ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாக் அணியின் தொடக்க ஆட் டகாரர்களான ஹபீஸ் 105 , நசீர் 112 யூனிஸ்கான் 52 ரன்களை விளாசினர்.இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை குவித்தது பாகிஸ்தான். இந்திய தரப்பில் பிரவீன் குமார் மற்றும் டின்டா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
330 ரன்கள் என்ற கடினமான இலக்கை கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் கவுதம் காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் பின்னர் சச்சினுடன் ஜோடி சேர்ந்த விராத் கோலி நிதானமாக ஆடினார். சச்சின் தனது அதிரடி ஆட்த்தை வெளிபடுத்தினார். கோலி மற்றும் சச்சின் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். சச்சின் 52 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிபடுத்த கோலி 97 பந்துகளில் சதத்தை எட்டினார்.தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராத் கோலி 148 பந்துகளில் 183 ரன்களை குவித்து இந்திய வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் 6 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?