Sunday 18 March 2012

தமிழக அமைச்சரவை அவசரமாக கூடுகிறது : இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதம்.

- 0 comments
 

தமிழக அமைச்சரவை நாளை (மார்ச் 19) கூடுகிறது. வரிச் சலுகை மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதிக்கப்படுகிறது.தமிழக பட்ஜெட், 26ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த, முதல்வர் ஜெயலலிதா அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

பட்ஜெட்டில் வரிச் சலுகை மற்றும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர இருக்கிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக் கப்பட்டு தீர்மா னங்கள் நிறைவேற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

[Continue reading...]

பீகார் மாநில மக்கள் பிச்சை எடுக்க வெளியில் செல்வதில்லை-நிதிஷ்

- 0 comments
 
 
 
டெல்லியில் நேற்று நடந்த ஒரு பேரணியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதிஷ், 'எனது மாநில மக்களின் முயற்ச்சிகளை நான் பாராட்டுகிறேன். டெல்லி என்ற பெயர் அனைவருக்கும் சொந்தமானது. ஆனால், சில நேரங்களில் இங்கு கூறப்படும் நகைச்சுவை எங்களுக்கு துக்கத்தை தருகிறது' என்றார்.
 
\மேலும், 'பீகார் மாநில மக்கள் பிச்சை எடுக்க வெளியில் செல்வதில்லை. வெளியில் செல்லும் அவர்கள் கடினமாக உழைப்பார்கள். மேலும், நிலவில் ஏதாவது வேலை இருந்தாலும் பீகார் மாநில மக்கள் அங்கும் செல்லக்கூடியவர்கள். ஏனென்றால் நாங்கள் உழைப்பாளிகள். ஒரே ஒரு நாள் பீகார் மாநில மக்கள் தங்களுடைய வேலைகளை நிறுத்தினால் டெல்லியின் நிலைமை தலைகீழாக மாறிவிடும். பீகார் மாநிலத்தில் வேலைகள் இருந்தாலும் எனது மக்கள் வெளியில் தான் செல்வார்கள். இது எங்களுடைய உரிமை. இதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். யாரும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது, என்றும் நிதிஷ் கூறியுள்ளார்.



[Continue reading...]

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

- 0 comments
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாக் அணியின் தொடக்க ஆட் டகாரர்களான ஹபீஸ் 105 , நசீர் 112 யூனிஸ்கான் 52 ரன்களை விளாசினர்.இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை குவித்தது பாகிஸ்தான். இந்திய தரப்பில் பிரவீன் குமார் மற்றும் டின்டா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

330 ரன்கள் என்ற கடினமான இலக்கை கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் கவுதம் காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் பின்னர் சச்சினுடன் ஜோடி சேர்ந்த விராத் கோலி நிதானமாக ஆடினார். சச்சின் தனது அதிரடி ஆட்த்தை வெளிபடுத்தினார். கோலி மற்றும் சச்சின் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். சச்சின் 52 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிபடுத்த கோலி 97 பந்துகளில் சதத்தை எட்டினார்.தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராத் கோலி 148 பந்துகளில் 183 ரன்களை குவித்து இந்திய வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் 6 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
[Continue reading...]

தமிழ் அமைப்புகளுக்கு பயந்து மகிந்தரின் மகனுக்கு டில்லியில் சோனியா இசட் (Z ) பிரிவு பாதுக்காப்பு.

- 0 comments
 

போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் வழங்கப்படுகிறது.

அதற்காக டெல்லிக்கு வரும் ஜூனியர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என அவருக்கு சோனியா அரசு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.

[Continue reading...]

ஐ.நா. தீர்மானம் வெற்றி பெறுமா?: இலங்கைக்கு ஆதரவு 25, எதிர்ப்பு 22

- 0 comments
 
 
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது ராணுவம் போர் விதிமுறைகளை மீறி விடுதலைப்புலிகளையும், அப்பாவி தமிழர்களையும் கொன்று குவித்தது.
 
எனவே இலங்கை போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.
 
ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நார்வே, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா, ரஷியா உள்ளிட்ட நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.
 
ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.
 
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வருகிற 22-ந்தேதி (இந்திய நேரப்படி 23-ந்தேதி அதிகாலை) ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி இலங்கைக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு 22 நாடுகள் மட்டுமே ஆதரவு உள்ளது.
 
எனவே இலங்கை மீதான போர்க்குற்றம் தீர்மானம் வெற்றி பெறுமா? என கேள்விக்குறி எழுந்துள்ளது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி இறுதி கட்ட போரின் போது இலங்கை சிங்கள வெறி ராணுவத்தின் அட்டூழியங்களை வீடியோவாக வெளியிட்டது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
எனவே அமெரிக்காவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தீர்மானத்தை வெற்றிபெற செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக 100 சிறப்பு பிரதிநிதிகளை ஜெனீவா அனுப்பியுள்ளது.
 
அதே நேரத்தில் இலங்கையும் இந்த தீர்மானத்தை தோற்கடித்த பகீரத பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது. தனது பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அனுப்பி ஆதரவு திரட்டி வருகிறது.



[Continue reading...]

65 ஆயிரம் இளம்பெண்கள் விதவையாக மாற மத்திய அரசு தான் காரணம் : பத்மாவதி

- 0 comments
 

இலங்கையில் 65 ஆயிரம் இளம்பெண்கள் விதவையாக மாற மத்திய அரசு தான் காரணம்," என மாதர் தேசிய சம்மேளனத்தில் மாநில பொதுச்செயலாளர் பத்மாவதி தெரிவித்தார்.இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருவாரூர் மாவட்ட மகளிர் குழு சார்பில் மகளிர் தின விழா மற்றும் பொதுக்கூட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை எதிரில் நடந்தது. மாவட்ட தலைவர் மாலா தலைமை வகித்தார்.

முன்னாள் யூனியன் தலைவர் பாஸ்கரவல்லி, மாநில நிர்வாக்குழு உறுப்பினர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அம்புஜம் வரவேற்றார். மாதர் சம்மேளன மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பத்மாவதி பேசியபோது,

''உலகில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டு இருந்த நேரத்தில் தங்களுடைய சமத்துவ உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் பெற பெண்கள் கடும் போராட்டம் நடத்தினர்.

இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த வேளையில் அண்டை நாடான இலங்கையில் 1.30 லட்சம் அப்பாவி தமிழர்களை இந்திய அரசின் உதவியுடன் இலங்கை ராணுவம் படுகொலை செய்தது. இதில் 65 ஆயிரம் இளம்பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டனர். இதுபோன்ற பாதகச்செயலுக்கு மத்திய அரசு தான் காரணம்''என்று குற்றம்சாட்டி பேசினார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger