காத்துநின்ற பள்ளி மாணவியை புதருக்குள் வைத்து இரு வாலிபர்கள் கற்பழிப்பு
ஆந்திர மாநிலம் ஆதிலா பாத் மாவட்டம் வெல்லம் பள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால் கரீம் நகர் பெத்த பள்ளியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கீதா ஏறினார்.
ரெயில் புறப்பட்ட பிறகுதான் அந்த ரெயில் தனது அக்காள் ஊருக்கு செல்லாது என அவருக்கு தெரிய வந்தது. இதனால் கீதா ராமகுண்டா ரெயில் நிலையத்தில் இறங்கி மாற்று ரெயிலுக்காக காத்து நின்றார். அப்போது ஒரு வாலிபர் அவளிடம் பேச்சு கொடுத்தார். நானும் பெத்த பள்ளிக்குதான் செல்கிறேன். ரெயில் வர 3 மணி நேரம் ஆகும். அதுவரை இங்கு இருப்பதற்கு பதில் அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து இருப்போம் என்று அழைத்தார்.
கீதாவும் அந்த வாலிபருடன் சென்றார். பூங்காவுக்கு செல்லும் வழியில் அந்த வாலிபர் செல்போனில் தனது நண்பருடன் பேசி அவரை அழைத்தார். 2 இளைஞர்களும் பூங்காவில் கீதாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் திடீர் என்று 2 பேரும் மாணவி கீதாவை அருகில் உள்ள புதருக்கு அழைத்து சென்று கற்பழித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கீதா கூச்சல் போட்டாள். அவளது சத்தம் கேட்டு ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் அங்கு வந்தார்.
அவரை பார்த்ததும் 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். கற்பழிக்கப்பட்ட கீதா கோதாவரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கைதான 2 வாலிபர்கள் சமீர், ராஜூ என்பது தெரிய வந்தது. 2 பேரும கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.