துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறாராம். நண்பன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. படத்தில் விஜய் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது இத்தனை நாட்களாக ரகசியமாக இருந்து வந்தது. இந்நிலையில் படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தில் விஜய் எதிரிகளை போட்டு தள்ளும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம்.
இதுநாள் வரை கமர்ஷியல் கேரக்டரில் நடித்து வந்த விஜய், நண்பன் படத்திலிருந்து தன்னுடைய ஸ்டைலை மாற்றி இருக்கிறார். அந்த மாற்றம் இப்போது துப்பாக்கியிலும் தொடர்கிறது. மேலும் விஜய் இதுபோன்ற ஒரு கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?