Saturday, 2 November 2013

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Shwetha Menon complaints to kollam collector

- 0 comments

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Shwetha Menon complaints to kollam collector

திருவனந்தபுரம், நவ. 2-

1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன்.

மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார்.

'சினேகிதியே', 'சாது மிரண்டா', 'நான் அவனில்லை-2', 'அரவான்' போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் ? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்' என்று ஸ்வேதா மேனன் கூறினார்.

ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார்.

கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger