Wednesday, 2 October 2013

160 கோடி பேருடன் 2050 ல் மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் India to emerge as populous country of world in 2050

- 0 comments

160 கோடி பேருடன் 2050 ல் மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் India to emerge as populous country of world in 2050
Tamil NewsYesterday, 05:30

பாரிஸ், அக்.3-

2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை அப்போது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 970 கோடியாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்து தற்போது 710 கோடியாக உள்ளது.

இதில் 130 கோடி பேர் சீனாவிலும், 120 கோடி பேர் இந்தியாவிலும் உள்ளனர். அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தவர்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
...
Show commentsOpen link

[Continue reading...]

பகிருங்கள்... உதவுங்கள் ... please help share your friends

- 0 comments

பகிருங்கள்... உதவுங்கள் ...
by Marikumar

சுதா.... அன்பு தோழி.. பழைய அலுவலக நண்பணின் மனைவியும் கூட .. புன்னகை பூ ..ஓயாமல் சிரிப்பவள்.. எப்போது சென்றாலும் சாப்பாட்டில் அன்பையும் சேர்த்து சமைத்து பரிமாறுபவள்... எனக்கொரு பிரச்சினை வந்த போது சளைக்காமல் போனில் , நேரில் என ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தவள்... அவளுக்கும் கணவனுக்கும் ஏதோ மனஸ்தாபம் வந்தபோது இரு வருடமாக என்னிடம் என் நண்பனை குறை கூற பயந்து தன்னை ஒளித்து கொண்ட நாகரீகம் தெரிந்தவள் ...

இத்தனை நாளுக்கு பின் என் நண்பனிடமிருந்து போன்.. சுதா மிகவும் கவலைக்கிடம் என்று செய்தி வர ஓடோடி சென்றோம்... புன்னகை அழகி இருபத்தெட்டு வயது பெண் பத்துவயது பெண் போன்ற உருவில் ஒரேயடியாக உருமாறி கட்டிலோடு ஓட்டிக்கிடந்தாள்... இரண்டு சிறுநீரகமும் பழுது அடைந்து விட்டது ... டாக்டர்கள் கை விரிக்க அரசு மருத்துவமனையின் ஒரு மூலையில் கிடந்தாள் ...

நெஞ்சே வெடித்து விட்டது .. மனது பெரும்பாரமாகிவிட்டது .. அப்பாவி பெண்ணுக்கு கடவுள் தந்த பரிசை காணும்போது கடவுளையே திட்ட தோணுகிறது .... இன்னமும் பாதி நேரம் நினைவில்லாமல் இருப்பவள் நினைவு திரும்பியவுடன் நம்பிக்கையோடு சொல்கிறாள்...

" சாகவெல்லாம் மாட்டேண்டா... கண்டிப்பா திரும்ப வருவேன் " எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்.. ஆனால் அவள் உடல்நிலை மிக கவலைக்கிடம் ... நம்பிக்கையே நல்லது... எறும்புக்கும் வாழ்வு உள்ளது என்பதை அவளுக்கு நாம் கொஞ்சமாவது கருணை காட்டலாமே...

பிளீஸ் நண்பர்களே.. அவளுக்கு சிறுநீரகம் தர ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிரார், அதற்க்கான செலவுகள் சுமார் பத்து லட்சம் போல ஆகுமாம் ..எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்துவிட்டு வந்தோம் ...

எத்தனையோ நண்பர்கள் எவ்வள்வோ செலவு செய்கிறோம்.. ஒவ்வொருவரும் ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் கூட அவள் உயிர் பிழைப்பாள். உங்களால் முடிந்தவர்கள் அவள் அக்கவுண்டுக்கு சிறு தொகை அனுப்பி உதவுங்கள்..

நன்றி உள்ளங்களே.. எல்லோரும் வேண்டுங்கள் .. மனிதனே தெய்வம்.. அவனை விட உதவ தெய்வம் யாருமில்லை. அன்பே சிவம்..

Name : D.Sudha

Her account no : 170901000005513

Bank : Indian Overseas Bank ( Rathinapuri branch, Coimbatore )

IFSC code : IOBA0001709 Contact : Aasaithambi (HUsband),

Ph: 9894135368 Mr. Aasai thambi H/O Sudha, 28, Krishnaraj Colony, Siddha Thottam, Ganapathy, Coimbatore - 6410066

Hospital Name: Sthyam Kidney care center

Hospital Phone: 0422 2400401

தமிழால் இணைவோம்

Nagaraj Sweet

Source: Facebook
Share |

Show commentsOpen link

[Continue reading...]

மேலாடையின்றி அரை நிர்வாணமாக கியூபெக் சட்டமன்றத்தில் பெண்கள் புகுந்ததால் பரபரப்பு ! Melodai illamal nirvana qeue

- 0 comments

மேலாடையின்றி அரை நிர்வாணமாக கியூபெக் சட்டமன்றத்தில் பெண்கள் புகுந்ததால் பரபரப்பு !!
by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

பொது இடங்களில் மத அடையாளங்களை தடை செய்யும் வகையில் கியூபெக் அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி வரும் நிலையில் இன்று இதற்கு எதிரான நூதன ஆர்ப்பாட்டம் ஒன்று கியூபெக் சட்ட சபையிலும் எதிரொலித்தது.

மத அடையாளம் ஒன்றை சுவரில் வைக்கப்பட்டு இருந்ததை எதிர்த்து  சில பெண்கள் கோஷமிட்டுக் கொண்டே  கியூபெக் சட்ட   மன்றத்தில் புகுந்தனர்.  அப்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது. வரி தொடர்பான சில கேள்விகளுக்கு கியூபெக் முதல்வர் Pauline Marois பதிலளித்துக் கொண்டிருந்தார்.

கேள்வி நேரத்தின் போது முதல்வரை பேச விடாமல் ஆக்ரோசமாக கத்திய இந்தப் பெண்கள் திடிரென தங்கள் மேலாடைகளை கழற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிராக மத அடையாளங்களை பொது இடங்களில் பயன்படுத்த தடைச் சட்டம் கொண்டு வந்துள்ள அரசு, சட்டமன்றத்தில் மட்டும் மத அடையாளங்களை பயன்படுத்தலாமா என்பதே ஆர்ப்பாட்டம் செய்த பெண்களின் கேள்வி.

உடனடியாக சட்டமன்ற சுவரில் தொங்க விடப்பட்டிருந்த மத அடையாளம்  நீக்கப்பட வேண்டும் என்றும் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் கியூபெக் சட்டசபையில் இருந்த அனைவரையும் திகைப்புக்கு உள்ளாக்கியது. பின்னர் இந்த பெண்கள் பாதுகாப்பு போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

கியூபெக் அரசின் மதச்சார்பின்மை அணுகுமுறை மத  சம்பந்தமான பொருட்கள் வைப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கியூபெக் கலாச்சாரத்தின்படி பெரிய சிலுவையையோ மற்ற குறியீடுகளையோ வைத்திருப்பது சாதரணமான ஒன்று.

எனினும் இந்த சம்பவம் எந்த மத அடையாளத்தையும் இனி   பொது இடங்களில் பயன்படுத்த முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

 

The post மேலாடையின்றி அரை நிர்வாணமாக கியூபெக் சட்டமன்றத்தில் பெண்கள் புகுந்ததால் பரபரப்பு !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த 8 பேர் கும்பல் young girl going house relatives torture 8 gang in mumbai

- 0 comments

உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த 8 பேர் கும்பல் young girl going house relatives torture 8 gang in mumbai
Tamil NewsToday,

மும்பை, அக். 2–

மராட்டிய மாநிலம் தேதார்கான் அணை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் இளம் பெண்ணை நடுவழியில் மறித்து நிறுத்தி அருகில் உள்ள அணை பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு 4 பேரும் மாறி மாறி கற்பழித்தனர். அவர்கள் இளம் பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதல் இளம் பெண்ணை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் இன்டர்நெட்டில் பரவ விடுவதாக மிரட்டினார்கள். பின்னர் தப்பி விட்டனர்.

அதன்பிறகு இளம் பெண் தட்டுத்தடுமாறி வீட்டுக்கு நடந்து வந்த போது அந்தப் பக்கமாக 4 தொழிலாளர்கள் வந்தனர். இளம் பெண் தனியாக வருவதைப் பார்த்த அவர்களும் தூக்கிச் சென்று கற்பழித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். பின்னர் கற்பழிப்பில் ஈடுபட்ட 4 தொழிலாளர்களும் பிடிபட்டனர். 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

அவமானப்படுதப்பட்ட சூப்பர் ஸ்டார் super star rajini news

- 0 comments

சூப்பர் ஸ்டார் அவமானப்படுதப்பட்டார்,நண்பர்களிடம் மனக்குமுறல்
by abtamil
Tamil newsToday

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
நான்கு நாட்கள் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா கிளப்பியுள்ள சர்ச்சைகள், கசப்புணர்வுகள், அடுத்த ஆட்சி மாற்றம் நிகழும் வரை நீடிக்கும் போலிருக்கிறது.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களை அழைத்து அவமானப்படுத்தியதும், கருணாநிதி, ரஹ்மான் போன்றவர்களை அழைக்காமல் அவமதித்ததும் தமிழ் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

ரஜினியை கடைசி வரிசையில் கடைசி நாற்காலியில் உட்கார வைத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி பெரும் வருத்தமும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அவமரியாதை குறித்து, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம், 'விழாவிற்கு நான் சென்றிருக்கக் கூடாது. ஃபிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் போயிருந்தேன். அது தவறாகிவிட்டது. ரொம்ப ரொம்ப அவமானப்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு கலைஞனும் இந்த விழாவில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான்', என்று தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மற்ற கலைஞர்கள் தங்கள் வேதனையைக் கூட வெளிப்படுத்த முடியாத சங்கடத்தில் உள்ளனர்.

Show commentsOpen link

[Continue reading...]

உண்ணாவிரத போராட்டம் நடத்த வந்த குமரிஅனந்தன் கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம் demonstration protest toilet fall kumari anandan head injured

- 0 comments

உண்ணாவிரத போராட்டம் நடத்த வந்த குமரிஅனந்தன் கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம் demonstration protest toilet fall kumari anandan head injured
Tamil NewsToday,

தர்மபுரி, அக். 2–

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவில் அமைக்க கோரி இன்று காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து ரெயில் மூலம் தர்மபுரி மாவட்டம் மொரப்பூருக்கு வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் வந்த அவர் தர்மபுரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார். பின்னர் அவர் நள்ளிரவு வரை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார். நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு திடீரென காய்ச்சலும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.

இதற்காக குமரிஅனந்தன் எழுந்து கழிவறைக்கு சென்றார். அப்போது அவர் வழுக்கி தவறி கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குமரிஅனந்தன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் இன்று நடக்க இருந்த உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு ஒரு நாள்தேதி அறிவிக்கப்பட்டு உண்ணா விரதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிஅனந்தன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவல் தெரியவந்ததும் ஏராளமான காங்கிரசார் திரண்டு வந்தனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

படு கவர்ச்சி’யாக ஹன்ஷிகா - தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு hansika so sexy movie

- 0 comments

படு கவர்ச்சி'யாக நடித்திருப்பதால் பட ரிலீஸை எதிர்க்கிறார்… : ஹன்ஷிகா மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, 09:42
ஒரு பாடல் காட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருப்பதால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய எதிர்க்கிறார் என்று ஹன்ஷிகா மோத்வானி மீது குற்றம் சாட்டியிருக்கிறார் படத் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி.

சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரித்து கொண்டிருக்கும் "ரவுடி கோட்டை"படத்தை தமிழில் திரையிட அனுமதிக்க கூடாது என்று ஹன்சிகா மோத்வானி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது. அதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :

தெலுங்கில் வெளியான "சீதாராமகல்யாணம் லங்கலோ" என்ற படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர் வெல்கார் எண்டர்பிரைசஸ்,விஜய்மல்லா பிரசாத் என்பவரிடமிருந்து வாங்கினேன் படத்தின் மொழிமாற்றம் மற்றும் அனைத்து வேலைகளையும் முடித்து "ரவுடி கோட்டை" என்ற பெயரில் திரையிட முடிவான நேரத்தில் இது மாதிரி ஒரு புகார் குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

நடிகை ஹன்சிகாவுக்கும் தெலுங்கு பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டோம்.

அதற்கு அவர் ஹன்சிகா சொல்லவது மாதிரி தெலுங்கை தவிர வேறு எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்ய கூடாது என்று ஒப்பந்தம் எங்களுக்குள் எதுவும் இல்லை. வாய்மொழியாகக் கூட அவர் கேட்கவும் இல்லை. நாங்களும் வாய்மொழியாக கூட ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறினார்.

அப்படி ஹன்சிகா தடை கேட்டோ, வழக்கு தொடர்வதாகவோ இருந்தால் தெலுங்கு பட அதிபர் மீது தான் தொடர வேண்டும். எங்கள் மீது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது. இதை ஹன்சிகாவுக்கும் அவர் சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
மேற்படி ஹன்சிகா நடிகர் சங்கத்தில் எங்கள் மீது எடுத்த நடவடிக்கையை விலக்கி கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஹன்சிகா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நேரிடும்.

ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் ஹன்சிகா தான் ஏற்க வேண்டும் என்றார் எஸ். சுந்தரலட்சுமி.

இதுபற்றி இந்த படத்தின் தமிழாக்கம் பொறுப்பேற்று இருக்கும் எ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது :

"ரவுடி கோட்டை" படத்தில் ஹன்சிகா "இச் இச் இச் "என்ற ஒரு பாடல் கட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதனால் பயந்து போய் ஹன்சிகா தடை கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.

Show commentsOpen link

[Continue reading...]

சென்னையில் தினமும் 4 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது chennai daily rowdy on gunder law

- 0 comments

சென்னையில் தினமும் 4 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது chennai daily rowdy on gunder law
Tamil NewsToday, 05:30

சென்னை, அக். 2–

சென்னையில் குற்றங்களை குறைக்க போலீஸ் அதிகாரிகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக, பழைய ரவுடிகள், ஜெயிலில் விடுதலையாகி வெளியே வரும் ரவுடிகள், தலைமறைவு ரவுடிகள், புது ரவுடிகள் என 4 வகையாக பட்டியல் எடுத்து அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

இதில் பிடிபடும் ரவுடிகளில் தினமும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு 1000 ரவுடிகளுக்கு மேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் நகரில் குற்றங்கள் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் வடசென்னையில்தான் அதிகமான ரவுடிகள் பிடிபட்டுள்ளதாகவும், காக்கா தோப்பு பாலாஜி வெங்கடேசன், கட்டராஜா, குன்றத்தூர் வைரம் உள்பட 15 ரவுடிகள் கோர்ட்டில் சரண் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

காக்கா தோப்பு பாலாஜி மீது 4 கொலை உள்பட 40 வழக்குகளும் குன்றத்தூர் வைரம் மீது 11 வழக்குகளும், உள்ளன.

பெரிய ரவுடிகள் மட்டு மின்றி வழிப்பறியில் ஈடுபடுபவர்கள், பெண்களிடம் தங்க செயின் பறிக்கும் மோட்டார் சைக்கிள் கொள்ளையர், வீடு புகுந்து திருடுபவர்கள் பலர் சிறையில் உள்ளதால் நகரில் குற்றங்கள் குறைந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குண்டர் சட்டத்தில் சிறைக்கு செல்லும் ரவுடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வழிப்பறி மட்டுமின்றி அடி–தடி வெட்டு குத்து சம்பவங்களும் குறைந்து வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger