ஓடும் ரெயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் உயிர்தப்பிய அதிசயம் Baby born in train toilet survives miraculously
கொல்கத்தா, அக்.23-
மேற்கு வங்காள மாநிலம், முர்ஷிதாபாத்தில் உள்ள ஜூம்கா கிராமத்தை சேர்ந்த அப்ரோசா பீவி என்பவர் தனது கர்ப்பிணி மகள் ரைஹானா பீவி என்பவருடன் லால்கோடா ரெயிலில் பயணமானார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் நாடியா மாவட்டம், பலாஷி நிலையத்தை ரெயில் நெருங்கும் போது கழிவறைக்கு சென்ற ரைஹானா பீவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, கழிவறைக்குள்ளேயே அவர் குழந்தையை பிரசவித்தார்.
நெடுநேரமாகியும் கழிவறைக்கு சென்ற மகள் வெளியே வராததால் கலக்கமடைந்த அப்ரோசா பீவி கழிவறைக்கு சென்று பார்த்தபோது பிறந்த குழந்தை கழிவறை பீங்கான் துளை வழியாக தொப்புள் கொடியுடன் தண்டவாளத்தில் தொங்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது.
பதறிப்போன அவர் பயணிகளிடம் விபரத்தை தெரிவித்து அபாய சங்கிலியை பிடித்திழுத்து ரெயிலை நிறுத்தவைத்தார்.
உதவிக்கு ஓடிவந்த பெண் பயணிகள் தண்டவாளத்தில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மேலே எடுத்து காப்பாற்றினர்.
பலாஷி ரெயில் நிலையத்திற்கு அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளதாக கூறிய டாக்டர்கள் பெரிய காயம் ஏதும் ஏற்படாமல் குழந்தை உயிர் தப்பியது அதிசயம்தான் என்றனர்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?