Wednesday, 2 October 2013

உண்ணாவிரத போராட்டம் நடத்த வந்த குமரிஅனந்தன் கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம் demonstration protest toilet fall kumari anandan head injured

உண்ணாவிரத போராட்டம் நடத்த வந்த குமரிஅனந்தன் கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம் demonstration protest toilet fall kumari anandan head injured
Tamil NewsToday,

தர்மபுரி, அக். 2–

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவில் அமைக்க கோரி இன்று காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து ரெயில் மூலம் தர்மபுரி மாவட்டம் மொரப்பூருக்கு வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் வந்த அவர் தர்மபுரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார். பின்னர் அவர் நள்ளிரவு வரை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார். நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு திடீரென காய்ச்சலும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.

இதற்காக குமரிஅனந்தன் எழுந்து கழிவறைக்கு சென்றார். அப்போது அவர் வழுக்கி தவறி கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குமரிஅனந்தன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் இன்று நடக்க இருந்த உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு ஒரு நாள்தேதி அறிவிக்கப்பட்டு உண்ணா விரதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிஅனந்தன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவல் தெரியவந்ததும் ஏராளமான காங்கிரசார் திரண்டு வந்தனர்.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger