Showing posts with label மாலை மலர். Show all posts
Showing posts with label மாலை மலர். Show all posts

Monday, 18 February 2013

சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல

- 0 comments

அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த பெண், ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார்.
சிறுமியாக இருந்தபோது பல் துலக்குவது, தலை சீவுவது உள்ளிட்ட சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், இவற்றையெல்லாம் கடந்து பெரிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் வளர்ந்து வந்தார்.
14 வயதானபோது டைப்ரைட்டரில் கால் விரல்களால் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்து அசத்திய ஜெசிகா, கால்களால் காரை ஓட்டிக் காட்டி முறையான ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். தற்காப்பு கலையான டேக்வாண்டோவில் கறுப்பு பெல்ட்டை பெற்றுள்ள இவர், நீர் சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட எல்லா விளையாட்டுகளையும் கால்களால் மட்டுமே விளையாடி சராசரி மனிதர்களை வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளார்.
இவரது தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் பற்றி அறிந்த 16ம் போப் பெனடிக்ட், ஜெசிகாவை வாட்டிகன் அரண்மனைக்கு வரவழைத்து பாராட்டி ஆசி வழங்கியுள்ளார்.
எல்லாவற்றையும் விட, உச்சகட்ட சாதனையாக குறைந்த எடையுள்ள விமானத்தை கால்களால் இயக்கியபடியே 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, உலக அளவில் இந்த சாதனையை படைத்த ஒரே நபர் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்திலும் ஜெசிகா காக்ஸ் தனி இடம் பிடித்துள்ளார்.
வாழ்வின் உன்னத நிலையை அடைவதற்கு ஊனம் ஒரு தடையே அல்ல என்பதை செயல் வடிவில் நிரூபித்துள்ள இவர், உலகில் உள்ள 17 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, மாற்றுத் திறனாளிகளுக்கு மன வலிமையை ஊட்டும் வகையில் கருத்தரங்கங்களிலும் உரையாற்றியுள்ளார்.
தற்போது 30 வயதாகும் ஜெசிகா காக்ஸ், வாழ்வின் எஞ்சிய காலத்தில் மென்மேலும் பல சாதனைகளை படைத்து வரலாற்றில் இடம் பிடிப்பார் என அவரது நெருங்கிய தோழி ஒருவர் கூறுகிறார்

[Continue reading...]

Wednesday, 6 February 2013

அரசு விழாவில் பெண் கலெக்டரின் அழகை புகழ்ந்த மந்திரி

- 0 comments
உத்தரபிரதேச மாநிலத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி மந்திரிசபையில் காதி, கிராமத்தொழில்கள் துறையின் மந்திரியாக பதவி வகிப்பவர் ராஜாராம் பாண்டே (56 வயது). இவர் அங்கு சுல்தான்பூர் நகரில், கமலா நேரு தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டில் நடந்த அரசு விழாவில் (வேலையில்லா இளைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் விழா) தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 
 
 
விழாவில் மாவட்ட கலெக்டர் தனலட்சுமியும், திரளான கட்சித்தொண்டர்களும் கலந்து கொண்டனர். வேலையில்லா இளைஞர்களுக்கு காசோலைகளை வழங்கி பேசிய மந்திரி ராஜாராம் பாண்டேயின் பேச்சு திடீரென கலெக்டர் தனலட்சுமியின் மீது சென்றது. அவர், சுல்தான்பூர் மாவட்டத்தின் பொறுப்பு மந்திரியாக நான் இரண்டாவது தடவையாக ஆகி இருப்பதை தனிச்சிறப்பாக கருதுகிறேன்.
 
ஒவ்வொரு முறையும் நான் அழகான கலெக்டர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிற நல்வாய்ப்பினை பெறுகிறேன் என கூறினார். அத்துடன் நிறுத்தவில்லை. மேடையில் அமர்ந்திருந்த கலெக்டர் தனலட்சுமியை நோக்கி பார்த்தவாறு, இதற்கு முன்பாக இங்கே காமினி சவுகான் ரத்தன் கலெக்டராக இருந்தார்.
 
அவரைப் போன்ற ஒரு அழகி இருக்க முடியாது என்றுதான் நான் எப்போதுமே கருதி வந்தேன். ஆனால் இப்போதைய கலெக்டர் பதவி ஏற்றபோதே, இவர் அவரை விட அழகானவர் என்பதை உணர்ந்தேன். இவர் மிகவும் மென்மையாக பேசுகிறார். சிறந்த நிர்வாகியும்கூட என புகழ்ந்து தள்ளினார்.
 
இந்த பேச்சை அங்கே கூடி இருந்த கட்சி தொண்டர்களில் ஒரு பிரிவினர் ரசித்து கை தட்டினாலும்கூட, கலெக்டர் தனலட்சுமிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. மந்திரி அவரது அழகை வர்ணித்தபோது, முகத்தை கைகளால் மூடிக்கொண்டார்.
 
தொடர்ந்து, தனது முகத்தில் தோன்றுகிற உணர்ச்சி கொந்தளிப்பை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாது என்று கருதி முகத்தை பின்பக்கமாக திருப்பிக்கொண்டார். அரசு விழாவில் மாவட்ட கலெக்டரின் அழகை நாலாந்தர அளவுக்கு இறங்கி, மந்திரி ராஜாராம் பாண்டே வர்ணித்து பேசியது, சமாஜ்வாடி கட்சி தொண்டர்களில் ஒரு பிரிவினரிடையேயும், பொதுமக்களிடையேயும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
அரசு விழாவில் அநாகரிகமாக நடந்து கொண்ட மந்திரி ராஜாராம் பாண்டே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி ஆளும் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வான ரவிதாஸ் மஹ்ரோத்ரா கருத்து தெரிவிக்கையில், மந்திரி பாண்டே நடந்துகொண்ட விதம், கட்சிக்கும், அரசுக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என கூறினார். 
[Continue reading...]

வாரத்தில் 20 மணி நேரத்துக்கு மேல் டி.வி.பார்த்தால் ஆண்களின் உயிரணு குறையும் tv watch 20 hours gents cell decrease

- 0 comments
பொழுதுபோக்கு அம்சங்களில் டெலிவிஷன்கள் (டி.வி) பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே பெரும்பாலானோர் டி.வி.யே கதி என கிடக்கின்றனர். அவ்வாறு தொடர்ந்து பார்ப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.


குறிப்பாக வாரத்துக்கு 20 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து டி.வி.பார்க்கும் ஆண்களின் உயிரணு (விந்தணு) எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அவர்கள் குழந்தை பெறும் வாய்ப்பை இழந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் 15 மணி நேரத்துக்கு மேல் உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை 73 சதவீதம் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் இங்கிலாந்தில் இருந்து ஸ்போர்ட்ஸ் மெடிசின் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் உயிரணு குறையும் பிரச்சினை இந்தியாவில்தான் அதிகம் உள்ளது. 79 சதவீதம் ஆண்களும், 83 சதவீதம் பெண்களும் உடல் ரீதியாக பலவீனமாகவும் உள்ளனர். 51 சதவீதம் ஆண்களும், 48 சதவீதம் பெண்களும் அதிக கொழுப்பு சத்துமிக்க உணவை சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்து கொள்கின்றனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
[Continue reading...]

Tuesday, 5 February 2013

+2, எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை நடக்கும் 2 ஆயிரம் பள்ளிகளில் ஜெனரேட் வசதி

- 0 comments
தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு மாணவ - மாணவிகள் தயாராகி வருகிறார்கள். பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவர்களும், ஒரு லட்சம் தனித் தேர்வர்களும் எழுதுகிறார்கள்.  

இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சம் மாணவர்களும் ஒரு லட்சம் தனித் தேர்வர்களும் என மொத்தம் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

பொதுத்தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை செய்து வருகிறது. தமிழகம் முழு வதும் 2000 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாளை மாற்றி எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிப்பதோடு கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை உயர் அதிகாரி கூறினார்.

தேர்வு கூடங்களில் கண்காணிப்பாளர்கள், மாணவர்களை கண்காணித்தாலும்கூட பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். மின்சாரத்தடை தமிழகம் முழுவதும் பரவலாக இருந்து வரும் நிலையில், அதனால் மாணவர்களின் தேர்வு பாதிக்கக்கூடாது என்பதற்காக கடந்த ஆண்டைபோல இந்த வருடமும் ஜெனரேட்டர் வசதி அனைத்து தேர்வு மையங்களுக்கும் அளிக்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வுசெய்து அதற்கேற்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து தேர்வு மையங்களில் அமைத்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களும் ஜெனரேட்டர் வசதி தொடர்ந்து அளிக்கப்படவும் மின்சாரத்தடையினால் தேர்வு எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் 2000 தேர்வு மையங்களிலும் ஜெனரேட்டர் வசதியை அதிகாரிகள் முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதற்கான செலவினத்தை அரசு தேர்வுத்துறை ஏற்கும்.

பொதுத் தேர்வு தொடங்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களிடம் மின்தடை ஏற்படும் நேரம் குறித்து தகவல் திரட்டி வருகிறார்கள்.

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரத் தடை இருப்பதனால் தேர்வு நடைபெறும் நேரத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள் எவை எவை என கண்டறியப்பட்டு அதற்கேற்ப ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து அமர்த்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger