நலம்,பாலியல்,சமூகப் பிரச்சினைகள்,சிலசினிமா,அரசியல்,பேருக்கு இரண்டு கவிதை,நகைச்சுவை,அனுபவங்கள்,செய்தி விமர்சன்ங்கள்என்று பலவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

                                பெரும்பாலானபதிவுகள் தனி மனிதனுக்கோ சமூகத்துக்கோ பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றேநம்புகிறேன்.முதல் பதிவில் குறிப்பிட்ட்து இது: வலைப்பதிவுகள் நல்ல உணர்வுகளைவாசகர்களிடம் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.அந்த நோக்கத்தை நான் நிறைவுசெய்திருப்பேன் என்று நம்புகிறேன்.எனக்கு இது ஒரு டிஜிட்டல் டைரிஅவ்வளவுதான்.கொஞ்சம் சந்தோஷமான பொழுதுபோக்கு.

                                 பல பதிவுகள்முழுமையாக இல்லை.அதே சமயம் அதிகம் உழைத்து எழுதப்பட்டவையும் அல்ல.நடையும்சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.அதிக நேரம் என்னால் ஒதுக்க முடிவதில்லை.சில நேரம்போனில் பேசிக்கொண்டே கீ போர்டை தட்டிக்கொண்டிருப்பேன்.ஓட்டு பற்றியோ,கமெண்ட்பற்றியோ அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.முன்பே சொன்னது போல டிஜிட்டல் டைரிஅவ்வளவுதான்.

                               நீண்ட காலமாகதெரிந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார்.ஆண்மைக்குறைவும் நரம்புத்தளர்ச்சியும் என்றபதிவிற்காக சந்தேகம் கேட்கப்போனபோது "இதெல்லாம் எதற்கு என்றார்".நான் பதிவைப்பற்றி தெரிவித்தேன்.அதற்குப்பிறகுஎதேச்சையாக பார்க்கும்போது ''இதைப்பற்றி எழுதுங்கள்'' என்று ஒருவிஷயத்தை சொல்வார்.அவர் சொல்வது ஒருவரிதான்.பிறகு நான் யோசித்து பதிவைஒப்பேற்றவேண்டும்.உடல்நலம் குறித்த பல பதிவுகள் அப்படி வந்த்துதான்.இது வரை அவ்ர்படித்துவிட்டு தவறு இருப்பதாக சொன்னதில்லை.

                                2008 ல் பதிவுசெய்து விட்டாலும் பதிவிட துவங்கியது.2010 ஆகஸ்ட்டில் இருந்துதான்.வாரத்திற்கு ஒருபதிவு என்பது திட்டம்.அப்புறம் போகப்போக தினம் ஒன்று என்ற நிலைக்குவந்துவிட்ட்து.ஒவ்வொன்றையும் நானாக கற்றுக்கொண்டேன்.பதிவுலகில் யாரையும்தெரியாது.முதல் பதிவுக்கு 15 நாள் கழித்துத்தான் இண்ட்லியிலும்,தமிழ்மணத்திலும்விண்ணப்பித்தேன்.தமிழ் 10 மட்டும் ஆரம்பத்தில் எதேச்சையாக தெரிந்திருந்த்து.ஓட்டுப்பட்டைஇணைக்க மேலும் சில வாரங்கள் ஆனது.

                              சிலமாதங்களுக்குப்பிறகு சொந்தமாக லேப்டாப் வாங்கினேன்.ஆனால் அதிக பட்சம் ஒரு மணிநேரம்அல்லது மேலும் சில நிமிடங்கள் மட்டுமே ஒதுக்க முடிகிறது.மொய் போலத்தான்ஆகிவிட்ட்து.எனக்கு ஓட்டு,கமெண்ட் போடுகிறவர்களுக்கு தவறாமல் நானும் ஆஜராகிவிடுவதுஎன்னுடைய வழக்கம்.முடியாமல் போயிருந்தால் என்னையும் மீறி நடந்த தவறாக இருக்கும்.சிலபதிவர்களின் பதிவுகளை மட்டும் நேரம் கிடைக்கும்போது மொத்தமாக படிப்பது வழக்கம்.

                              பலசந்தோஷங்களுக்கு இடையில் ஒரு மனக்குறை இருந்து கொண்டிருக்கிறது.தீவிர வாசிப்பில்ஆர்வம் கொண்டவன் நான்.அது இப்போது குறைந்து போய்விட்ட்து.ஒரு வருட்த்தில் 240பதிவுகள்.இதில் காபி பேஸ்ட் எதுவும் இல்லை.பாரதி கட்டுரைகளிருந்து ஒரு பதிவுமட்டும் அவரது பிறந்த நாளுக்காக எடுத்திருக்கிறேன்.பிளாக்கர் buzz  ல் கூட நீங்கள் CURATOR  OR CREATOR?  என்று கேட்டிருந்தார்கள்.பிளாக்கில் பெத்தபெயர் வாங்கி எனக்கு ஆகப்போவது எதுவுமில்லை.

                               இரண்டு லட்சத்து இருபதாயிரத்தை கடந்தpageviews   என்னுடைய டாஷ்போர்டுகாட்டுகிறது.நான் தொடர்ந்து இயங்கி வந்த்தற்கு வாசகர்கள்,திரட்டிகள் வழங்கிய ஆதரவேகாரணம்.இண்ட்லியில் 80 பதிவுகள் வரை ஒரு பதிவுக்கூட பிரபலமாகவில்லை.இப்போதுஇண்ட்லி பயனர்கள் எனக்கு கிடைத்த வரம்.இத்தனைக்கும் அதிகம் ஈர்க்கும்அரசியல்,சினிமா பதிவுகள் மிகமிக்க் குறைவு.பத்திரிகைகளில் தினமணிஆரம்பத்திலிருந்தே என்னை தட்டிக்கொடுத்து வளர்த்து வந்திருக்கிறது.விகடன் குட்பிளாக்ஸில் ஒரு பதிவு வந்த்து.ஒரு மாதம் தினம் நான்கு பேராவது வந்தார்கள்.

                                 என்னைஎப்போதும் ஆதரித்து வரும் அன்பு உள்ளம் கொண்ட சக பதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும்,இண்ட்லி,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டிஉள்ளிட்ட திரட்டிகளுக்கும்,தினமணி,விகடன் பத்திரிகைகளுக்கும் என்னுடைய நெஞ்சம்கனிந்த நன்றி.



http://tamil-paarvai.blogspot.com




  • http://tamil-paarvai.blogspot.com


  • [Continue reading...]

    ஜோக் படித்தால் ச���ரிப்பு வருகிறதா? இல்லையா?

    - 0 comments


      நகைச்சுவை  ஒன்றை படித்தால் சிரிப்பு வரத்தானே வேண்டும்.ஆமாம் ,அது மனிதனுக்கு கிடைத்த முக்கியமான விஷயம்.அது சுமாராக இருந்தால் கூட! அவ்வளவாக ரசிக்க முடியாமல் போனால் யோசிக்க வேண்டும்.கீழே உள்ளதையும் படியுங்கள்.

      ஆசிரியர்: ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை?

      மாணவி:கரண்ட் இல்ல !

      ஆசிரியர்:மெழுகுவர்த்தி வைத்து எழுத வேண்டியதுதானே?

       மாணவி:தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்தது! எடுக்க முடியல!

       ஆசிரியர் :ஏன்?

      மாணவி: குளிக்கல! அதனால சாமி ரூமுக்குள்ள போக முடியல!

      ஆசிரியர் :ஏன் குளிக்கவில்லை?

      மாணவி: லூசா நீங்க? அதான் கரண்ட் இல்லேன்னு மொதல்லயே சொன்னனே!?


                                                              இப்படி சாதரணமாக இருந்தாலே ஓஹோவென ரசிப்பவர்கள் உண்டு.வெடி ஜோக் சொன்னாலும் சிரிப்பு வரவில்லையா? நீங்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.சிலர் ஏதேனும் கவலையாக இருந்தாலும் உற்சாகமில்லாமல் இருப்பார்கள்.மனச்சோர்வு என்பது சாதாரண கவலையிலிருந்து அதன் கால அளவுகளில் வேறுபடுகிறது.பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்.

                                                               மனதில் ஏற்படும் சோர்வு என்பது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடியது.உறவுகளை பேணுவதில்,சிந்திப்பதில் செயல்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.தூங்குவதிலும் பாதிப்பு இருக்கும்.காலம் காயங்களை ஆற்றும் என்பார்கள்.நமக்கு ஏற்படும் எந்த துயரமும் காலம் செல்ல செல்ல குறைந்து விடும்.சிலரால் மீண்டு வரமுடியாமல் போய்விடுகிறது.


                                                              இன்றைய நவீன வாழ்க்கையில் எதைஎதையோ யோசித்து குழப்பிக்கொள்கிறோம்.அழுத்தங்கள் அதிகமாகிவிட்டது.பரம்பரை முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் சூழ்நிலைகள்,மருத்துவ காரணங்கள்,வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன.நாம் சிந்திக்கும் முறையும் மன அழுத்தத்தை உருவாக்கும் காரணியாக இருக்கிறது.

                                                              அதிகம் சம்பாதிக்கும் இளைய தலைமுறை பாதிக்கப்படுவது கூடி வருகிறது .இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாண்டிச்சேரியில் சுற்றித்திரிந்தது பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்.


                                                                  கௌரவம்,மதிப்பு ,நல்ல வருமானம் இத்தனை இருந்தும் ஏன் பாதிக்கப்படவேண்டும்? மனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்.சுற்றி உள்ள நண்பர்கள்,உறவினர்கள் யாராவது ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் ,அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்திருக்கவும் முடியும்.

                                                                   மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.மனச்சோர்வும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.உடலையும் மனதையும் பலவீனப்படுத்துவது மன அழுத்தம்.


                                                                    எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது,சுகாதாரத்தில் கூட அக்கறை காட்டாமல் இருப்பது,மிதமிஞ்சிய மதுப்பழக்கம்,சரியாக சாப்பிடாமல் இருப்பது,அல்லது அதிகம் உண்பது,தூக்கமின்மை கோளாறுகள் இருந்தால்,கவனிப்பவர்கள் உதவுவது அவசியம்.

                                                                     மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.மன அழுத்தம் மிதமாக இருந்தால் ஆலோசனைகள் மூலமாகவே தீர்வு காண முடியும்.அதிகமாக இருந்தால் மருத்துவ உதவி தேவைப்படும்.கிண்டல் ,கேலி செய்யாமல் அணுக வேண்டும் என்பது முக்கியம்.டிப்ரஷன் ,மன அழுத்தம் ,மனச்சோர்வு எல்லாம் ஒரே பொருள்தான்.


    http://tamil-paarvai.blogspot.com




  • http://tamil-paarvai.blogspot.com


  • [Continue reading...]

    உங்கள் விதியை மா���்ற 10 வழிகள்!

    - 0 comments


    உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும் என்று சொல்வார் ஷீர்டி சாய்பாபா.
    அது எப்படி?
    விடையையும் பாபாவே சொல்லியிருக்கிறார்.
    1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
    2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை முழுமையாக நம்புங்கள். தீபம், ஊதுபத்தி, மெழுகுவத்தி, சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள்.
    3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லுங்கள்.
    4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள். முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள்.
    5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.
    6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.
    7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உங்களாலான உதவியைச் செய்யுங்கள்.
    8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும் இருந்தால் போதும், குறைந்த தேவைகளோடு எளிமையாக இருங்கள்.
    9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல் செயல்படுத்துங்கள்.
    10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால் கண்காணிக்கப்படுகிறது என்பதையும், அவரது ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
    ஆமாம். பாபா சொன்ன இந்தப் பத்து விதிகளையும் யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராது. விதியையே மாற்றியமைக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்று சொல்லி ஆசி வழங்குகிறார் பாபா.
    என்ன, பாபாவுடன் அவரது விதிகளையும் பின் பற்றுவோமா?
    மராட்டியில் புலமை பெற்ற அறிஞர் தாஸ்கணு. ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார். பாபாவின் சிறந்த பக்தரான தாஸ்கணு, ஈசோபனிஷத்துக்கு மராட்டிய மொழியில் உரை எழுத ஆரம்பித்த நேரம் அது.
    உபநிஷதங்கள், ஆழ்ந்த பொருள் தரும் மந்திர நூல்கள். வேதங்கள், மந்திரங்கள், சடங்குகள் ஆகியன பற்றி முழுமையாகச் சொல்லும் அவற்றிற்கு உரை எழுதுவது அத்தனை சுலபமல்ல. அதிகமான புலமையும், கடினமான பயிற்சியும் இருந்தால் தான் அவற்றைப் புரிந்து கொள்ளவே முடியும். அதுவும் ஈசோ உபநிஷதம் என்பது, உபநிடதங்களின் தாய் போன்றது. அதாவது மற்ற உபநிஷதங்களில் எல்லாம் ஈசோ உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள விஜயங்களின் விளக்கம்தான் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
    தீமை செய்யத் தூண்டும் மயக்கங்களுக்கும், கவலைகளுக்கும் இடையில் கலக்கமடையாத கர்ம யோகம் என்னும் போதனைத் தொகுப்புக்கு முன்னோடிதான் ஈசோ உபநிஷதம்.
    அத்தனை சிறப்பு வாய்ந்த ஈசோ உபநிஷதத்தினை அறிஞர் தாம்கணு, மராத்திய யாப்பு வகையில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உரை அவருக்கு திருப்தியாக வரவில்லை. எத்தனை முறை எழுதிப் பார்த்தும் சரியாக வரவில்லை.
    சில அறிஞர்களிடம் கலந்து பேசினார். அவர்களது அபிப்பிராயங்களைக் கேட்டு, மாறுதல் செய்தும் பார்த்தார். ம்ஹூம். அதுவும் நன்றாக வரவில்லை.
    என்ன செய்வது? எப்படி செய்வது?
    யோசித்தார் தாஸ்கணு.
    ஈசோ உபநிஷதம் என்பது வேதங்களின் சாராம்சம். பிறப்பு, இறப்பு என்னும் கட்டுகளை அறுத்தெறியக்கூடிய ஆயுதம். எனவே அதை, தன்னைப் போன்ற ஒரு வெறும் புலவரால் மட்டும் மொழி பெயர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.
    வேறு எப்படி?
    பற்றுதல் எதுவும் இல்லாத ஒரு மகா ஞானி மனது வைத்தால் மட்டுமே தன்னால் உரை எழுத முடியும் என்று புரிந்தது அவருக்கு.
    அப்படிப்பட்டவர் ஒரே ஒருவர்தானே இருக்கிறார்? நம் சாயி பாபா தானே அவர்.
    அடுத்த ரயிலிலேயே ஷீர்டிக்குக் கிளம்பினார் தாஸ்கணு.
    பாபாவின் பாதங்களில் விழுந்தார். "நான் அறிஞன்தான். நிறைய படித்தவன்தான். ஆனால் என்னால் உரை எழுத முடியவில்லை. அந்த ஈசோ உபநிஷதத்தின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளக் கூட என்னால் இயலவில்லை. அதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. ஐயங்களை எல்லாம் போக்கி எனக்க சரியான தீர்வை தாங்கள்தான் தர வேண்டும்' என்று வேண்டினார்.
    அதற்கு பாபா என்ன சொன்னார் தெரியுமா?
    பாபா புன்னகைத்தார். "அந்த சந்தேகங்களைச் சொல்ல நான் எதற்கு? நீ உன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் வழியில் மும்பையின் புறநகர்ப் பகுதியில் ஒரு பக்தர் வீட்டு வேலைக்காரச் சிறுமியே உன் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்' என்று பதில் சொன்னார் பாபா.
    கூடியிருந்தவர்கள் மெல்லச் சிரித்தார்கள். "பாபா வேடிக்கை செய்கிறாரா என்ன? எல்லாம் படித்த தனக்கே ஈசோ உபநிஷத் புரியவில்லை என்று தாஸ்கணு சொல்லும்போது, படிப்பறிவில்லாத யாரோ வேலைக்காரி பதில் சொல்வாள் என்கிறாரே?' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
    ஆனால் பக்தர் தாஸ்கணு அப்படி நினைக்கவே இல்லை. பாபா என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும். பாபாவின் சொல், ஆண்டவன் கட்டளை என்று முழுமையாக நம்பிய அவர் ஷீர்டியை விட்டு கிளம்பினார்.
    வீட்டுக்குச் செல்லும் முன்பு, மும்பையின் கடைப் பகுதியான விலேபார்லேயில் உள்ள நண்பர் சாஹேத் தீட்சித்தைக் காணச் சென்றார். அன்றைக்கு அவர் வீட்டிலேயே தங்கினார்.
    பொழுது விடிந்தது. எழுந்து குளித்து முடித்து விட்டு, கண் மூடி பாபாவை நினைத்துப் பிரார்த்தனை செய்து முடித்தார்.
    அப்போதுதான் அந்த வீட்டில் வேலைக்காரச் சிறுமி வாசலில் அமர்ந்து பாத்திரங்களைக் கழுவியபடி இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது அவர் காதில் விழுந்தது.
    உற்று கவனித்தார்.
    "சிவப்பு கலர் பாவாடை எத்தனை அழகு!
    அதன் பார்டர் கூட எத்தனை அருமை!
    எம்ப்ராய்டரி கூட எத்தனை அற்புதம்!'
    இப்படித்தான் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள் அந்த வேலைக்காரச் சிறுமி. பாவாடை பற்றிப் பாடிய அவள் அணிந்திருந்த பாவாடையோ கிழிந்து போய் அழுக்கடைந்து காணப்பட்டது. அவளது முகமோ ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் இருந்தது.
    நெகிழ்ந்து போய்விட்டார் தாஸ்கணு. உடனே அவளுக்கு ஒரு புத்தாடை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ந்து போய்விட்டாள் அந்தச் சிறுமி. உடனே அதை அணிந்து கொண்டாள் சுற்றிச் சுற்றி ஓடினாள். நடனமாடினாள். உற்சாகம் பொங்கி வழிந்தது அவளுக்குள்.
    ஆனால் மறுநாள், வழக்கம் போல் பழைய கிழிந்த உடையிலேயே வலம் வந்தாள். அவள் வேலைக்காரச் சிறுமி. அப்படித்தான் இருக்க வேண்டிய நிலை.
    ஆனால் இதுநாள் வரை அவள் முகத்தில் இருந்த ஒரு சோகம் இப்போது காணவில்லை. அவளுக்குச் சொந்தமாக ஒரு புத்தாடை இருப்பதால், அவள் அன்று முதல் மகிழ்வுடனேயே காணப்பட்டாள்.
    அதைக் கண்ட தாஸ்கணு துள்ளிக் குதித்தார். இதுநாள்வரை அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஈசோ உபநிஷதப் பாடலுக்கு அவருக்கு விளக்கம் கிடைத்துவிட்டது.
    ஆமாம். நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நம் மனத்தில் பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுளால் நமக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாமே கடவுளின் பரிசு தான் என்று நினைப்பவனுக்குக் கவலை என்பதே தோன்றாது.
    இதுதான் ஈசோ உபநிஷத்தின் அடிப்படைத் தத்துவம். இதுநாள் வரை அறிஞர் தாஸ்கணுவைக் குழப்பி ஆட்டம் காட்டிய விளக்கம் ஓர் ஏழைச் சிறுமியைக் கண்டதால் சுலபமாகத் தீர்ந்தது.
    எல்லாம் பாபாவின் அருள். பாபாவின் கருணை. பாபாவின் ஆசி.
    சரி, இந்த விளக்கத்தை பாபாவே நேரடியாகச் சொல்லியிருக்கலாமே, எதற்காக ஓர் ஏழைச் சிறுமியின் மூலம் இதைச் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.
    அந்த அபலைச் சிறுமிக்கு ஒரு புத்தாடை தர வேண்டும் என்று கடவுள் நினைத்திருக்கிறார். அதை இப்படி நிறைவேற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.
    தாஸ்கணு, பாபாவை நம்பினார். கொஞ்சம் கூடச் சந்தேகம் கொள்ளவில்லை. எங்கோ பம்பாய் அருகே ஒரு வேலைக்காரச் சிறுமி மூலம் விடை கிடைக்குமா என்றெல்லாம் அவர் சந்தேகப்படவேயில்லை.
    அவர் நினைத்தது நடந்தது.




    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    அம்மை நோய் வராமல��� தடுப்பது எப்பட��?

    - 0 comments



    வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.

    வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

    இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

    அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும்.

    பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.

    உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும்.

    மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

    சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

    கரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    சின்னம்மை எளிதில் பரவும்  என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை. 

    வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

    குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது.

    அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.

    பாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.

    மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.

    அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம்.

    இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம்.

    தடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
    thanks: tamilcnn


    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    எச் ஐ வி தொற்றைக் குறைக்க விருத்த���ேஷனம்

    - 0 comments



    உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
    இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
    இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.
    இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
    ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது.


    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    வாழைக்காய் பொடி��ாஸ்

    - 0 comments


    தேவையான பொருள்கள்:

    வாழைக்காய் - 1

    மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
    உப்பு ,எண்ணெய் மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    கரன்ட் தயாரிக்க��ம் சோலார் கொடிகள்

    - 0 comments


    உலகம் முழுவதும் பற்றாக்குறையாக இருப்பது மின்சாரம். தேவை அதிகரித்து வருவதால் மின்உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. மின்சாரத்துக்கு மாற்றாக சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையும் மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    26 லட்சம் லாரிகள் ���டவில்லை : சரக்கு���் போக்குவரத்து ��ுற்றிலும் நிறுத���தம்

    - 0 comments


    26 லட்சம் லாரிகள் ஓடவில்லை  சரக்குப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக 26 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    தென் மாநிலங்களில், நேற்று நள்ளிரவு முதல், லாரி ந�றுத்தப் போராட்டம் நடக்கிறது. மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    விளம்பரத்துக்காக எங்களை பலியாக்���ிவிட்டனர்: பிரஜ��ன்- சான்ட்ரா

    - 0 comments


    "சுற்றுலா" படத்தின் விளம்பரத்துக்காக எங்களைப் பலியாக்கிவிட்டனர் அதன் தயாரிப்பாளரும் இயக்குநரும் என சின்னத்திரை நடிகர் பிரஜின் - சான்ட்ரா ஜோடி குற்றம் சாட்டியுள்ளனர்.

    குன்னூரில் படப்பிடிப்பிலிருந்தபோது பிரஜினும் சான்ட்ராவும் மாயமாகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் கடந்த மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    மழை காரணமாக ஆட்ட���் கைவிடப்பட்டது

    - 0 comments


    மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதுஇந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று துவங்கிய 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மழை காரணமாக கைவிடப்பட்டது.

    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    நான்கு வழித்தடத��தில் மோனோ ரயில் ��ிட்டம்

    - 0 comments


    நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம்சென்னையில் நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, குறைந்த செலவில், விரைந்து செயல்படுத்தும் வகையில், மோனோ ரயில் திட்டம் மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    தங்கம் விலை வரலா���ு காணாத உயர்வு

    - 0 comments


    தங்கம் விலை வரலாறு காணாத உயர்வுவரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று 20 ஆயிரம் ரூபாயை கடந்து, பவுனுக்கு 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனையானது.

    பங்குச்சந்தை சரிவு, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே தங்கம் விலை உயர்வுக்கு மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    சன் டி.வி. கலாநித��மாறன் மீது பட அத��பர் புகார்

    - 0 comments


    சன் டி.வி. கலாநிதிமாறன் மீது பட அதிபர் புகார்`எம்பயர் மூவிஸ்' என்ற பட நிறுவனத்தின் அதிபர் அந்தோணி நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அந்த புகாரில், அதான்டா, இதான்டா என்ற பெயரில் ஒரு படம் தயாரித்ததாகவும், மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    மிளகு ரசம்

    - 0 comments




    தேவையான பொருள்கள்:


    மிளகு - 2 ஸ்பூன்
    புளி - மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    வெந்தயக்கீரை சா��்பார்

    - 0 comments


    வெந்தயக்கீரை சாம்பார்தேவையான பொருள்கள்:

    துவரம் பருப்பு - 150 கிராம்
    வெந்தயக்கீரை - 1 கட்டு மேலும்படிக்க

    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger