Friday, 23 December 2011

Nonsense Talking 1

- 0 comments


நீங்கள் இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறையினரா?

இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் என்ன செய்யலாம்?

  • அப்துல் கலாம் சொன்னது போல் கனவு கண்டு புதிதாக ஏதாவது கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம்.
  • ஏழை, அநாதை மக்களுக்கு உதவி செய்து அவர்கள் வாழ்வை வளம்பெற செய்யலாம்.
  • ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்க்காக உயிரை கொடுக்காலாம்.  




    இப்படி எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு யோசித்து காமெடி பண்ணாதிர்கள்.

    உங்களால் மிக எளிதாய் செய்ய முடிகிற, நாட்டிற்கு பயன்படக் கூடிய காரியம் என்னவென்றால், நீங்கள் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளாமல் இருப்பதே!

    எதுவும் தெரியாத, சரியாக பேசி கூட பழகாத குழந்தையிடம் போய்
    "உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?" என்று கேட்பார்கள்.

    பாவம் அந்த குழந்தை.

    எந்த ஒரு குழந்தையும் தனக்கு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ வேண்டுமென்று கேட்பதில்லை. அதற்கு தேவை விளையாட தேவையான பொம்மைகள் மட்டுமே.

    Pollution, Corruption போன்ற நாட்டை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மக்கள் தொகை மட்டுமே மூலக் காரணம். அதை கட்டுபடுத்தாமல் "Save Plastic Bags", "Save Water" "Save Petrol" "Save Paper Save Tree" என்பது போன்ற வெட்டி campaign கள் உண்மையில் உருப்படியானது அல்ல.

    ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல ஆயிரம் பேர் சேர்ந்து சேமிக்கும் பிளாஸ்டிக், தண்ணீர், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துகிறான்.
     

    பிச்சைக்காரர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு குறைவாக பிச்சை போட கூச்சப்படும் நாம், ஒரு ரூபாய் போட்டு பிளாஸ்டிக் பையை கூச்சப் படாமல் வாங்குவோம். இருக்கும் மரங்களை வெட்டி ஐ.டி. பார்க் போன்ற பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு ஆபிசில் Go Green Day நிகழ்ச்சி நடத்துவோம்.

    ஜனத்தொகையை கட்டுபடுத்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் கட்டுகடாங்கா எண்ணிக்கையில் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு நல்லது. அரசின் "நாமிருவர் நமக்கொருவர்" எனும் விழிப்புணர்வு பலகைகளை கூட எங்கேயும் பார்க்க முடிவதில்லை.

    சிலர் ஆண் குழந்தைகளுக்காக முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன மன்னர் குடும்பமா? உங்கள் வம்சம் தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கு.

    மனிதர்கள் Waste bags போன்றவர்கள். அவர்களால் எதுவும் இந்த உலகிற்கு பிரயோஜனம் இல்லை. மனித விலங்கு மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது  நிகழ்வது எப்போதும் நன்மையே. இந்த 2012 மாயன் காலண்டர் படி உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும். 

    Don't Save Plastic bags. Save Waste bags.

    -------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*

    நான் ஏன் ப்ளாக் எழுதி கொண்டிருக்கிறேன்? எழுதுவது சிலசமயம் அசிங்கமாய் தோன்றுகிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் எல்லோரும் வெளிநாடு சென்று அதிகம் பணம் சம்பாதிக்கும் போது நான் வெட்டியாய் இங்கே பொழுதை கழிக்கிறேன்.

    எனக்கு இலக்கியம், இலக்கியவாதிகள், இலக்கிய கூட்டங்கள் என்றாலே மிக அலர்ஜி. அதிகம் எழுதி எழுதி நானும் எழுத்தாளர் ஆகி விடுவேனோ என்று பயம்.

    எழுத்தாளர்களின் வாழ்க்கை அவ்வளவு நார்மல் ஆக இருக்காது. ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு தனி வட்டத்தில் வாழ்வார்கள். கிட்டதட்ட நம்முடைய பிளாகர்களை போலத்தான். எனக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் தெரியும். யாரையும் அதிகம் படித்ததில்லை. படிப்பதிலும் விருப்பம் இல்லை. எழுத்தாளன் ஆக வேண்டும் என்றால் அதிகம் படிக்க வேண்டும் அல்லது அதிகம் ஊர் சுற்ற வேண்டும்.

    எவன் ஒருவன் தன்னுடைய எழுத்துக்கு புகழ் தேடாதவனாக, தன் எழுத்தின் மேல் கர்வம்/விருப்பம் கொள்ளாதவனாக இருக்கிறானோ அவனுக்கு தான் நன்றாய் எழுத வரும் என்று எங்கேயோ படித்தது. நம்மால் அதுபோல இருப்பது கஷ்டம்.

    இணையத்தில் நன்றாய் எழுதுபவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாய் இருக்கிறது. அதிகம் அறியப்படாமல் அருமையாய் எழுதிகொண்டிருக்கும் பிளாகர்களை எனக்கு யாராவது அறிமுகம் செய்யுங்கள் ப்ளீஸ்.

    நான் தமிழ் Aggregator சைட்டுகளில் இனி எனது பதிவுகளை இணைக்கப் போவதில்லை. சினிமா பதிவுகள் விதிவிலக்கு ஆகலாம். தனியாய் எழுதும் போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சுதந்திரமாய் எழுதலாம். என் எழுத்து இனி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருந்தால் படியுங்கள். நான் பிரபலமாக விரும்பவில்லை. இப்படி எழுதுவதால் நான் உருப்படி இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
     
    -------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------* 

    நீங்கள் புத்திசாலிதனமாய் யோசிப்பவர் என்று உலகுக்கு காட்ட வேண்டுமா?

    சிறந்த ஒரு வழி.

    ஊழலுக்கு எதிராய் போராடும் அன்னாஹசாரேவைப் பற்றியோ அல்லது  கூடங்குளம் பிரச்சினையில் தன் நீண்ட மூக்கை நுழைத்த அப்துல்கலாமை பற்றியோ அவர்கள் சாகும் வரை திட்டி எழுதிக் கொண்டே இருங்கள். ஆனால் இருவருக்கும் அதிகம் வயசாகி விட்டது. அதனால் சீக்கிரம் உங்கள் பிரதிக்கு(பதிவுக்கு) முந்துங்கள்.

    மாதிரி தலைப்புக்கள்.

    முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரே!
    படித்த முட்டாள் அப்துல்கலாம்!

    ஆனா பாருங்கள் இந்த ரெண்டு பேருமே, குழந்தை குட்டின்னு ஏதும் வைத்துக் கொள்ளாமல், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி தங்களை இந்த உலகை காக்க வந்த கடவுள்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். என்ன ஒரு அந்நியாயம்?

    பிகர் பின்னாடி சுற்றி, சைட் அடித்து, (கல்யாணம் பண்ணி) ஜாலியாய் மேட்டர் செய்து, குடும்பமாய் வாழும் நம்மை அவர்கள் இருவரும் அவ்வளவு எளிதாய் ஏமாற்ற முடியுமா என்ன? Bloody Bachelors.

    குற்றம் சொல்வதற்கென்றே சிலர் வாழ்கிறார்கள். நக்கீரர்களாம். பிடரி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்கள்.




    http://girls-tamil-actress.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    மௌன குரு - நமீதா வ���மர்சனம்.

    - 0 comments


    தொடர்ந்து மொக்கை படங்களை பார்த்து அவ்வப்போது என் கண்ணிலும் காதிலும் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நாளில் இறந்து விடுவேன் என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் இந்த படம் வந்து என் உயிரை காப்பாற்றி இருக்கிறது. "வாகை சூட வா" படத்திற்கு பிறகு ஒரு நல்ல படம். இந்த படத்திற்கு நிறைய பேர் விமர்சனம் எழுதாமல் இருந்ததில் இருந்தே இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று யூகித்தது மிக சரியாக இருந்தது.



    படம் பார்க்க பார்க்க எனக்கு அடக்க முடியாத சந்தோசம். ஒரு தமிழ் படம் இந்த அளவுக்கு திரைக்கதை செதுக்கப் பட்டு, அருமையான எடிட்டிங்கில், நீட்டான வசனத்தோடு இருப்பதை என்னால் சிறிது நேரம் நம்பவே முடியவில்லை.

    இயக்குனர் இதை வேறு எங்கும் இருந்து உருவியில்லாமல் இருந்தால் அவரை இனி நாம் அதிகமாகவே நம்பலாம்.

    நம்ம ஊர் போலீஸ்காரர்களின் டவுசர்களை அழகாய் கழட்டி அம்மணமாய் ஓட வைக்கிறார்கள். தள்ளு வண்டிகாரர்களிடம் காசு பிடுங்கும் எந்த ஒரு போலீஸ்காரனும் குடும்பத்துடன் இந்த படத்திற்கு போனால் அவமானப்பட்டு (சீட்டை விட்டு எழுத்து) நிற்க வேண்டும். போலீசை கவுரவப் படுத்துகிறேன் பேர்வழி என்று உண்மைக்கு புறம்பாக, "சாமி", "சிங்கம்" என்று எடுத்து ஊரை ஏமாற்றும் இயக்குனர்கள் தங்கள் உதவியக்குனர்கள் குழுவோடு சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

    படம் என்பது படமாக மட்டுமே இருக்க வேண்டும். படத்தில் படம் பார்க்கும் மக்களுக்கு சீரியஸாக பேசி அட்வைஸ் பண்ணுவது போல வசனங்கள் வைப்பது போல் இருந்தால் அது ஸ்டேஜ் டிராமா போலாகிவிடும். இதை மந்திரப்புன்னகை கருபழனியப்பனும், போராளி சசிகுமாரும் அறிந்து கொள்ள வேண்டும். நல்லவேளை இவர்கள் படத்தில் அந்த அட்வைஸ் செய்யும் கேரக்டர்கள் கேமராவை நேராய் பார்த்து பேசவில்லை. எவனும் படம் பார்த்து திருந்த வருவதில்லை. எந்த ஒரு விசயத்தையும் ஒரு கேரக்டர் மூலம் அதனை அசிங்கப் படுத்தி காட்டுவதன் மூலமே மண்டையில் நங்கென்று உரைக்கச் செய்ய முடியும். உதாரணமாக இந்த படத்தில் பரோட்டா கடைக்காரனிடம் எவ்வளவு காசு மாமுல் வாங்குவது என்று அந்த போலிஸ்காரனை பற்றி அந்த பைத்தியக்காரன் பேசும் வசனம்.

    இந்த நாயகன் கேரக்டருக்கு என்னால் வேறு எந்த முன்னணி நாயகனையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராஜபாட்டை ட்ரைலரில் வரும் விக்ரமை போல முஷ்டியை முறுக்கி நீண்ட தலைமுடி கொண்ட கறுப்பு நிற தடி வில்லனை அடித்து, ஆகாயம் வரை பறக்க வைத்து அவனுக்கு சிட்டி view காண்பிப்பது, துப்பாக்கி லைசன்ஸ் பொதுமக்களுக்கு கொடுக்கப் படாத இந்த நாட்டில், துப்பாக்கியை விரலால் சுழட்டி சுழட்டி அனாயசமாக வில்லன்களை குறி தவறாமல் சுட்டு சுடுகாட்டுக்கு அனுப்புவது போன்ற எந்த அக்மார்க் தமிழ் ஹீரோயிசத்தனமும் இல்லாமல், உண்மையான ஹீரோசியம் காட்ட வைக்கிறார் இயக்குனர்.

    இவர் எப்போதும் இயக்குனர்களின் நாயகனாக இருக்கும் வரை இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தனி ஹீரோயிசம் பண்ண ஆசைப்பட்டால், அவர் தாத்தாவுக்கு ஆனது போல ஜாதகத்தில் கெட்ட காலம் ஆரம்பித்து விடும்.

    நாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்குமான காட்சி அமைப்புகள் மற்றும் வசனங்கள் அருமை. மகனின் பிள்ளைக்கு பீத்துணி கழுவ தான் உன்னை கூப்பிடுகிறான் என்று பேசும் வசனங்கள் வெளியூரில் இருந்து கொண்டு (பாசமாய்) அம்மாவை அழைக்கும் எல்லா மகன்களுக்கும் சுடும். அண்ணனின் சிடு சிடு மனைவியின் கேரக்டர் தமிழ் சீரியலை சிறிது ஞாபகப் படுத்தினாலும் திரைக் கதைக்கு நிறையவே பலம்.



    நாயகி "இனியா". இவருக்காகத்தான் இந்த படத்திற்கே போனேன். இவரைப் பற்றி சொல்லாமல் போனால் நான் ஒரு கெட்ட நாளில் குப்பை லாரியில் அடிப்பட்டு இறக்க நேரிடலாம். இயக்குனர் இவருக்கு வசனங்களே கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவரின் அந்த பெரிய இரண்டு கண்களே எக்கச்சக்கமாய் பேசுகின்றன. இவருடைய அந்த wonderful starring லுக் அனுஷ்காவிற்கு எல்லாம் அடித்து போட்டாலும் வராது.

    குவாட்டர் கட்டிங் படத்தில் காமெடி வில்லனாய் வந்த ஜான்விஜய் அதிகம்  பயமுறுத்துகிறார். தமிழ் சினிமாவில் பெரிய வில்லனாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது.

    இடைவேளை வரை படம் ஆங்கில படம் பார்க்கும் உணர்வை தருவதை உங்களால் தடுக்க முடியாது. நாயகன் இன்டர்வெல் period போய் கொண்டிருக்கும் போது கதையில் இண்டர்வெல் விடுவது, இயக்குனரின் கலை நயம்.

    இடைவேளைக்கு பிறகு திரைக்கதை கொஞ்சம் நீண்டாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. உமா ரியாஸின் கேரக்டர் சுவாரஸ்யத்தோடு பார்வையாளர்களை கொஞ்சம் திகிலடைய வைக்கவே அமைக்கப் பட்டுள்ளது. நடுவில் கொஞ்ச நேரம் காணாமல் போய் விடுகிறார்.

    படத்தின் இரண்டாம் பாதியும், கிளைமேக்சிலும் இன்னும் கொஞ்சம் வேலை செய்திருந்தால் ஒரு முழு நிறைவான படமாய் இருந்திருக்கும். நிஜத்தில் கெட்டவர்கள் தப்பு செய்து விட்டு வாழ்வதை நாம் பொறுத்துக் கொண்டாலும், சினிமாவில் அவர்கள் கண்டிப்பாய் தண்டிக்கப் படவேண்டும் என்று விரும்புவோம். கடைசியில் நாயகன் அந்த ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வரும் போது இயேசு கிறிஸ்து சிலையை டாப் வியுவில் காண்பிப்பதன் மூலமாக இயக்குனர் எதோ சொல்ல வருகிறார்.

    நமீதா டச்: மௌன குரு, Action Speaks.

    ஒரு தேர்ந்த திரைக்கதையுள்ள படம் பார்க்கிறோம் என்கிற உணர்வை வெகுமாதங்களுக்கு பிறகு உணர முடிகிறது.

    Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.



    http://girls-tamil-actress.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    ராஜபாட்டை - நமீதா விமர்சனம்

    - 0 comments


    ஒவ்வொரு முறை தியேட்டருக்கு செல்லும் போதெல்லாம் இடைவேளையில் இந்த படத்தின் ட்ரைலரை போட்டு கொண்டிருந்தார்கள். ட்ரைலர் சுமாராக இருந்தது. படம்???

    விக்ரமிற்கு அடுத்த உலக நாயகன் என்று தமிழ்நாட்டு மக்கள் தன்னை அழைக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கலாம். அதனால் தான் கமலைப் போல லூசு கேரக்டரில் தெய்வதிருமகனில் நடித்தார். இந்த படத்தில் தசாவதாரம் போல சில வித்தியாசமான கெட்டப் போட்டு தன ஆசையை கொஞ்சம் தனித்துள்ளார். ஒரு உலக்குக்கு ஒரு உலகநாயகன் போதும்பா! மனிதர்கள் வாழ முடிகிற வேறு உலகம் ஒன்று கண்டுபிடித்தால் பார்க்கலாம்.

    விஜயின் போக்கிரி படம் வந்த போது அதை விஜய் டிவியின் லொள்ளுசாபா நிகழ்ச்சியில் ஒரு பைட்டு ஒரு பாட்டு அடுத்து ஒரு பைட்டு ஒரு பாட்டு என்று திரும்ப திரும்ப போட்டு மரண கலாய் கலாய்த்தார்கள். அதனால் பிரச்சினையாகி கொஞ்ச நாளைக்கு லொள்ளு சாபா நிகழ்ச்சியையே போடவில்லை. அந்த வகையில் இது இன்னொரு போக்கிரி.



    விக்ரம் ஆகாயத்தில் பறக்கிறார். வில்லன்களும் பறக்கிறார்கள். பாரின் தெருக்களில் டான்ஸ் ஆடுகிறார். இப்படி நிறைய ஏதேதோ பண்ணுகிறார்.

    ஹீரோயின் விக்ரம் போடும் ஒவ்வொரு பைட்டையும் ஒரு ஓரமாய் நின்று பார்த்து வியக்கிறார். ரசிக்கிறார். பைட்டு முடிந்த பின் தொடை தெரிய துணி அணிந்து தன் பங்கை செவ்வனே செய்கிறார். அவ்வளவு தான். அந்த வில்லி ஆண்டி அழகாய் இருக்காங்க.

    இது மசாலா காமெடி படமாம். உங்களுக்கு காமெடி வரவில்லை என்றால் அட்லீஸ்ட் சந்தானத்தையாவது போட்டு தொலைச்சிருக்கலாம்ல. இயக்குனர், தான் முதலில் நல்ல படமாய் எடுத்து விட்டு மற்ற நடிகர்களையும் இயக்குனர்களையும் கலாய்க்க வேண்டும். இந்த மசாலா படத்தில் செண்டிமெண்ட் சீன் இல்லையா? என்று கேட்க வேண்டாம். கண்டிப்பாக இருக்கு. அனாதை குழந்தை ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை சில சீன்களில் காட்டி பேக்ரவுண்டில் சோக மியுசிக் அமைக்கப் பட்டிருக்கிறது.

    இசை யுவனாம். சொல்ல எதுவும் இல்லை. பாடல் வரிகள் யுகபாரதி மட்டுமே. இதில் இவர் ஈழ மக்களின் துன்பத்தை காதலில் ஏற்படும் துன்பத்திற்கு நிகராக வர்ணித்து எழுதிய பாடல் கிளப்பிய சர்ச்சை வேறு. அட ஒவ்வொரு பாடலும் என்ன வரிகள்? அந்த வார்த்தைகளை கல்வெட்டில் பொறித்து அதற்கு பக்கத்தில் அவரை உட்கார வைக்க வேண்டும்.

    நமீதா டச்: ராஜபாட்டை, ஒரு ஒஸ்தி படம்.

    இயக்குனர் புதுசாக எதோ முயற்சித்திருக்கிறார். கதை! திரைக்கதை! அட்டகாசம். போங்கடா!

    இந்த படத்தால் ஒரே ஒரு நல்ல விஷயம். மௌன குரு நல்ல ஹிட்டாக வாய்ப்பிருக்கு.

    இடைவேளையில் விளம்பரமாக போட்டு தள்ளுகிறார்கள். நிறைய சில்க்ஸ் அண்ட் நகை விளம்பரங்கள் தான். பெண்கள் படத்தை விட இந்த விளம்பரங்களைதான் சீட்டின் நுனியில் உட்கார்ந்து ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தார்கள். நீங்கள் உங்கள் மனைவியை கூட்டி சென்றால் இடைவேளை நேரம் வெளியே வந்து விடுங்கள்.



    http://girls-tamil-actress.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger