Tuesday, 22 October 2013

“அரசியலே வேணாம், இனி வருஷத்துக்கு 2 படம் நடிக்கப் போறேன்” : விஜய் திடீர் முடிவு vijay special news

- 0 comments

"அரசியலே வேணாம், இனி வருஷத்துக்கு 2 படம் நடிக்கப் போறேன்" : விஜய் திடீர் முடிவு

"தனக்கு அரசியல் ஆசையே இல்லை என்றும், இனி வருஷத்துக்கு ரெண்டு படங்களில் நடிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்" நடிகர் விஜய்.

நடிகர் விஜய் புதுக்கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், அதற்காக சமீபத்தில் அவர் தனக்கு நெருக்கமான சிலருடன் கேரளாவில் ஆலோசனை நடத்தியதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீடியாக்கள் செய்திகளை கிளப்பி விட்டன.

ஆனால் தனக்கு அப்படி ஒரு ஆசையே இல்லை என்றும், இனி வருஷத்துக்கு ரெண்டு படங்களில் நடிக்கப் போவதாகவும் அவசர அறிக்கையில் சொல்லியிருக்கிறார் விஜய்.

இதுகுறித்து அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :

'சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் 'ஜில்லா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.

இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான்.

ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு விஜய் கூறியிருக்கிறார்.

'தலைவா'வுல ரொம்ப நொந்துட்டீங்களோ தலைவா….

The post

[Continue reading...]

கேளம்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியை கொலை: வேலைக்கார பெண்–கள்ள காதலன் கைது college professor murder servant lover arrest

- 0 comments

கேளம்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியை கொலை: வேலைக்கார பெண்–கள்ள காதலன் கைது college professor murder servant lover arrest

திருப்போரூர், அக். 22–

கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எப்சிபா (59) கல்லூரி பேராசிரியை.

இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் கிப்ட்சனுடன் தங்கி இருந்தார். கிப்ட்சன் மறைமலை நகரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 17–ந் தேதி இரவு கிப்ட்சன் வேலை முடித்து வீட்டிற்கு வந்த போது அறையில் எப்சிபா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகை, செல்போன், பீரோவில் இருந்த ரூ. 5 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் வீட்டில் வேலை செய்த அதே பகுதியை சேர்ந்த பிரமிளா, கள்ளக்காதலன் முருகனுடன் சேர்ந்து பேராசிரியை எப்சிபாவை நகை–பணத்திற்காக கொலை செய்தது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பிரமிளா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

கடந்த ஜனவரி மாதம் எப்சிபா மகனுடன் இங்கு குடியேறினார். அவர் வந்தது முதல் நான்தான் வீட்டு வேலைகளை செய்து வந்தேன்.

எனது கணவர் அன்புவை பார்ப்பதற்காக அவரது நண்பர் புதுப்பாக்கத்தை சேர்ந்த முருகன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்போது எங்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் ஜாலியாக இருந்து வந்தோம். இதனால் அதிகமாக செலவு ஏற்பட்டது. பணம் இல்லாமல் தவித்தோம்.

இந்த நிலையில் பேராசிரியை எப்சிபா அதிக நகை அணிந்து இருந்ததை கண்டேன். வீட்டில் பணமும் அதிகம் இருக்கும் என நினைத்தேன். அவற்றை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ கள்ளக்காதலன் முருகனிடம் கூறினேன்.

அவரும் கொலை செய்து நகை–பணத்தை கொள்ளையடிக்க ஒப்புக் கொண்டார். கடந்த 17–ந் தேதி காலை நான் வழக்கமாக வேலைக்கு சென்றேன். கதவை தட்டியதும் எப்சிபா கதவை திறந்து வீட்டிற்குள் சென்று விட்டார்.

அப்போது வெளியில் மறைந்து நின்ற முருகன் நைசாக சமையல் அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.

சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்ததை பார்த்த எப்சிபா நீ யார்? எப்படி உள்ளே வந்தாய் என அவரிடம் கேட்டார்.

உடனே நாங்கள் இருவரும் சேர்ந்து எப்சிபாவை தாக்கினோம். திமிறியதால் அவரது தலையை முருகன் சுவற்றில் மோதினார். இதில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனே நாங்கள் அவரது கழுத்தை நெரித்து கொன்றோம். எப்சிபா இறந்தது உறுதி செய்ததும் நகை மற்றும் பீரோவில் இருந்த பணத்தையும் திருடி சென்று விட்டோம்.

இவ்வாறு பிரமிளா கூறினார்.

கைது செய்யப்பட்ட முருகனுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பிரமிளாவுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

அவர்களிடமிருந்து 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மீட்கப்பட்டது.

...

shared via

[Continue reading...]

ஓடும் ரெயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் உயிர்தப்பிய அதிசயம் Baby born in train toilet survives miraculously

- 0 comments

ஓடும் ரெயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் உயிர்தப்பிய அதிசயம் Baby born in train toilet survives miraculously

கொல்கத்தா, அக்.23-

மேற்கு வங்காள மாநிலம், முர்ஷிதாபாத்தில் உள்ள ஜூம்கா கிராமத்தை சேர்ந்த அப்ரோசா பீவி என்பவர் தனது கர்ப்பிணி மகள் ரைஹானா பீவி என்பவருடன் லால்கோடா ரெயிலில் பயணமானார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் நாடியா மாவட்டம், பலாஷி நிலையத்தை ரெயில் நெருங்கும் போது கழிவறைக்கு சென்ற ரைஹானா பீவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, கழிவறைக்குள்ளேயே அவர் குழந்தையை பிரசவித்தார்.

நெடுநேரமாகியும் கழிவறைக்கு சென்ற மகள் வெளியே வராததால் கலக்கமடைந்த அப்ரோசா பீவி கழிவறைக்கு சென்று பார்த்தபோது பிறந்த குழந்தை கழிவறை பீங்கான் துளை வழியாக தொப்புள் கொடியுடன் தண்டவாளத்தில் தொங்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது.

பதறிப்போன அவர் பயணிகளிடம் விபரத்தை தெரிவித்து அபாய சங்கிலியை பிடித்திழுத்து ரெயிலை நிறுத்தவைத்தார்.

உதவிக்கு ஓடிவந்த பெண் பயணிகள் தண்டவாளத்தில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மேலே எடுத்து காப்பாற்றினர்.

பலாஷி ரெயில் நிலையத்திற்கு அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளதாக கூறிய டாக்டர்கள் பெரிய காயம் ஏதும் ஏற்படாமல் குழந்தை உயிர் தப்பியது அதிசயம்தான் என்றனர்.

...

shared via

[Continue reading...]

அபுதாபியில் மசூதிக்கு பின்னழகை காட்டி போஸ் கொடுத்த பாடகி ரிஹான்னா வெளியேற்றப்பட்டார் Rihanna ordered to leave UAE mosque for improper pose

- 0 comments

அபுதாபியில் மசூதிக்கு பின்னழகை காட்டி போஸ் கொடுத்த பாடகி ரிஹான்னா வெளியேற்றப்பட்டார் Rihanna ordered to leave UAE mosque for improper pose

அபுதாபி, அக்.23-

அபுதாபியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்றுள்ள பிரபல பாப் இசை பாடகி ரிஹான்னா அங்குள்ள உலகின் பெரிய மசூதி என கருதப்படும் ஷேக் சயித் கிராண்ட் மசூதி வாசலில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்.

கருப்பு நிற உடையில் பளபளக்கும் சிகப்பு நிற லிப் ஸ்டிக் மற்றும் நகப்பூச்சு அணிந்திருந்த அவர் மசூதியின் முன் வாசலை நோக்கி பின்னழகை காட்டியபடி படுத்தும், அமர்ந்தும், முதுகை காட்டியபடி நின்றும் போஸ் கொடுத்தார்.

இதனையறிந்த மசூதி நிர்வாகம் ரிஹான்னாவை மசூதிக்குள் அனுமதிக்காமல் அவரை உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

அநாகரிகமான வகையிலும், மரியாதை குறையான முறையிலும் மசூதி நிர்வாகத்தினரிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் மசூதியின் புனிதத் தன்மையை களங்கப்படுத்தும் வகையில் புகைப்டங்களுக்கு போஸ் கொடுத்ததால் அவர் வெளியேற்றப்பட்டார் என மசூதி நிர்வாகம் அறிவித்துள்ளது.

எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டா கிராம் மூலம் ரிஹான்னா வெளியிட்டுள்ளார். அவற்றை பாராட்டியும் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

...

shared via

[Continue reading...]

புற்றுநோய் சிறப்பு வார்டுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்த பிரியங்கா சோப்ரா Priyanka Chopra donated Rs 50 lakh to a special ward for cancer

- 0 comments

புற்றுநோய் சிறப்பு வார்டுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்த பிரியங்கா சோப்ரா Priyanka Chopra donated Rs 50 lakh to a special ward for cancer

மும்பை, அக். 22-

மும்பை புறநகரில் உள்ள நானாவதி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவை நடிகை பிரியங்கா சோப்ரா திறந்து வைத்தார். அப்போது தந்தையின் நினைவாக, புற்றுநோய் வார்டு கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.

பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் இறந்தார். எனவே, புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த தொகையை பிரியங்கா சோப்ரா வழங்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா சோப்ரா, தன் தந்தையின் மறைவை கண்ணீர்மல்க நினைவு கூர்ந்தார். அவருக்கு நேர்ந்ததுபோல் மற்ற யாருக்கும் ஏற்படக்கூடாது என்று கூறிய பிரியங்கா, இந்த புற்றுநோய் சிறப்பு மையத்துடன் இணைந்து செயல்படுவதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.

தேர்தலில் பிரச்சாரம் செய்தால் மக்களிடம் எப்படி வாக்கு கேட்பர்கள்? என்று நிருபர்கள் கேட்டபோது, "நான் பிரதமர் ஆனால், நாட்டில் ஊழலை அறவே ஒழிப்பேன் என்று மக்களிடம் வாக்கு கேட்பேன்" என்றார் பிரியங்கா.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger